• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us
Tamil2daynews
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
Tamil2daynews
No Result
View All Result
Home சினிமா சினிமா செய்திகள்

“சைக்கோ” முதல் வருட கொண்டாட்டம் ! 

by Tamil2daynews
January 26, 2021
in சினிமா செய்திகள்
0
“சைக்கோ” முதல் வருட கொண்டாட்டம் ! 
0
SHARES
13
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp
Double Meaning Productions, ஒரு தயாரிப்பு நிறுவனம் தனது படைப்புகளின் அடையாளமாக நிறுவனத்தின் சார்பில் “சைக்கோ” திரைப்படத்தை தந்து, விமர்சக ரீதியிலும் பாக்ஸ் ஆபிஸிலும் வெற்றியை குவித்த இந்நன்நாளில் ஒரு வருட நிறைவை பெருமிதத்துடன் “சைக்கோ” படத்தின் முதலமாண்டை  கொண்டாடுகிறது.
Double Meaning Productions தயாரிப்பாளர் அருண்மொழி மாணிக்கம் கூறியதாவது…
விநியோக தளத்தில் வெற்றிக்கு (Double Meaning) இரட்டை அர்த்தம் உண்டு. படைப்பின் முழுமையை அடைந்த திருப்தி மற்றும் வியாபார ரீதியில் விநியோக தளத்தில் அடையும் வெற்றி என இரண்டும் வெற்றியின் அடையாளமாக பார்க்கப்படுகிறது. அந்த வகையில் “சைக்கோ” படத்தின் வெற்றியில் மிகவும் பெருமிதம் கொள்கிறேன். திரையரங்குள் முழுதும் பயமும் இருளும் பரவியிருந்தாலும் அதனை மீறி அன்பின் ஆன்மா அனைவருடத்திலும் பரவியிருந்தது. சில காட்சிகள் இமை மூட மறுத்து மலர்ந்து விரிய, அதற்கு மாறாக சில காட்சிகள் கண்கள் இறுக மூடிக்கொள்ளும் இரண்டு தன்மைகளும் இப்படத்தில் நடந்தது. கண் தெரியாத மனிதனின் தீராத தேடல்,
அவன் ஆத்மாவின் அலைபாயும் தன்மை அதன் சைக்கோத்தனம் படம் முழுக்க விரவியிருந்தது. இயக்குநரின் அதீதமான படைப்பு திறன், படத்தில் ரசிகர்களை ஆச்சர்யப்படுத்தி கொண்டே இருந்தது. அவரின் முத்திரையும் படத்தில் பலமாக பதிந்திருந்தது. கண்கள் ஈரம் கொள்ள செய்து, மனதை பிசையும் எதிர்மறை பாத்திரத்தின் ஒப்புதல் வாக்குமூலம் வார்த்தைகளாக இல்லாமல், காட்சிகளாக விரிந்தது அழகியலின் உச்சமாக, இயக்குநரின் முத்திரையுடன் இருந்தது. தீவிர திரை ரசிகர்கள் படத்தில் புத்த மதத்தின் நம்பிக்கை  கதையான “அங்குலிமாலா” கதை கையாளாப்பட்டிருக்கும் விதத்தையும், அறிவியலாளர் சிக்மண்ட் ஃப்ராய்டின் கோட்பாடான  “ஸ்டாக்ஹோம் சிண்ட்ரோம்” பயன்படுத்தப்பட்டிருந்ததையும் குறிப்பிட்டு பாராட்டியிருந்தார்கள். இயக்குநர் மிஷ்கினின் இந்த சைக்லாஜிகல் திரில்லர் திரையில் வடிக்கப்பட்ட சாத்தான் தேவனின் அன்பை தேடும் மாறுப்பட்ட  கவிதை வடிவமாக, மனிதத்தை போற்றுவதாக இருந்தது. உதயநிதி ஸ்டாலினின் அற்புத நடிப்பு கச்சிதமாக இருந்தது. அதிதி ராவ் ஹைதாரியின் உணர்வுபூர்வமான நடிப்பு மற்றும் ராஜ்குமார் பிச்சுமணியின் அசத்தலான பாத்திர ஆளுமை, ரசிகர்களுக்கு பேருவகை தந்தது. இயல்பிலிருந்து முற்றிலும் மாறுப்பட்ட இளையராஜாவின் இசை உயிரை உருக்குவதாக அமைந்திருந்தது.
இப்படம் தந்த அடையாளத்தினை, வெற்றியை எங்கள் தயாரிப்பு நிறுவனத்தின் சார்பில்  தொடர்ந்து செய்ய ஆசைப்படுகிறோம். சிபிராஜ் நடிப்பில் எங்கள் அடுத்த படைப்பாக உருவாகும் “மாயோன்”
படத்தின் விஷிவல்கள், எங்களது வெற்றி பயணம் தொடரும் எனும் நம்பிக்கையை அளித்துள்ளது. படக்குழுவில் உழைத்த நடிகர்கள், தொழிற்நுட்ப கலைஞர்கள்  அனைவருக்கும், விநியோகஸ்தர்கள், திரையிட்டவர்கள், ஊடக நண்பர்கள், ரசிகர்கள் மற்றும் தீவிர திரைப்பட காதலர்கள் அனைவருக்கும் நன்றியினை தெரிவித்து கொள்கிறோம். எங்கள் Double Meaning Productions நிறுவனம் ரசிகர்களை ஏமாற்றாத தீவிரமான படைப்புகளை தொடர்ந்து தருமென மீண்டுமொருமுறை உறுதி அளிக்கிறோம். நன்றி.
Previous Post

Dr Mehtas மருத்துவமனையில் தமிழ்நாட்டில் முதல் முறையாக அறுவை சிகிச்சை மூலம் தொண்டை புற்றுநோயை வெற்றிகரமாக அகற்றினர்..!

Next Post

“ட்ரிப்” பத்திரிக்கையாளர் சந்திப்பு !

Next Post
“ட்ரிப்” பத்திரிக்கையாளர் சந்திப்பு !

“ட்ரிப்” பத்திரிக்கையாளர் சந்திப்பு !

Popular News

  • துருவ் விக்ரம் நடிக்கும் புதிய படம் ‘ஜாக்கி – நோ ரீடேக்ஸ் அலவுட் (Jackie – No Retakes Allowed) ’!!

    0 shares
    Share 0 Tweet 0
  • இந்திய ரசிகர்களுக்கு மிகப்பிடித்த ஃபேமிலி திரில்லர் திரைப்படமான ‘த்ரிஷ்யம் தி கன்குலூஷன்’ (Drishyam The Conclusion) அக்டோபர் 2 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது!

    0 shares
    Share 0 Tweet 0
  • ‘கட்டா குஸ்தி 2’ வெற்றியை கொண்டாடிய படக்குழு… 50வது நாள் நன்றி அறிவிப்பு விழா!

    0 shares
    Share 0 Tweet 0
  • “எனது தயாரிப்பாளர்களை மகிழ்ச்சியடையச் செய்வதே எனது மிகப்பெரிய இலக்கு”…‘மொத ராத்திரி’ படத்தில் இயக்குநராக அறிமுகமாவது குறித்து ராஜா கருப்பசாமி!

    0 shares
    Share 0 Tweet 0
  • செப்டம்பர் 24-இல் வெளியாகிறது! நேச்சுரல் ஸ்டார் நானியின் ‘தி பாரடைஸ்’ – டிரெய்லர் இன்றி புதிய முயற்சி

    0 shares
    Share 0 Tweet 0

Recent News

செப்டம்பர் 24-இல் வெளியாகிறது! நேச்சுரல் ஸ்டார் நானியின் ‘தி பாரடைஸ்’ – டிரெய்லர் இன்றி புதிய முயற்சி

September 14, 2026

‘அன்பில் அவன்’ படத்தின் இரண்டாவது சிங்கிள் “கல்லா நிக்கிறியே” பாடல் வெளியானது !!

September 14, 2026

“ரசிகர்களின் எதிர்பார்ப்பை எகிறவைக்கும் கிரைம் த்ரில்லர்…” ; ‘பீப்’ படம் குறித்து மனம் திறந்த நடிகர் ராகவ்!

September 14, 2026

அரசியலும், சமூக அக்கறையும் சேர்ந்து உருவாகியுள்ள படம் “ஆகாயம் ” தினந்தோறும் நாகராஜ் இயக்கியுள்ளார்.

September 14, 2026

துருவ் விக்ரம் – ரமேஷ் வர்மா கூட்டணியில் உருவாகும் தமிழ்–தெலுங்கு இருமொழி ஆக்‌ஷன் படம்

September 14, 2026

‘தி டார்க் ஹெவன்’ திரைப்பட வெளியீட்டுக்கு முந்தைய அறிமுக விழா!

September 14, 2026
  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2025 Tamil2daynews.com.

error: Content is protected !!
No Result
View All Result
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்

© 2025 Tamil2daynews.com.