• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us
Tamil2daynews
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
Tamil2daynews
No Result
View All Result
Home சினிமா சினிமா செய்திகள்

“பாரம்” படத்திற்காக தெருவில் இறங்கி  போஸ்டர் ஒட்டிய மிஷ்கின் ! 

by Tamil2daynews
February 24, 2020
in சினிமா செய்திகள்
0
“பாரம்” படத்திற்காக தெருவில் இறங்கி  போஸ்டர் ஒட்டிய மிஷ்கின் ! 
0
SHARES
11
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

சொன்னதை செய்த மிஷ்கின் பிரமிப்பில் ஆழ்ந்த திரையுலகம். சினிமா மீது தீராத காதல் கொண்டவர் இயக்குநர் மிஷ்கின். தனது தரமிக்க படங்கள் மூலம் தமிழ் சினிமாவின் தனித்தன்மை மிக்க இயக்குநர் வரிசையில் இடம் பிடித்திருப்பவர் இயக்குநர் மிஷ்கின். இவரது படங்கள் பாக்ஸ் ஆபிஸில் கலக்கும் அதே நேரத்தில் திரைக்கல்லூரிகளில் பாடங்களாக விவாதிக்கப்பட்டும் வருகின்றது. சினிமாவை உயிராக நேசிக்கும் அவர் நல்ல படங்கள் வரும் போது முதல் ஆளாக  நேசிக்கவும் பாராட்டவும் தவறுவதில்லை.  “பாரம்” படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பில் “பாரம்” படம் வெளியாகும்போது நான் விளம்பரத்திற்காக தெருவில் இறங்கி போஸ்டர் ஒட்டுவேன் எனக்கூறியபடியே  அவர் தற்போது செய்து காட்டியுள்ளார். சினிமா மீதான அவரது அளவற்ற நேசிப்பு அனைவரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளது. தேசிய விருதை வென்ற “பாரம்” திரைப்படம் இயக்குநர் ப்ரியா கிருஷ்ணசுவாமி இயக்கத்தில் 2020 பிப்ரவரி 21 அன்று வெளியாகி திரையரங்கில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது.

இயக்குநர் ப்ரியா கிருஷ்ணசுவாமி இயக்குநர் மிஷ்கினின் அளவிலா அன்பின் செயலால் மிகுந்த புளகாங்கிதம் அடைந்துள்ளார். மேலும் இது பற்றி அவர் கூறியதாவது…

“பாரம்” படம் மீது இயக்குநர் மிஷ்கின் காட்டிவரும்  அன்புக்கு விலைமதிப்பே கிடையாது.அவர் இந்தியாவின் மிகச்சிறந்த இயக்குநர்களில் ஒருவர். இவ்வளவு உயரத்தில் இருந்து கொண்டு புதுமுகங்களான எங்கள் மீது அவர் காட்டும் அன்பும் ஆதரவும் பிரமிப்பானது. இந்த அன்புக்கு ஈடு இணை ஏதுமில்லை. “பாரம்” படத்தின் டிரெய்லர் வெளியீட்டின் போது அவர் பேசியதிலிருந்தே இப்படம் பற்றிய எதிர்பார்ப்பு எல்லோரிடத்திலும்  பரவ ஆரம்பித்துவிட்டது. தற்போது அவர் போஸ்டர் ஒட்டியதன் மூலம் படத்தின் மீதான கவனம் பன்மடங்கு பெருகியிருக்கிறது. இந்த அன்பு எங்களை பெரு மகிழ்ச்சியில் ஆழ்த்தியிருக்கிறது என்றார்.

இயக்குநர் ப்ரியா கிருஷ்ணசுவாமி இயக்கத்தில் ஆர்த்ரா ஸ்வரூப் மற்றும் ப்ரியா கிருஷ்ணசுவாமி இணைந்து Reckless Roses  நிறுவனத்திற்காக  தயாரித்திருக்கும் “பாரம்” திரைப்படம் தமிழகமெங்கும் ரசிகர்களிடம் நல்ல படம் என்கிற பெயர் பெற்று திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிவருகிறது.

Tags: BAARAMMysskinVetri Maaran
Previous Post

சினிமா தலைப்புகளை TV சீரியல்களுக்கு பயன்படுத்துவது குறித்து தயாரிப்பாளர், இயக்குனர் கேயார் அறிக்கை 

Next Post

அருண் விஜயை கொண்டாடிய கோயம்புத்தூர் ரசிகர்கள் ! 

Next Post
அருண் விஜயை கொண்டாடிய கோயம்புத்தூர் ரசிகர்கள் ! 

அருண் விஜயை கொண்டாடிய கோயம்புத்தூர் ரசிகர்கள் ! 

Popular News

  • ‘பெத்லகேம் குடும்ப யூனிட்’ படக்குழுவினரை பாராட்டிய உலகநாயகன் கமல்ஹாசன் !!

    0 shares
    Share 0 Tweet 0
  • ‘மொத ராத்திரி’ திரைப்படத்தின் நன்றி தெரிவிக்கும் விழா!

    0 shares
    Share 0 Tweet 0
  • ‘ஹோப்’: உலகத் தரத்தில், திரைப்படமாகும் 30 நிமிட குறும்படம்

    0 shares
    Share 0 Tweet 0
  • நிவின் பாலி நடிக்கும் ‘பெத்லகேம் குடும்ப யூனிட்: பட பத்திரிகையாளர் சந்திப்பு

    0 shares
    Share 0 Tweet 0
  • ‘அடடா’ பாடல் மூலம் தமிழ் சினிமா நினைவுகளை ராப் இசையில் கொண்டு வரும் கில்லா கே மற்றும் பால் டப்பா

    0 shares
    Share 0 Tweet 0

Recent News

‘ஹோப்’: உலகத் தரத்தில், திரைப்படமாகும் 30 நிமிட குறும்படம்

September 7, 2026

‘பிளாஸ்ட்’ பிளாக்பஸ்டர் வெற்றியை தொடர்ந்து கல்பாத்தி எஸ். அகோரம், கல்பாத்தி எஸ். கணேஷ், கல்பாத்தி எஸ். சுரேஷ் தயாரிப்பில் எம் எஸ் ஆனந்தன் இயக்கத்தில் ஜெய், பிரியங்கா மோகன், யோகி பாபு நடிக்கும் ‘ஏஜிஎஸ் 29’

September 7, 2026

‘மொத ராத்திரி’ திரைப்படத்தின் நன்றி தெரிவிக்கும் விழா!

September 7, 2026

‘பெத்லகேம் குடும்ப யூனிட்’ படக்குழுவினரை பாராட்டிய உலகநாயகன் கமல்ஹாசன் !!

September 7, 2026

விமல் – ஸ்ரேயா கூட்டணியில் அதிரடி ரோம்-காம் ‘சண்டக்காரி’!

September 5, 2026

மோகன்லால் – விஷ்ணு மோகன் இணையும் படத்திற்கு ‘ஆபரேஷன் கங்கா’ என பெயர் சூட்டப்பட்டது

September 5, 2026
  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2025 Tamil2daynews.com.

error: Content is protected !!
No Result
View All Result
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்

© 2025 Tamil2daynews.com.