• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us
Tamil2daynews
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
Tamil2daynews
No Result
View All Result
Home சினிமா சினிமா செய்திகள்

“ராக்கெட்ரி” படத்திற்காக இசையமைப்பாளர் சாம் CS  இசையமைப்பில் மேசிடோனியன் சிம்பொனி ஆர்க்கெஸ்ட்ரா குழுவின் இசை ! 

by Tamil2daynews
October 5, 2020
in சினிமா செய்திகள்
0
“ராக்கெட்ரி” படத்திற்காக இசையமைப்பாளர் சாம் CS  இசையமைப்பில் மேசிடோனியன் சிம்பொனி ஆர்க்கெஸ்ட்ரா குழுவின் இசை ! 
0
SHARES
9
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp
இசையமைப்பாளர் சாம் CS தனது இணையற்ற புலமையால் இசையுலகில் மிக நேர்த்தியான இசையை தந்து வருகிறார். சமீபத்திய பல படங்களில் அவரது இசை பெரும் பாரட்டுக்களை குவித்து வருகிறது. அவர் தற்போது கோலிவுட்டை தாண்டி பாலிவுட் மற்றும் நமது அண்டை மாநில மொழி திரைப்படங்களிலும் தேடப்படும் இசையமைப்பாளராக இருந்து வருகிறார். தற்போது இவர் மாதவன் பன்மொழியில்  உருவாக்கி வரும்,  முக்கிய படைப்பான ராக்கெட்ரி படத்திற்கு இசையமைத்து வருகிறார். நடிகர் மாதவன் இயக்கத்தில் உண்மை சம்பவங்களை அடிப்படையாக வைத்து உருவாகி வரும், இப்படத்தின் மீது பெரும் எதிர்ப்பார்ப்பு இருந்து வருகிறது. அதற்கு முக்கிய காரணங்களில் ஒன்றாக இசையமைப்பாளர் சாம் CS இசையும் இருந்து வருகிறது.
தமிழ் சினிமாவில் முன்னெப்போதும் இல்லாத வகையில் இசையமைப்பாளர் சாம் CS இப்படத்திற்காக 100 பீஸ் ஆர்க்கெஸ்ட்ரா அடங்கிய இசைத் தொகுப்பை ப்ரத்யேகமாக இப்படத்தின் பின்னணி இசைக்காக உருவாக்கியுள்ளார். மேசிடோனியன் சிம்பொனி ஆர்க்கெஸ்ட்ரா குழுவால் இந்த இசைத்தொகுப்பு உருவாக்கப்பட்டிருக்கிறது.
இது குறித்து இசையமைப்பாளர் சாம் CS  கூறியதாவது…
மதிப்புமிக்க,  மிக முக்கியமான, ஒரு பெரும்படைப்பில் வேலை செய்ய வேண்டுமென்பது எனது நெடுநாளைய கனவாக இருந்தது.ராக்கெட்ரி அதை நனவாக்கியுள்ளது. இது சாதாரணமான படம் இல்லை மிகவும் உணர்பூர்வமான படைப்பு. மேலும் இது உலக தரத்தில் உருவாகும் படம் ஆகும். ஆதலால் நான் இப்படத்திற்கு மிகச்சிறந்த இசையை, பெரும் தரத்துடன் உருவாக்க நினைத்தேன். மேசிடோனியன் சிம்பொனி ஆர்க்கெஸ்ட்ரா குழுவை,  இப்படத்திற்கு பயன்படுத்த அனுமதி தந்த தயாரிப்பாளருக்கு இந்நேரத்தில் நன்றி சொல்லிக்கொள்கிறேன். பல தமிழ், பாலிவுட் மற்றும் அண்டை மாநில மொழி படங்களில் தற்போது பணிபுரிந்து வருகிறேன் ஆனால் “ராக்கெட்ரி” பெரும் படைப்பாக, பன்மொழியில் இந்தியா முழுதும் எதிர்பார்ப்பை உருவாக்கும் உலகத்தரமான படைப்பாக இருக்கும். இதில் உலகளவில் பணிபுரியும் புகழ் மிக்க நடிகர்கள் பங்கேற்றுள்ளார்கள். இப்படத்தின் ஒவ்வொரு இழையும் எனக்கு இசையில் பெரும் பொறுப்புணர்வை தந்திருக்கிறது. அதனை என் உயிராய் மதித்து இசையை தந்திருக்கிறேன். ரசிகர்கள் அதனை கொண்டாடுவார்கள் என நம்புகிறேன்.
Previous Post

இயக்குனர் ஷங்கர் வெளியிட்ட கபிலன்வைரமுத்துவின் அம்பறாத்தூணி 

Next Post

” சிம்டாங்காரன் ” படத்தின் டிரைலரை வெளியிட்டார் அறம் இயக்குனர் கோபி நயினார்

Next Post
” சிம்டாங்காரன் ” படத்தின் டிரைலரை வெளியிட்டார் அறம் இயக்குனர் கோபி நயினார்

" சிம்டாங்காரன் " படத்தின் டிரைலரை வெளியிட்டார் அறம் இயக்குனர் கோபி நயினார்

Popular News

  • ‘அன்பில் அவன்’ படத்தின் இரண்டாவது சிங்கிள் “கல்லா நிக்கிறியே” பாடல் வெளியானது !!

    0 shares
    Share 0 Tweet 0
  • துருவ் விக்ரம் நடிக்கும் புதிய படம் ‘ஜாக்கி – நோ ரீடேக்ஸ் அலவுட் (Jackie – No Retakes Allowed) ’!!

    0 shares
    Share 0 Tweet 0
  • இந்திய ரசிகர்களுக்கு மிகப்பிடித்த ஃபேமிலி திரில்லர் திரைப்படமான ‘த்ரிஷ்யம் தி கன்குலூஷன்’ (Drishyam The Conclusion) அக்டோபர் 2 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது!

    0 shares
    Share 0 Tweet 0
  • ‘என்ன விலை’ திரைப்படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா!

    0 shares
    Share 0 Tweet 0
  • KRG கண்ணன் ரவியின் பிரம்மாண்ட தயாரிப்பில் கவுதம் ராம் கார்த்திக் கூட்டணியில் உருவாகும் புதிய படத்தின் படப்பிடிப்பு துவக்கம்!

    0 shares
    Share 0 Tweet 0

Recent News

செப்டம்பர் 24-இல் வெளியாகிறது! நேச்சுரல் ஸ்டார் நானியின் ‘தி பாரடைஸ்’ – டிரெய்லர் இன்றி புதிய முயற்சி

September 14, 2026

‘அன்பில் அவன்’ படத்தின் இரண்டாவது சிங்கிள் “கல்லா நிக்கிறியே” பாடல் வெளியானது !!

September 14, 2026

“ரசிகர்களின் எதிர்பார்ப்பை எகிறவைக்கும் கிரைம் த்ரில்லர்…” ; ‘பீப்’ படம் குறித்து மனம் திறந்த நடிகர் ராகவ்!

September 14, 2026

அரசியலும், சமூக அக்கறையும் சேர்ந்து உருவாகியுள்ள படம் “ஆகாயம் ” தினந்தோறும் நாகராஜ் இயக்கியுள்ளார்.

September 14, 2026

துருவ் விக்ரம் – ரமேஷ் வர்மா கூட்டணியில் உருவாகும் தமிழ்–தெலுங்கு இருமொழி ஆக்‌ஷன் படம்

September 14, 2026

‘தி டார்க் ஹெவன்’ திரைப்பட வெளியீட்டுக்கு முந்தைய அறிமுக விழா!

September 14, 2026
  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2025 Tamil2daynews.com.

error: Content is protected !!
No Result
View All Result
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்

© 2025 Tamil2daynews.com.