• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us
Tamil2daynews
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
Tamil2daynews
No Result
View All Result
Home சினிமா சினிமா செய்திகள்

உச்ச நட்சத்திரங்கள் வரிசையில் இணைந்தார் லெஜண்ட் சரவணன்

by Tamil2daynews
July 8, 2022
in சினிமா செய்திகள்
0
0
SHARES
13
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

உச்ச நட்சத்திரங்கள் வரிசையில் இணைந்தார் லெஜண்ட் சரவணன்

 

லெஜண்ட் சரவணன் முதல் முறையாக தயாரித்து அதிரடி நாயகனாக அறிமுகமாகும் ‘தி லெஜண்ட்’ படம், ஜேடி-ஜெர்ரி இயக்கத்தில், ஹாரிஸ் ஜெயராஜ் இசையில் மிக பிரமாண்டமாக உருவாகியுள்ளது. இப்படத்தின் டிரைலர் 29 மில்லியன் பார்வைகளையும், மொசலோ மொசலு பாடல் 14 மில்லியன் மற்றும் வாடிவாசல் பாடல் 18 மில்லியன் பார்வைகளையும் கடந்துள்ள நிலையில், முதல் படம் வெளிவருவதற்கு முன்பே தான் ஒரு லெஜண்ட் என தடம் பதித்திருக்கிறார் லெஜண்ட் சரவணன்.

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்கள் நடித்த பல வெற்றி படங்களை தமிழகம் எங்கும் விநியோகம் செய்து ராசியான, சக்சஸ்ஃபுல் விநியோகஸ்தர் என பெயர் எடுத்த கோபுரம் சினிமாஸ் ஜி என் அன்புச்செழியன், ‘தி லெஜண்ட்’ படத்தை பார்த்து  மகிழ்ச்சி அடைந்து “என் கணிப்பின் படி முதல் படத்திலேயே உச்ச நட்சத்திரங்கள் வரிசையில் லெஜண்ட் சரவணன் இணைகிறார்” என்று பாராட்டி, நிச்சயம் இப்படம் மாபெரும் வெற்றி பெறும் எனக் கூறி அதிக முன் பணம்  கொடுத்து தமிழகம் முழுவதும் வெளியிடும் உரிமையை பெற்றிருக்கிறார்.

மேலும், தமிழகம் எங்கும் 800க்கும் அதிகமான திரையரங்குகளில் ‘தி லெஜண்ட்’ திரைப்படத்தை அவர் வெளியிட முடிவு செய்து உறுதி செய்தார்.

முதல் படத்திலியே அதிக பணம் கொடுத்து பெறப்பட்ட படம், மற்றும் 800க்கும் அதிகமான திரையரங்குகளில் வெளியாகும் படம் என்கிற பெருமை லெஜண்ட் சரவணனுக்கு மட்டுமே கிடைத்துள்ளது என்று திரைத்துறை மற்றும் திரையரங்க வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

எமோஷன், ஆக்ஷன், காதல், காமெடி என அனைத்தும் ஒருங்கிணைந்து சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை  அனைத்து மக்களும் மீண்டும் மீண்டும் படம் பார்க்கும் வகையில், சினிமா பாணியில் சொல்வதென்றால் ரிபீட் ஆடியன்ஸை வரவழைக்கும்  ஒரு பக்கா கமர்சியல் மாஸ் படமாக பான் இந்தியா அளவில் தமிழ், தெலுங்கு, ஹிந்தி, மலையாளம் மற்றும் கன்னடம் ஆகிய 5 மொழிகளில் மிகுந்த பொருட்செலவில் மிகப்பிரமாண்டமாக உருவாகியுள்ள இப்படம்  ஜூலை 28 அன்று வெளியாகவுள்ளது லெஜண்ட் சரவணன் நடிக்கும் ’தி லெஜண்ட்’.

தமிழகத்தை போல மற்ற மொழிகளிலும் அதிக திரையரங்குகளில் வெளியாகும் என வெளிநாடு மற்றும் அனைத்து மொழிகளில் வெளியீட்டு உரிமையை வாங்கிய விநியோகஸ்தர்கள் மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளனர்.

தனி பாடல் மூலம் உலகமெங்கும் பிரபலமான மும்பை மாடல் ஊர்வசி ரவுத்தலா தி லெஜண்ட் திரைப்படத்தின் வாயிலாக கதாநாயகியாக தமிழில் அறிமுகமாகிறார். தங்கள் தனி திறமையால் முத்திரை பதித்து அனைத்து மொழியிலும் பிரபலமான தொழில்நுட்ப கலைஞர்கள் ‘தி லெஜண்ட்’ படத்தில் லெஜெண்ட் சரவணனுடன் இணைந்து பணியாற்றியுள்ளனர்.

ஒரு அன்பான எளிய மனிதன் தனது புத்திசாலித்தனத்தாலும், முயற்சியாலும், வலிமையாலும் அனைத்து எதிர்ப்புகளையும் தாண்டி ‘ஒரு லெஜண்டாக’ எப்படி உருவாகிறான் என்ற கருத்தை மையமாக வைத்து சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அணைத்து தரப்பினரும் ரசித்து மீண்டும் மீண்டும் பார்க்கும் வகையில் அனைவரின் மனதிலும் ஒரு மிக பெரிய பாசிட்டிவ் எண்ணத்தை உணரும் வகையில் திரைக்கதையும் வசனமும் எழுதப்பட்டிருக்கிறது.

ஜனரஞ்சக கலைஞன் என அனைவராலும் பாராட்டப்பட்ட விவேக் கடைசியாக நடித்த படம் மட்டுமன்றி, இப்படம் தனக்கு ஒரு முக்கியமான படம் என பல நேரங்களில் லெஜண்ட் சரவணன் மற்றும் படக்குழுவினருடன் அவர் பகிர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இன்றைய முன்னணி நகைச்சுவை நாயகன் யோகி பாபு முக்கிய வேடத்தில் லெஜண்ட் சரவணனுடன் படத்தில் பயணிக்கிறார்.

படத்தில் இடம்பெறும் அனைத்து கதாபாத்திரங்களிலும் பிரபல நட்சத்திரங்கள் லெஜண்ட் சரவணனுடன் இணைந்துள்ளனர்.
Previous Post

பா.இரஞ்சித் இயக்கத்தில் அடுத்தபட போஸ்டர் வெளியீடு..!

Next Post

விஜய் குருதியகம்’ ; விஜய் மக்கள் இயக்கத்தினரின் உயிர் காக்கும் புதிய முன்னெடுப்பு

Next Post

விஜய் குருதியகம்’ ; விஜய் மக்கள் இயக்கத்தினரின் உயிர் காக்கும் புதிய முன்னெடுப்பு

Popular News

  • உலகளாவிய டிரெய்லர் வெளியீட்டிற்கு முன்னதாக, புது டெல்லியில் நடைபெற்ற பிரத்யேக நிகழ்வில் ‘ராமாயணம்’ திரைப்படத்தின் முதல் அறிமுகம்

    0 shares
    Share 0 Tweet 0
  • இசைஞானி இளையராஜா இசையில் உருவாகும் ‘தட்டுவண்டி’

    0 shares
    Share 0 Tweet 0
  • பிறந்தநாளில் 5 ஆண்டுகால கனவுத் திட்டத்தை அறிமுகப்படுத்திய நடிகை சாக்ஷி அகர்வால்!

    0 shares
    Share 0 Tweet 0
  • Actress Shirin Kanchwala Photos

    0 shares
    Share 0 Tweet 0
  • ‘தி இந்தியா ஸ்டோரி’ படத்தின் முதல் பாடலான ‘நீ செல்’ (Nee Sel) பாடலை வெளியிட்ட டி-சீரிஸ்! (T Series)

    0 shares
    Share 0 Tweet 0

Recent News

நயன்தாரா- கவின் இணைந்து நடித்திருக்கும் ‘ஹாய்’ திரைப்படத்தின் வெளியீட்டு தேதி அறிவிப்பு

July 20, 2026

ஜீவா லார்க் ஸ்டூடியோஸ் கூட்டணியில் – ‘தகப்பன்’ பூஜையுடன் இனிதே தொடக்கம்!

July 20, 2026

பிறந்தநாளில் 5 ஆண்டுகால கனவுத் திட்டத்தை அறிமுகப்படுத்திய நடிகை சாக்ஷி அகர்வால்!

July 20, 2026

இசைஞானி இளையராஜா இசையில் உருவாகும் ‘தட்டுவண்டி’

July 20, 2026

உலகளாவிய டிரெய்லர் வெளியீட்டிற்கு முன்னதாக, புது டெல்லியில் நடைபெற்ற பிரத்யேக நிகழ்வில் ‘ராமாயணம்’ திரைப்படத்தின் முதல் அறிமுகம்

July 20, 2026

“இதயம் முரளி” திரைப்பட நன்றி அறிவிப்பு விழா !!*

July 20, 2026
  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2025 Tamil2daynews.com.

error: Content is protected !!
No Result
View All Result
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்

© 2025 Tamil2daynews.com.