• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us
Tamil2daynews
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
Tamil2daynews
No Result
View All Result
Home சினிமா சினிமா செய்திகள்

மெல்போர்ன் இந்தியத் திரைப்பட விழாவில், “கிடா” திரைப்படம்!!

by Tamil2daynews
July 13, 2023
in சினிமா செய்திகள்
0
0
SHARES
10
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

மெல்போர்ன் இந்தியத் திரைப்பட விழாவில், “கிடா”  திரைப்படம்!! 

 

சர்வதேச விழாக்களில் கவனம் ஈர்க்கும் கிடா திரைப்படம் மெல்போர்ன் இந்தியத் திரைப்பட விழாவில் திரையிடப்படவுள்ளது !!

ஶ்ரீ ஸ்ரவந்தி மூவீஸ் நிறுவனம் சார்பில் ஸ்ரவந்தி ரவி கிஷோர், கிருஷ்ண சைத்தன்யா தயாரிப்பில், அறிமுக இயக்குநர் ரா.வெங்கட்  இயக்கத்தில்,  பூ ராமு, காளி வெங்கட் முதன்மை பாத்திரத்தில் உருவாகியுள்ள கிடா (Goat)  திரைப்படம். வாழ்வியலை அழகாகச் சொல்லும்  ஒரு அழுத்தமான கலைப்படைப்பாக உருவாகியுள்ள இப்படம் சர்வதேச விழாக்களில் கவனம் ஈர்த்து வருகிறது,

சமீபத்தில், இந்தியன் பனோரமா மற்றும் சென்னை சர்வதேச திரைப்பட விழாவில் பெரும் வரவேற்பைப் பெற்ற இப்படம்,  ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் நகரில் ஆகஸ்ட் 11 to 20 வரை  நடக்கும் 14th Indian film festival of Melbourne என்ற திரைப்பட விழாவில் திரையிடத் தேர்வு செய்யப்பட்டுள்ளது.

கிடா திரைப்படத்தில் பூ ராமு, காளி வெங்கட் முதன்மை பாத்திரத்தில் நடித்துள்ளனர். மதுரை அருகே உள்ள கிராமத்தில் வாழும் ஒரு சிறுவனுக்கும், அவனது தாத்தாவிற்கும் மற்றும் ஒரு ஆட்டுக்கும் உள்ள உறவுப்பிணைப்பை சொல்லும் படமாக இப்படம் உருவாகியுள்ளது. இன்னும் திரைக்கு வராத நிலையில் உலகம் முழுக்க பல  திரைப்பட விழாக்களில்,  இப்படத்திற்கு  உட்சபட்ச பாராட்டுக்கள் கிடைத்து வருவது குறிப்பிடத்தக்கது.

உலகம் முழுக்கவுள்ள திரை ரசிகர்களைக் கவர்ந்துள்ள இப்படம், தமிழக ரசிகர்களைக் கவரும் வகையில் விரைவில் திரைக்குவரவுள்ளது.

பூ ராமு, காளிவெங்கட், மாஸ்டர் தீபன், பாண்டியம்மா, லோகி, கமலி, ஆகியோர் முக்கிய பாத்திரங்களில் நடித்துள்ளனர்.

தொழில் நுட்ப குழு விபரம் 
ஆடியோகிராஃபி – தபஸ் நாயக்
கலை இயக்கம் : K.B.நந்து
பாடல்கள் :  ஏகாதசி
எடிட்டர்  : ஆனந்த் ஜெரால்டின்
இசை : தீசன்
ஒளிப்பதிவு  : M.ஜெயப்பிரகாஷ்
தயாரிப்பு : ஶ்ரீ ஸ்ரவந்தி மூவீஸ்
தயாரிப்பாளர் : ஸ்ரவந்தி ரவி கிஷோர், கிருஷ்ண சைத்தன்யா
இயக்கம்  : ரா. வெங்கட்
Previous Post

விஜய் தேவரகொண்டா மற்றும் சமந்தாவின் ‘குஷி’- இரண்டாவது சிங்கள் ‘ஆராத்யா’, ஒரு மெலோடியான காதல் பாலட், இப்போது வெளியாகி இருக்கிறது.

Next Post

பூரி ஜெகன்நாத், சார்மி கவுர் தயாரிப்பில் பூரி கனெக்ட்ஸ் வழங்கும் பூரி ஜெகன்நாத் இயக்கத்தில் உஸ்தாத் ராம் பொதினேனி கதாநாயகனாக நடிக்கும் பான் இந்திய படமான ‘டபுள் ஐஸ்மார்ட்’ படத்தின் வழக்கமான படப்பிடிப்பு மும்பையில் பிரம்மாண்டமான ஆக்‌ஷன் காட்சியுடன் தொடங்கியுள்ளது!

Next Post

பூரி ஜெகன்நாத், சார்மி கவுர் தயாரிப்பில் பூரி கனெக்ட்ஸ் வழங்கும் பூரி ஜெகன்நாத் இயக்கத்தில் உஸ்தாத் ராம் பொதினேனி கதாநாயகனாக நடிக்கும் பான் இந்திய படமான ‘டபுள் ஐஸ்மார்ட்’ படத்தின் வழக்கமான படப்பிடிப்பு மும்பையில் பிரம்மாண்டமான ஆக்‌ஷன் காட்சியுடன் தொடங்கியுள்ளது!

Popular News

  • ‘கங்கணம்’ பட பர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்ட தயாரிப்பாளர் கலைப்புலி தாணு

    0 shares
    Share 0 Tweet 0
  • ஆகஸ்ட் 14 ல் திரைக்கு வரும் ஃபிளாக் திரைப்படம்

    0 shares
    Share 0 Tweet 0
  • குறுகிய நாட்களில் மில்லியன் பார்வையாளர்களை கடந்த விஷாலின் ‘மகுடம்’ படத்தின் லிங்கா பாடல்! – உற்சாகத்தில் ராப் பாடகர் வினோத் (V7h)

    0 shares
    Share 0 Tweet 0
  • “விஸ்வநாத் & சன்ஸ்” முதல் சிங்கிள் “பட்டாம்பூச்சி” இசை ரசிகர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்று வருகிறது !

    0 shares
    Share 0 Tweet 0
  • பிளாஸ்ட் – விமர்சனம் ரேட்டிங் – 4/5

    0 shares
    Share 0 Tweet 0

Recent News

ஆகஸ்ட் 14 ல் திரைக்கு வரும் ஃபிளாக் திரைப்படம்

July 24, 2026

“நீட் தேர்வு களத்தில் மாணவர்களுக்கு நீதி, பொறுப்பேற்றல் மற்றும் சமமான வாய்ப்பு கிடைக்க வேண்டும்”~ தீப்ஷிகா

July 24, 2026

கோலாகலமாக நடைபெற்ற ‘கான் சிட்டி’ திரைப்படத்தின் நன்றி அறிவிப்பு விழா

July 23, 2026

டாக்ஸிக்’-Toxic திரைப்படத்தின் ‘தடுமாறுதே ‘ பாடல் மூலம் ராயா மற்றும் ரெபெக்கா கதாபாத்திரத்தின் புதிய பரிமாணத்தை ‘ராக்கிங் ஸ்டார்’ யாஷ் மற்றும் தாரா சுதாரியா வெளிப்படுத்துகின்றனர்.

July 23, 2026

நயன்தாரா- கவின் இணைந்து நடித்திருக்கும் ‘ஹாய்’ திரைப்படத்தின் இரண்டாவது பாடல் வெளியீடு

July 23, 2026

காகங்கள்’ படப்பிடிப்பு நிறைவு – யோகி பாபுவின் பிறந்தநாளுடன் இணைந்த இரட்டை மகிழ்ச்சி

July 23, 2026
  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2025 Tamil2daynews.com.

error: Content is protected !!
No Result
View All Result
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்

© 2025 Tamil2daynews.com.