
பிரண்ட்ஸ் பிக்சர்ஸ் தயாரிப்பில் K R ஸ்ரீஜித் இயக்கிய இப்படத்தை ஹாரார் திரில்லராக உருவாக்கியிருக்கிறார்.இயற்கை சூழல் மிகுந்த அடர்ந்த வனப்பகுதியில் ஆரம்பிக்கிறது கதை.இரண்டு பெண்கள் வளர்ப்புத் தந்தையின் வளர்ப்பில் வளர்ந்து வரும் நிலையில் அதில் ஒரு பெண்ணின் கற்பழிப்புக்கு மூன்று பேர் காரணமாக அதற்கு உடந்தையாக வளர்ப்புத் தந்தையும் காரணமாகிறார்.கற்பழிக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட அந்தப்பெண் தனது கை,கால் வராத தங்கையின் மூலம் பழிவாங்குவது படத்தின் கதை.பேய் வேடத்தில் வரும் அந்த நாயகி பேய் என்றாலே ஒரு கொடுரமாதான் இருக்கும்.ஆனால் இதில் ஒரு கண்ணில் ரத்தம் வர மாதிரி அவருக்கு மேக்கப் போட்டு ரண கொடூரமாக காட்டி இருப்பது இயக்குனரின் சிறப்பு.கதாநாயகியின் தங்கையாக நடித்த நடிகையின் தோழியாக வரும் அந்தப் பெண் நல்ல வசீகர முகம் கொண்டவர் முதல் படத்திலேயே யார் என்று கேட்க வைக்கிறார்.படத்தின் கதைக்கேற்ற கேமராவை கையாண்டிருக்கும் கேமரா மேனுக்கு ஒரு வாழ்த்துக்கள்.ஒரே ஒரு சண்டைக்காட்சி.உள்ளூர் ஒரு மலைவாழ் மக்கள் எப்படி மோதிக்கொள்வார்கள் என்பதை அளவாக எடுத்த ஸ்டண்ட் மாஸ்டருக்கு சபாஷ்.

கற்பழிக்கப்பட்ட அந்த பெண் பேயாக வந்து அந்த மூவரையும் எப்படி பழிவாங்குகிறார் ,யாரை வைத்து பழிவாங்குகிறார் என்பது படத்தின் உச்சபட்சம்.இயற்கை சூழலை மிக அழகாக காட்டியிருக்கும் கேமரா மேனுக்கு ஒரு வாழ்த்துக்கள்.தன்னை கற்பழிக்கப்பட்டு கொலை செய்தவர்களை அந்த பெண் வந்து ஆவியாக வந்து பழிவாங்குறா சரி. தன்னை 5,6 வருடங்களாக ஒருதலையாக காதலிக்கிறேன்னு சொன்ன அந்த நபரை ஏன் கொல்லனும். அதை சரியாக காட்சிப்படுத்த வில்லை.அந்த காட்சியை இயக்குனர் சற்று யோசித்து வைத்திருக்கலாம்.

அந்த திவ்யா என்ற தங்கும் விடுதியின் உரிமையாளராக வரும் நடிகரும் கொடுத்த வேடத்தை கச்சிதமாக செய்து முடித்திருக்கிறார். படத்தின் முதல் பாதியை விட இரண்டாம் பாதியில் வசனகர்த்தா யார் என்று கேட்க வைக்கிறார்.பொள்ளாச்சி கற்பழிப்பு சம்பவத்திற்கு பின் இது போல் நிறைய திரைப்படங்கள் வந்தாலும் இந்த கொன்று விடவா சற்று வித்தியாசமானது என்று தான் சொல்ல வேண்டும்.
மிக மிக குறைந்த பட்ஜெட்டில் இந்த மாதிரி படங்கள் எடுக்கும்போது சிறு பட தயாரிப்பாளர்களுக்கு இது மிகப்பெரிய ஒரு ஊக்கமாக இருக்கும்.இயக்குனர் கே ஆர் ஸ்ரீஜித் அடுத்து படம் இயக்கும் பொழுது இந்தப் படத்தில் விட்ட சில குறைகளை தவிர்த்து இதை விட இன்னும் சிறப்பாக படம் எடுத்து வெற்றி பெற வாழ்த்துக்கள்.
மொத்தத்தில்
“கொன்றுவிடவா”
வென்று வருவாள்…