கேன்ஸ் படவிழாவில் பா.இரஞ்சித்.
கலைத்துறையில் குறிப்பாக சினிமாத்துறையில் இலாப நோக்கோடு மட்டுமே இயக்கும் தயாரிப்பு நிறுவனங்களுக்கு மத்தியில் இங்கு பேசவேண்டிய, காட்சிப்படுத்தவேண்டிய, மறக்கப்பட்ட, மறுக்கப்பட்ட மனித வாழ்வின் பக்கங்களை படம்பிடித்து காட்டும் ஒரு நிறுவனமாக நீலம் புரொடக்சன்ஸ் இயக்குனர் பா.இரஞ்சித்தால் ஆரம்பிக்கப்பட்டது.

அடுத்து சேத்துமான், ஜெ.பேபி, பொம்மை நாயகி, நட்சத்திரம் நகர்கிறது, என அடுத்தடுத்த படங்கள் வெளியீட்டிற்கு தயாராக இருக்கின்றன.
இதனைத்தொடர்ந்து நீலம் புரொடக்சன்ஸ் தமிழ்சினிமாவைத்தாண்டி தனது பயணத்தை துவங்க தனது சிறகை இன்னும் விரித்து பறக்க #நீலம்_ஸ்டுடியோஸ் துவங்கியிருக்கிறது.
இந்த திரைப்படம் மற்றும் தொலைக்காட்சித் தொடரை இயக்குநர் பா.இரஞ்சித், அபயானந்த் சிங், பியுஷ் சிங், சவுரப் குப்தா, மற்றும் அதிதி ஆனந்த் ஆகியோர் இணைந்து தயாரிக்கிறார்கள். அஸ்வினி சவுத்ரி மற்றும் பரூல் சிங் ஆகியோர் இணைந்து தயாரிக்கிறார்கள்.