• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us
Tamil2daynews
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
Tamil2daynews
No Result
View All Result
Home சினிமா சினிமா செய்திகள்

“ட்ரிப்” பத்திரிக்கையாளர் சந்திப்பு !

by Tamil2daynews
January 26, 2021
in சினிமா செய்திகள்
0
“ட்ரிப்” பத்திரிக்கையாளர் சந்திப்பு !
0
SHARES
19
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp
நரமாமிசம்  உண்ணும் காட்டுவாசி குழுவை மையமாக வைத்து
காமெடி, அட்வெஞ்சர், திரில்லர் பாணியில்,  தமிழில் முதல் முறையாக உருவாகும் படம்  “ட்ரிப்”. பிப்ரவரி 5, 2021 அன்று உலகளவில் திரையரங்கில் வெளியாகவுள்ள இப்படத்தை டென்னிஸ் மஞ்சுநாத் எழுதி இயக்குகிறார். Sai Film Studios சார்பில் A.விஸ்வநாதன் மற்றும் E.பிரவீன்குமார் இப்படத்தை தயாரிக்கிறார்கள். சுனைனா, யோகிபாபு, கருணாகரன், மொட்டை ராஜேந்திரன், பிரவீன் குமார், VJ சித்து, VJ ராகேஷ், கல்லூரி வினோத், ராஜேஷ் சிவா அதுல்யா சந்திரா, லக்‌ஷ்மி ப்ரியா, சத்யா, மேக் மணி, சதீஷ், அருண் ஆகியோர் நடிக்கிறார்கள்.
“ட்ரிப்”  படத்தின் ட்ரெய்லர் படக்குழு மற்றும் பத்திரிக்கையாளர் முன்னிலையானா விழாவில் இன்று வெளியானது.
விழாவினில் இயக்குநர் டென்னிஸ் மஞ்சுநாத் கூறியதாவது…
இயக்குநர் சாம் ஆண்டனின் 100 படத்தில் பணியாற்றியபோது நடிகர் யோகிபாபுவுடன் எனக்கு நல்ல பழக்கம் உண்டானது. ஒரு நல்ல திரைக்கதையுடன் வா என  அப்போது கூறினார். தயாரிப்பாளர்கள் A.விஸ்வநாதன் மற்றும் E.பிரவீன்குமார் என் மீது மிகப்பெரும் நம்பிக்கை கொண்டிருந்தனர். மிகவும் நேர்த்தியான அதே நேரம் ரசிகர்கள் கொண்டாடும்படியான கமர்ஷியல் திரைக்கதையை உருவாக்க நினைத்தேன். தமிழ் சினிமா ஏற்கனவே ஜாம்பிகளை கொண்டு படமெடுத்து விட்டது எனவே நான் கொஞ்சம் வித்தியாசமாக நரமாமிச குழுவை மையப்படுத்தி படமெடுக்க நினைத்தேன். இந்த வகை திரைப்படங்கள் ஹாலிவுட்டில் மிகவும் புகழ்பெற்றவை.  ஆனால் அங்கு ஹாரரும் திரில்லும் கலந்தே எடுப்பார்கள். ஆனால் நான் அதில் ஹியூமரை இணைத்து உருவாக்கினேன். இந்த வகை படம் தமிழ் திரையுலகிற்கு முற்றிலும் புதிதானது. ப்ரியா மிகச்சிறந்த நடிகை. இப்படத்திற்கு பிறகு அவருக்கு நிறைய படங்களில் வாய்ப்பு வரும். திரைக்கதை எழுதும்போதே கல்லூரி தினேஷ் எனது மனதில் இருந்தார். நான்சி ஜெனிஃபர் ஒரு நீண்ட இடைவெளிக்கு பிறகு இப்படம் மூலம் திரைக்கு வந்திருக்கிறார். RJ சித்து அவரது நகைச்சுவைக்காக அதிகம் கொண்டாடப்பட்டிருக்கிறார் ஆனால் இப்படத்தில் முற்றிலும் அவருடைய வேறொரு முகத்தை பார்க்கலாம். VJ வினோத் திடீரென ஒரு கணத்தில்  படத்திற்குள் வந்தார். சுனைனா அவர்கள் இப்படத்தை ஒப்பு கொண்டதிற்காக, அவருக்கு பெரும் நன்றியை தெரிவித்து கொள்கிறேன். அவரை உணர்வூபூர்வமான அல்லது ரொமான்ஸ் கதாபாத்திரங்களில் மட்டுமே பார்த்திருப்பீர்கள். ஆனால் இப்படத்தில் அவரை காமெடி கலந்த ஆக்சன் அவதாரத்தில் காண்பீர்கள். பிரவீன் படம் முழுதும் மிகப்பெரும் துணையாக இருந்தார். ரசிகர்கள் பொழுதுபோக்கிற்காக மிகப்பெரும் தொகையை செலவிடுகிறார்கள் இப்படம் சில மணி நேரம் அவர்களை சந்தோஷப்படுத்துவதாக இருக்கும். நாம் தியேட்டரில் படம் பார்த்து கொண்டாடி ஒரு வருடம் ஆகிவிட்டது. பெரும் முன்னெடுப்பாக துணிந்து திரையரங்கில் படத்தை வெளியிட்டதற்கு ‘மாஸ்டர் மற்றும் ஈஸ்வரன்’ படங்களுக்கு நன்றி தெரிவித்து கொள்கிறேன். அப்படங்களால் தான் எங்கள் படமும் திரையரங்கில் வெளியாகவுள்ளது. சக்திவேலன் அவர்கள் எங்கள் படத்தை பார்த்து, படத்தின் உரிமை பெற்று பெரிய வெளியீடாக திரையிடவுள்ளது எங்களுக்கு பெரும் ஆச்சர்யத்தையும் சந்தோஷத்தையும் தந்துள்ளது. நல்லிதயம் கொண்ட மனிதர். திரைப்படம் பற்றிய அபார அறிவு கொண்டவர். இங்கு அவரது இருப்பு கடவுளின் இருப்பை போன்று பெரும் மகிழ்ச்சியை அளிக்கிறது.
சக்தி ஃபிலிம் பேக்டரி சக்திவேலன் கூறியதாவது..
திரையுலக நணபர்கள் பணியாளர்கள் அனைவருக்கும்
ஊடக நண்பர்களோடான உரையாடல்,   மற்றும் சந்திப்பை நிகழ்த்த முடியாமல் இருப்பது பெரும் வருத்தமிக்க விசயம்.  நடிகர் விஜய்யின் “மாஸ்டர்” திரைப்படம் பெரும் தடைகளை முறியடித்து சாதனை படைத்துள்ளது. பொது முடக்க காலத்தில் யாரும் இனி திரையரங்கிற்கு வரமாட்டார்கள் என்கிற மாயையை “மாஸ்டர்” படம் உடைத்திருக்கிறது. ரசிகர்கள் கொண்டாட்டத்துடன் திரையரங்கில் படத்தை ரசிப்பது பெரும் மகிழ்ச்சியை தந்துள்ளது. ‘மாஸ்டர்’ படத்தால் ஓடிடியில் வெளியிட திட்டமிடப்பட்டிருந்த பல படங்கள் தற்போது பின்வாங்கிட்டன.  சினிமா மீது பெரும் அர்ப்பணிப்பும் காதலும் கொண்ட இப்படத்தின்  தயாரிப்பாளர்களுக்கு பெரும் நன்றியை தெரிவித்து கொள்கிறேன். புதிய வரவுகளை கொண்டு உருவாகும் இப்படத்தின் மீது பெரும் நம்பிக்கையுடன் பெரிய பட்ஜெட்டில் இப்படத்தை எடுத்துள்ளார்கள். யோகிபாபுவை வைத்து இயல்பாக எடுக்கப்படும் பட்ஜெட்டை விட பெரிய பட்ஜெட்டில் இப்படத்தை எடுத்துள்ளார்கள். இப்படத்தில் கண்டிப்பாக நல்ல லாபத்தை அடைவார்கள். பெரும் நம்பிக்கையுடன் இப்படத்தை தயாரித்ததற்கு அவர்களுக்கு வாழ்த்துக்கள். யோகிபாபு, கருணாகரன் முதல் படத்தில் நடித்துள்ள அனைவரும் படத்தை மிகச்சிறப்பான படமாக மாற்றியுள்ளனர். இப்படம் கண்டிப்பாக கமர்ஷியலாக பெரும் வெற்றி பெரும் இப்படத்தில் நானும் பங்கு கொண்டதில் மகிழ்ச்சி.
நடிகர் பிரவீன் குமார் கூறியதாவது…
இயக்குநர் டென்னிஸ்ஸும் நானும் சாம் ஆண்டனின் 100 படத்தின் போதிலிருந்தே நண்பர்கள். அவரும் நானும் பல திரைக்கதைகளை விவாதித்துள்ளோம். இருவரும் ஒருவர் மீது ஒருவர் மிகுந்த மரியாதை வைத்துள்ளோம். இருவரும் வெற்றி பெறுவதை காண ஆவலாக உள்ளோம். மிக நீண்ட இடைவேளைக்கு பிறகு எனக்கான வேலையை நானே உருவாக்கியுள்ளேன். இப்படத்தை ஒப்புக்கொண்டதிற்காக சுனைனாவிற்கு பெரும் நன்றியை தெரிவித்து கொள்கிறேன். அவர் எப்போதும் சவாலான பாத்திரங்களை தேர்ந்தெடுத்து செய்கிறார். அவரது பங்களிப்பு இப்படத்திற்கு பெரும் ஊக்கமாக அமைந்ததது. படத்தின் நடிகர்கள் அனைவரும் தங்களது மிகச்சிறந்த பங்களிப்பை தந்துள்ளனர். படதிற்கு பெரும் தூணாக விளங்கிய தொழிற்நுட்ப குழுவிற்கு மிகப்பெரும் நன்றி. ஹீரோ ஹீரோயினை விட மிகச்சிறப்பான கெமிஸ்ட்ரி இயக்குநருக்கும் ஒளிப்பதிவாளருக்கும் இருந்தது. இப்படத்தில் பாடல்கள் மிக குறைவு ஆனால் பின்னணி இசையில் கலக்கியுள்ளார் சித்து குமார். சக்திவேலன் அவர்களுக்கு பெரிய நன்றி. அவர் இல்லாமல் இத்தனை பெரிய வெளியீடு படத்திற்கு கிடைத்திருக்காது.
நடிகை சுனைனா கூறியதாவது…
இயக்குநர் டென்னிஸ் மிகவும் கடின உழைப்பாளி இப்படத்திற்காக நிறைய ஆராய்ச்சிகள் செய்துள்ளார். படப்பிடிப்பில் நான் பாதுகாப்பாக இருக்கிறேனா என்பதை உறுதிசெய்து என்னை வெகு இயல்பாக பார்த்துகொண்டார். படத்தில் ஒப்பந்தம் செய்யப்பட்ட போது, ஒரு நாயுடன் நடிக்க போவதாக கூறினார்கள் ஆனால் படப்பிடிப்பில் பார்த்தால் பிட்புல் இருந்தது. அதனோடு நடித்தது நல்ல அனுபவமாக இருந்தது. முதலில் என்னோடு நட்பாக இருக்குமா என்கிற சந்தேகம் இருந்தது. ஆனால் போகப்போக நாங்கள் நண்பர்களாக ஆகிவிட்டோம். இருவரும் இணைந்து ஆக்சன் காட்சியில் நடித்துள்ளோம். படத்தில் உழைத்தவர்களுக்கும் பெரும் துணையாக இருந்த அனைவருக்கும் எனது நன்றி.
நடிகர் கருணாகரன் கூறியதாவது…
இப்படத்தில் பணிபுரிந்தது மிக அற்புதமான ஒரு அனுபவமாக இருந்தது. எனக்கு மிகுந்த ஆச்சர்யம் அளித்தது இப்படத்தின் ஹிரோயின்கள் தான். அவர்களது இயல்பான நிலையிலிருந்து வெளிவந்து ஆக்சன் காட்சிகள் முதற்கொண்டு மிகுந்த ஈடுபாட்டுடன் நடித்துள்ளார்கள். ராகேஷ் இப்படத்தின் மூலம் எனக்கு மிகச்சிறந்த நண்பராக மாறிவிட்டார். டிஸ்கவரி தமிழ் சேனலில் தொகுப்பாளராக எனக்கு பயிற்சி அளித்தார். அந்த சேனலில் எனது பணியை பார்த்தது எல்லோரும் ஆச்சர்யப்பட்டார்கள். அனைத்து புகழும் ராகேஷுக்கு உரித்தானது. இன்று சிவகார்த்திகேயனின் அயலான் படத்தின் இறுதி நாள் படப்பிடிப்பு அங்கிருந்து மன்னிப்பு கேட்டு இங்கு வந்துள்ளேன். இப்படக்குழுவினரின் கடின உழைப்பே அதற்கு காரணம்.
தயாரிப்பாளர் விஸ்வநாதன் கூறியதாவது…
திரை உலகில் எனக்கு தெரிந்த ஒரே நபர் டென்னிஸ் மட்டும் தான். அவர் என்னிடம் திரைக்கதையை சொன்ன விதம் அபாரமாக இருந்தது. என்னால் காட்சிகளை கண் முன்னால் பார்க்க முடிந்தது. அட்டகாசமான நடிகர் குழுவால் திரைக்க்கதை காட்சிகளாக மேலும் மெருகு கூடியுள்ளது. யோகி பாபு, கருணாகரன் முதல் அனைவரும் அற்புதமான நடிப்பை தந்துள்ளார்கள். பிரவீன் நாயகனாக தேர்ந்தெடுக்கப்பட்ட பிறகு, நாயகிக்காக நிறைய பேரை தேடினோம். சுனைனா இப்படத்தை ஒப்புகொண்டதற்கு நன்றி. அதுல்யா மலையாள திரை உலகில் ஏற்கனவே 3 படங்கள் செய்து பிரபலமானவர். நடிகர் மம்முட்டியுடன் நடித்துள்ளார். இயக்குநர் டென்னிஸ், ஒளிப்பதிவாளர் இசையமைப்பாளர் மற்றும் எடிட்டர் இப்படத்தின் பெரும் தூணாக இருந்தனர். இப்படத்தை மிகப்பெரும் வெளியீடாக மாற்றிய சக்திவேலன் அவர்களுக்கு நன்றி.
இசையமைப்பாளர் சித்து கூறியதாவது…
இயக்குநர் என்னிடம் திரைக்கதையை கூறிய போது பாடல்கள் குறித்து கேட்டேன் ஆனால் அவரோ படத்தில் இரண்டு பாடல்கள் தான் அதிலும் ஒன்று புரமோவிற்காக என்று அதிர்ச்சியை தந்தார். ஆனால் படத்தில் பிண்ணனி இசை மற்றும் ரெக்கார்டிங்கில் என் திறமையை வெளிப்படுத்தியுள்ளேன்.
ஒளிப்பதிவாளர் உதயசங்கர் கூறியதாவது…
தங்களது சொந்த படம் போல் பணியாற்றிய எனது உதவியாளர்களுக்கு முதலில் நன்றியை தெரிவித்து கொள்கிறேன். இப்படத்தில் என்னை தேர்ந்தெடுத்ததற்கு இயக்குநர் டென்னிஸ்ஸிற்கு நன்றியை தெரிவித்து கொள்கிறேன். படத்தின் அனைத்து நடிகர்களும் தொழிற்நுட்ப கலைஞர்களும் மிகுந்த ஈடுபாட்டுடனும் உற்சாகத்துடனும் பணியாற்றியுள்ளனர். அது படத்திலும் பிரதிபலித்துள்ளது.
Previous Post

“சைக்கோ” முதல் வருட கொண்டாட்டம் ! 

Next Post

நடிகர் அருண் விஜய் தனது மகன் அர்னவ்வுடன் இணைந்து  நடிக்கிறார் ! 

Next Post
நடிகர் அருண் விஜய் தனது மகன் அர்னவ்வுடன் இணைந்து  நடிக்கிறார் ! 

நடிகர் அருண் விஜய் தனது மகன் அர்னவ்வுடன் இணைந்து  நடிக்கிறார் ! 

Popular News

  • துருவ் விக்ரம் நடிக்கும் புதிய படம் ‘ஜாக்கி – நோ ரீடேக்ஸ் அலவுட் (Jackie – No Retakes Allowed) ’!!

    0 shares
    Share 0 Tweet 0
  • இந்திய ரசிகர்களுக்கு மிகப்பிடித்த ஃபேமிலி திரில்லர் திரைப்படமான ‘த்ரிஷ்யம் தி கன்குலூஷன்’ (Drishyam The Conclusion) அக்டோபர் 2 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது!

    0 shares
    Share 0 Tweet 0
  • ‘கட்டா குஸ்தி 2’ வெற்றியை கொண்டாடிய படக்குழு… 50வது நாள் நன்றி அறிவிப்பு விழா!

    0 shares
    Share 0 Tweet 0
  • “எனது தயாரிப்பாளர்களை மகிழ்ச்சியடையச் செய்வதே எனது மிகப்பெரிய இலக்கு”…‘மொத ராத்திரி’ படத்தில் இயக்குநராக அறிமுகமாவது குறித்து ராஜா கருப்பசாமி!

    0 shares
    Share 0 Tweet 0
  • செப்டம்பர் 24-இல் வெளியாகிறது! நேச்சுரல் ஸ்டார் நானியின் ‘தி பாரடைஸ்’ – டிரெய்லர் இன்றி புதிய முயற்சி

    0 shares
    Share 0 Tweet 0

Recent News

செப்டம்பர் 24-இல் வெளியாகிறது! நேச்சுரல் ஸ்டார் நானியின் ‘தி பாரடைஸ்’ – டிரெய்லர் இன்றி புதிய முயற்சி

September 14, 2026

‘அன்பில் அவன்’ படத்தின் இரண்டாவது சிங்கிள் “கல்லா நிக்கிறியே” பாடல் வெளியானது !!

September 14, 2026

“ரசிகர்களின் எதிர்பார்ப்பை எகிறவைக்கும் கிரைம் த்ரில்லர்…” ; ‘பீப்’ படம் குறித்து மனம் திறந்த நடிகர் ராகவ்!

September 14, 2026

அரசியலும், சமூக அக்கறையும் சேர்ந்து உருவாகியுள்ள படம் “ஆகாயம் ” தினந்தோறும் நாகராஜ் இயக்கியுள்ளார்.

September 14, 2026

துருவ் விக்ரம் – ரமேஷ் வர்மா கூட்டணியில் உருவாகும் தமிழ்–தெலுங்கு இருமொழி ஆக்‌ஷன் படம்

September 14, 2026

‘தி டார்க் ஹெவன்’ திரைப்பட வெளியீட்டுக்கு முந்தைய அறிமுக விழா!

September 14, 2026
  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2025 Tamil2daynews.com.

error: Content is protected !!
No Result
View All Result
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்

© 2025 Tamil2daynews.com.