• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us
Tamil2daynews
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
Tamil2daynews
No Result
View All Result
Home சினிமா சினிமா செய்திகள்

அருண் விஜயை கொண்டாடிய கோயம்புத்தூர் ரசிகர்கள் ! 

Coimbatore Cinema Halls decorate Arun Vijay with emotional bliss   

by Tamil2daynews
February 24, 2020
in சினிமா செய்திகள்
0
அருண் விஜயை கொண்டாடிய கோயம்புத்தூர் ரசிகர்கள் ! 
0
SHARES
31
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

அருண் விஜய் தமிழ் சினிமாவில் போராடி ஜெயித்தவர். தோல்விகளில் பாடம் கற்று தொடர் வெற்றியை பெற்று வரும் அவரது நீண்ட கால சினிமா பயணம், பலருக்கு வாழ்க்கை பாடம். சமீபமாக அவரை காணும் இடங்களில்  ரசிகர்கள் அவரை கொண்டாடி தீர்க்கிறார்கள். படு ஸ்டைலீஷ் லுக்கில் அவர் கலக்கியுள்ள “மாஃபியா” படம் ரசிகர்களிடம் பேராதரவு பெற்றுள்ளது. “மாஃபியா” ரிலீஸ் அன்று சென்னையில் SPI Cinemas, KG Cinemas அரங்குகளில் ரசிகர்களை நேரடியாக சந்தித்து, அவர்களது அன்பில் மிதந்தவர், பிப்ரவரி 22 அன்று கோயம்புத்தூர் INOX திரையரங்கில் ரசிகர்களை சந்தித்தார். அங்கு ரசிகர்கள் அருண் விஜயை நேரில் கண்டதில் உற்சாக மிகுதியில் கொண்டாடி தீர்த்தனர்.

இது குறித்து நடிகர் அருண் விஜய் பகிர்ந்து கொண்டதாவது…

கோயம்புத்தூர் நகரம் கலப்பற்ற நேர்த்தியான நகரம். அங்குள்ள ரசிகர்கள் எப்போதும் பெரிய  நட்சத்திரங்களை கண்மூடித்தனமாக கொண்டாடுவதில்லை. அவர்கள் தரமான படங்களையே கொண்டாடுவார்கள். நல்ல படங்களுக்கு பெரும் வரவேற்பு தருவார்கள். நான் அவர்களை சந்தித்தபோது அவர்கள் காட்டிய அன்பில்,  உணர்வுகளின் குவியலில் சிக்கி மனம் நெகிழ்ந்து போனேன். அவர்கள் தந்த வரவேற்பும், அன்பும் மறக்க முடியாதது. பலர் தனித்தனியாக வந்து படத்தின் தொழில்நுட்ப அம்சங்களை தனித்தனியே குறிப்பிட்டு பேசியது பெரும் ஆச்சர்யமாக இருந்தது. தயாரிப்பு தரப்பான Lyca Productions மற்றும் இயக்குநர் கார்த்திக் நரேனுக்கு பெரும் நன்றிகள். என் தந்தை என்னிடம் அடிக்கடி “உண்மையான வெற்றி என்பது தியேட்டர் உரிமையார்களின் முகத்தில் வழியும் புன்னகையில் இருக்கிறது” என்பார். அதை
நேரில் கண்டபோது உள்ளம் மகிழ்ச்சியில் பொங்கியது. முன் திரையிடல் காட்சிகள், விமர்சனங்கள், ரசிகர்களின் கொண்டாடங்களுக்கு பிறகு கோயம்புத்தூர் முதலாக அனைத்து இடங்களிலும் திரையரங்குகளின் எண்ணிக்கை அதிகப்படுத்திய செய்திகள் மேலும் மகிழ்ச்சியை கூட்டியுள்ளது என்றார்.

ரசிகர்களின் பேராதரவில் பெரும் கொண்டாட்டத்தில் “மாஃபியா” பெரு வெற்றி பெற்றிருக்க,  பலரும் “மாஃபியா 2” எப்போது என பெரும் ஆர்வத்துடன் வினவி வருகிறார்கள். இதே அளவு ஆச்சர்யங்களுடன் பெரு வெற்றிப்படமாக “மாஃபியா 2” வருமென அருண் விஜய்யும் அதே உற்சாகத்தில் அறிவிப்பிற்காக காத்திருக்கிறார்.

Previous Post

“பாரம்” படத்திற்காக தெருவில் இறங்கி  போஸ்டர் ஒட்டிய மிஷ்கின் ! 

Next Post

*“ரொமான்ஸ் படம் பார்த்து பார்த்து போரடித்து விட்டது” ; நமீதாவின் காக்டெய்ல் கலாட்டா* 

Next Post
*“ரொமான்ஸ் படம் பார்த்து பார்த்து போரடித்து விட்டது” ; நமீதாவின் காக்டெய்ல் கலாட்டா* 

*“ரொமான்ஸ் படம் பார்த்து பார்த்து போரடித்து விட்டது” ; நமீதாவின் காக்டெய்ல் கலாட்டா* 

Popular News

  • பிரபல கேமராமேனும் தயாரிப்பாளருமான ரவியாதவ் பிறந்த நாளை கேக் வெட்டி கொண்டாடிய “ரஞ்சன்” படக்குழு.

    0 shares
    Share 0 Tweet 0
  • மஞ்சு விரட்டு பின்னணியில் விமல் நடிப்பில் உருவாகும் “வடம்”!!

    0 shares
    Share 0 Tweet 0
  • “எல்லோரையும் நம்பாதே” என்பது ரவி மோகன் தனது இளம் பருவ ரவி மோகனுக்கு அளிக்கும் அறிவுரை.

    0 shares
    Share 0 Tweet 0
  • சோனி மியூசிக் வழங்கும் ராப்பர் கிட் சாந்தேவின் “நா வேற லெவல்” பாடல் பத்திரிக்கையாளர் சந்திப்பு !

    0 shares
    Share 0 Tweet 0
  • கியூப்ஸ் என்டர்டெயின்மெண்ட்ஸ் தயாரிப்பில் ஷெரீப் முகம்மது வழங்கும் ‘காட்டாளன்’ திரைப்படத்தை ஜி எஸ் சினிமா இன்டர்நேஷனல் லெனின் மே 28ம் தேதி தமிழகமெங்கும் வெளியிடுகிறார்

    0 shares
    Share 0 Tweet 0

Recent News

திரைப்பட இயக்குநராக இருந்து நடிகராக மாறிய பாலாஜி சக்திவேல், பைலட் திரைப்படமான ‘ஆஃப் தி ரெக்கார்ட்’டில் கதாநாயகனாக நடித்துள்ளார்!

May 30, 2026

“எல்லோரையும் நம்பாதே” என்பது ரவி மோகன் தனது இளம் பருவ ரவி மோகனுக்கு அளிக்கும் அறிவுரை.

May 30, 2026

பிரபல கேமராமேனும் தயாரிப்பாளருமான ரவியாதவ் பிறந்த நாளை கேக் வெட்டி கொண்டாடிய “ரஞ்சன்” படக்குழு.

May 30, 2026

பேட்மிண்டன் விளையாட்டு பின்னணியிலான தமிழ் சினிமாவின் முதல் காதல் திரைப்படம்

May 30, 2026

லைகா புரொடக்ஷன்ஸ் சுபாஸ்கரன் வழங்கும் ஜேசன் சஞ்சய் இயக்கத்தில், சந்தீப் கிஷன் நடிப்பில் உருவாகியுள்ள ‘சிக்மா’ திரைப்படம் உலகமெங்கும் ஜூலை 31ஆம் தேதி வெளியாகிறது!

May 30, 2026

கரண் தயாநிதி மாறன் அறிமுகப்படுத்தும் கதைஷார்ட்ஸ் (KadhaiShorts) – மைக்ரோ டிராமாவுக்கென உருவாகும் தமிழ்நாட்டின் முதல் டிஜிட்டல் கதைத் தளம்

May 30, 2026
  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2025 Tamil2daynews.com.

error: Content is protected !!
No Result
View All Result
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்

© 2025 Tamil2daynews.com.