ஆக்ஷனில் அதிரடி காட்டும் மோகன்: பரபரப்பை கிளப்பியுள்ள ஹரா
கோயம்புத்தூர் எஸ் பி மோகன் ராஜ் மற்றும் ஜி மீடியா ஜெயஸ்ரீ விஜய் தயாரிப்பில், விஜய் ஸ்ரீ இயக்கத்தில் உருவாகும் ‘வெள்ளி விழா நாயகன்’ மோகன் நடிக்கும் ‘ஹரா’ படத்தின் சிறப்புக் காணொலி (கிளிம்ப்ஸ்) வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.
ஒளிப்பதிவு, இசை உள்ளிட்ட அனைத்து அம்சங்களும் உலகத் தரத்தில் அமைந்துள்ளதாக பார்வையாளர்கள் பாராட்டுகின்றனர். சில வாரங்களுக்கு முன்னர் வெளியிடப்பட்ட ஹரா படத்தின் டைட்டில் டீசர் 14 லட்சம் பார்வைகளை கடந்த நிலையில், கிளிம்ப்ஸும் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது படக்குழுவினரை உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது.
இரண்டு கட்டப் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ள நிலையில், மூன்றாம் கட்டப் படப்பிடிப்பையும் விறைவில் நிறைவு செய்து, படத்தை தீபாவளி விருந்தாக திரைக்கு கொண்டு வர இயக்குநர் விஜய் ஸ்ரீ தலைமையிலான படக்குழுவினர் மும்முரமாக பணியாற்றி வருகின்றனர்.
இதுவரை மோகனை பல்வேறு கதாபாத்திரங்களில் பார்த்து ரசித்து மக்கள் கொண்டாடியது போல, ‘ஹரா’ படத்திலும் அவரது கதாபாத்திரம் மிகவும் பேசப்படும் என அவர்கள் தெரிவிக்கின்றனர்.
சாருஹாசன் நடிப்பில் 2019-ம் ஆண்டு வெளியான ‘தாதா 87’ மற்றும் மக்கள் தொடர்பாளர் நிகில் முருகன் கதைநாயகனாக அறிமுகமாகும் விரைவில் வெளியாகவுள்ள ‘பவுடர்’ படங்களை தொடர்ந்து இயக்குநர் விஜயஸ்ரீ அதிரடி மேக்கிங்கில், மோகன் நடிக்கும் ‘ஹரா’ திரைப்படத்தை கோவை எஸ் பி மோகன் ராஜ் மற்றும் ஜி மீடியா ஜெய ஸ்ரீ விஜய் இணைந்து தயாரிக்கின்றனர்.