• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us
Tamil2daynews
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
Tamil2daynews
No Result
View All Result
Home செய்திகள்

அப்பாவி மக்கள் படுகொலைக்கு “நாம் தமிழர்” சீமான்  கடும் கண்டனம்..!

by Tamil2daynews
December 6, 2021
in செய்திகள்
0
அப்பாவி மக்கள் படுகொலைக்கு “நாம் தமிழர்” சீமான்  கடும் கண்டனம்..!
0
SHARES
15
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp
சொந்த நாட்டில் வசிக்கும் பழங்குடி மக்களையே சுட்டுப்படுகொலை செய்வதா? இது நாடா? இல்லை! சுடுகாடா? – சீமான் கண்டனம்
நாகலாந்து மாநிலத்தில் பழங்குடி இனத்தைச் சேர்ந்த அப்பாவி பொது மக்களில் 13 பேர் இந்திய இராணுவத்தினரால் சுட்டுப்படுகொலை செய்யப்பட்டிருப்பது பேரதிர்ச்சி தருகிறது. நாடு முழுக்கப் பெரும் கொதிநிலையையும், கடும் எதிர்ப்பையும் உருவாக்கியிருக்கும் இச்சம்பவத்தின் மூலம் நாட்டுமக்களின் பாதுகாப்பும்,மக்களாட்சித் தத்துவமும் முழுமையாகக் கேள்விக்குள்ளாகியிருக்கிறது. இது மக்களுக்கான நாடா? மக்களைக் கொன்றொழிக்கும் சுடுகாடா? என உள்ளச்சீற்றம் ஏற்படுகிறது. பழங்குடியினரைப் படுகொலை செய்துவிட்டு, பயங்கரவாதிகளென நினைத்துத் தவறுதலாகச் சுட்டுக்கொன்றுவிட்டோம் எனக்காரணம் கற்பிக்க முயலும் இந்திய இராணுவத்தினரின் செயல்பாடு மிக மிக இழிவானது.
அந்நிய ஆக்கிரமிப்புகளிலிருந்தும், தாக்குதல்களிலிருந்தும், இன்னபிற சிக்கல்களிலிருந்தும், இயற்கைச்சீற்றங்களிலிருந்தும் சொந்த நாட்டு மக்களைக் காப்பதற்காக உருவாக்கப்பட்ட இந்நாட்டு இராணுவம், இம்மண்ணின் மக்களையே, போற்றிக்கொண்டாட வேண்டிய ஆதித்தொல்குடிகளையே, காக்கை, குருவியைச் சுடுவது போலச் சுட்டுக்கொலை செய்தது கடும் கண்டனத்திற்குரியது. எதன்பொருட்டும், எத்தகையக் காரணத்தினாலும் இதுபோன்றப் பச்சைப்]படுகொலைகளை, அரசப்பயங்கரவாதச்செயல்களை ஒருநாளும் ஏற்க முடியாது. சொந்த நாட்டு மக்கள் மீதே இராணுவத்தினரால் ஏவப்பட்ட இத்தகைய அரச வன்முறையை, பயங்கரவாதத்தாக்குதலை வன்மையாக எதிர்க்கிறேன்.
இக்கோரச்சம்பவம் நாட்டையே உலுக்கியிருக்கும் கொடுஞ்சூழலிலும், இதுகுறித்து எவ்விதக் கருத்தும் தெரிவிக்காது, உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆறுதலோ, கொலைசெய்த இராணுவ வீரர்களுக்குக் கண்டனமோ பதிவுசெய்யாது பிரதமர் நரேந்திரமோடி அமைதிகாப்பது வெட்கக்கேடானது. பாஜக அரசின் மக்கள்விரோதப் போக்கையும், அதிகாரத்திமிரில் செய்யும் அநீதிகளையும், அட்டூழியங்களையும் நாட்டு மக்கள் நீண்டகாலம் வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருக்க மாட்டார்கள். இவற்றிற்கான எதிர்வினையை, பதிலடியைக் கட்டாயம் சனநாயக முறையிலேயே திருப்பித்தருவார்கள் என அறுதியிட்டுக் கூறுகிறேன்.
ஆகவே, நாடு முழுக்க எழுந்திருக்கும் எதிர்ப்பலையையும், மக்களின் உணர்வுகளையும் இனிமேலாவது புரிந்துகொண்டு பழங்குடி மக்களைக் கொன்றொழித்த இராணுவ வீரர்களைக் கொலைவழக்கின் கீழ் கைதுசெய்து உடனடியாகச் சிறைப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும், கொலைசெய்யப்பட்ட பழங்குடி மக்களின் குடும்பத்தினருக்குத் தலா 10  கோடி ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டுமெனவும், அம்மண்ணை ஆக்கிரமித்திருக்கும் இராணுவத்தினரை உடனடியாகத் திரும்பப் பெறச் செய்ய வேண்டுமெனவும் ஒன்றிய அரசையும், நாகலாந்து மாநில அரசையும் வலியுறுத்துகிறேன்.
செந்தமிழன் சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி
Previous Post

*சவாலான கதாபாத்திரங்களை ஏற்று தமிழ் மற்றும் தெலுங்கு திரையுலகில் முத்திரை பதிக்க தயாராகும் ‘அவந்திகா மிஸ்ரா’*

Next Post

நம்மவரின் நமஸ்காரங்கள்..!

Next Post
நம்மவரின் நமஸ்காரங்கள்..!

நம்மவரின் நமஸ்காரங்கள்..!

Popular News

  • பிரபல கேமராமேனும் தயாரிப்பாளருமான ரவியாதவ் பிறந்த நாளை கேக் வெட்டி கொண்டாடிய “ரஞ்சன்” படக்குழு.

    0 shares
    Share 0 Tweet 0
  • “எல்லோரையும் நம்பாதே” என்பது ரவி மோகன் தனது இளம் பருவ ரவி மோகனுக்கு அளிக்கும் அறிவுரை.

    0 shares
    Share 0 Tweet 0
  • கதை நாயகனாக ரஹ்மான் நடிக்கும் புதிய படம்!

    0 shares
    Share 0 Tweet 0
  • சோனி மியூசிக் வழங்கும் ராப்பர் கிட் சாந்தேவின் “நா வேற லெவல்” பாடல் பத்திரிக்கையாளர் சந்திப்பு !

    0 shares
    Share 0 Tweet 0
  • கியூப்ஸ் என்டர்டெயின்மெண்ட்ஸ் தயாரிப்பில் ஷெரீப் முகம்மது வழங்கும் ‘காட்டாளன்’ திரைப்படத்தை ஜி எஸ் சினிமா இன்டர்நேஷனல் லெனின் மே 28ம் தேதி தமிழகமெங்கும் வெளியிடுகிறார்

    0 shares
    Share 0 Tweet 0

Recent News

திரைப்பட இயக்குநராக இருந்து நடிகராக மாறிய பாலாஜி சக்திவேல், பைலட் திரைப்படமான ‘ஆஃப் தி ரெக்கார்ட்’டில் கதாநாயகனாக நடித்துள்ளார்!

May 30, 2026

“எல்லோரையும் நம்பாதே” என்பது ரவி மோகன் தனது இளம் பருவ ரவி மோகனுக்கு அளிக்கும் அறிவுரை.

May 30, 2026

பிரபல கேமராமேனும் தயாரிப்பாளருமான ரவியாதவ் பிறந்த நாளை கேக் வெட்டி கொண்டாடிய “ரஞ்சன்” படக்குழு.

May 30, 2026

பேட்மிண்டன் விளையாட்டு பின்னணியிலான தமிழ் சினிமாவின் முதல் காதல் திரைப்படம்

May 30, 2026

லைகா புரொடக்ஷன்ஸ் சுபாஸ்கரன் வழங்கும் ஜேசன் சஞ்சய் இயக்கத்தில், சந்தீப் கிஷன் நடிப்பில் உருவாகியுள்ள ‘சிக்மா’ திரைப்படம் உலகமெங்கும் ஜூலை 31ஆம் தேதி வெளியாகிறது!

May 30, 2026

கரண் தயாநிதி மாறன் அறிமுகப்படுத்தும் கதைஷார்ட்ஸ் (KadhaiShorts) – மைக்ரோ டிராமாவுக்கென உருவாகும் தமிழ்நாட்டின் முதல் டிஜிட்டல் கதைத் தளம்

May 30, 2026
  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2025 Tamil2daynews.com.

error: Content is protected !!
No Result
View All Result
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்

© 2025 Tamil2daynews.com.