இயக்குனர் பா.இரஞ்சித் இயக்கத்தில் “நட்சத்திரம் நகர்கிறது’ படத்தின் போஸ்டர் இன்று வெளியானது. இயக்குனர் பா.இரஞ்சித் இயக்கிய சார்பட்டா பரம்பரை படத்திற்கு பிறகு நட்சத்திரம் நகர்கிறது எனும் படத்தை இயக்கியிருந்தார்.
முழுக்க காதலை மையப்படுத்தி எடுக்கப்பட்டிருக்கிறது நட்சத்திரம் நகர்கிறது திரைப்படம்.காதலை இங்கு அரசியலாக பார்க்கப்பட்டு அதற்கு வர்ணம் பூசி வாழும் மனிதர்கள் மத்தியில் காதலை கொண்டாடும் விதமாக எதற்குள்ளும் அடைபடாத அதன் பரிபூரணத்தை சொல்லுகிற படமாக இருக்கும்.
விரைவில் வெளியாகவிருக்கும் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் இன்று வெளியாகியிருக்கிறது.நட்சத்திரம் நகர்கிறது படத்தில் காளிதாஸ் ஜெயராம், துஷாரா விஜயன் , கலையரசன், ஷபீர், ஹரி, தாமு, வின்சு, வினோத், சுபத்ரா, உள்ளிட்டவர்கள் நடித்திருக்கிறார்கள்.