

கடந்த நவம்பர்26ஆம் தேதி ஜெய்பீம் திரைப்படத்தை சென்னை மினி தியேட்டரில் பார்த்தேன்.
தோழர்கள் RNK, முத்தரசன், மூவீ ஆகியோரோடு சென்றிருந்தேன்.
நடிகரும், கொங்கு மண்ணின் குணக்குன்றுமான சகோதரர் சிவக்குமார் அன்பு ததும்பவரவேற்று உபசரித்தார்!
படத்தில் ‘நடித்த’ நடிகர்கள் அனைவரும் நடிக்கவே இல்லை! வாழ்ந்து காட்டினார்கள்!
பல இடங்களில் கண்கள் கண்ணீர்க்குளமாயின!
கலோனியல் போலீசின் ‘குரூரத்தை’ தத்ரூபமாக உரித்து வைத்த காவல்துறையினரின் நடிப்பை என்னவென்று சொல்வது?
மனிதர்களை மிருகங்களாகப் பயிற்றுவித்துப்போன, பிரிட்டானிய காலனி அரசின் மீது கோபம் கொப்பளித்துக்கொண்டே இருந்தது!
பாராட்டி ஊக்குவிக்க வேண்டியஇந்தப் படத்தை, அழுகிப்போன மனநோயாளிகள் சிலர் எதிர்க்கிறார்கள்!?
அந்த எதிர்ப்பின் பின்னால் பாஜக இருக்கிறது!
சூர்யா வீட்டு முன்னால் 10,000 பேரைத் திரட்டுவார்களாம்!
அவரை உதைத்தால் ஒரு இலட்சம் கொடுப்பார்களாம்!
இந்த இழிவான சீண்டல்களை நிறுத்திக்கொள்ளுங்கள்!
எதிர்விளைவு வீரியமானதாக இருக்கும்! தாங்க மாட்டீர்கள்!
தமிழ்நாடே சூர்யாவோடு நிற்கிறது!
கே.சுப்பராயன் MP