• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us
Tamil2daynews
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
Tamil2daynews
No Result
View All Result
Home சினிமா சினிமா செய்திகள்

அமெரிக்க கோல்டன் குளோப்பில் பாராட்டு பெற்ற “பார்த்திபனின் ஒத்த செருப்பு” சைஸ் 7 படம் !

by Tamil2daynews
October 24, 2019
in சினிமா செய்திகள்
0
அமெரிக்க கோல்டன் குளோப்பில் பாராட்டு பெற்ற “பார்த்திபனின் ஒத்த செருப்பு” சைஸ் 7 படம் !
0
SHARES
15
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

 

இராதாகிருஷ்ணன் பார்த்திபன் தமிழ் சினிமாவின் அடையாளமாக, பல பரிசோதனை முயற்சிகளுக்கு  முன் மாதிரியாக,  வெற்றியாளராக விளங்குபவர். அவரது சமீபத்திய படமான “ஒத்த செருப்பு சைஸ் 7” ரசிகர்களின் இதயங்களை அள்ளியதோடல்லாமல் Asia and India Book of Records ல் ஒருவரால் இயக்கி, நடித்து தயாரித்து உருவாக்கப்பட்ட படம் என்கிற சாதனைக்காக பதிவு  செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில் அமெரிக்காவில் கோல்டன் குளோப் ஜீரி மெம்பர்களுக்காக நிகழ்த்தப்பட்ட  திரையிடலில் பெரும் பாராட்டை குவித்துள்ளது. மாறுபட்ட முயற்சியாக அனைவரும் இப்படத்தினை பாராட்டியுள்ளனர். மேலும் ஆஸ்கர் அகாடமி குழு நாளை அக்டோபர் 24 அன்று இப்படத்தை பார்க்கவுள்ளது மேலும் தமிழ் சினிமாவுக்கு மேலும்  பெருமைகொள்ளும் தருணமாக உள்ளது.

இது பற்றி இயக்குநர் பார்த்திபன் கூறியதாவது…,

நான் முன்பே பலமுறை கூறியது போல் “ஒத்த செருப்பு  சைஸ் 7” படத்தின் உருவாக்கம் என்பது உணர்ச்சிபூர்வமானதும் பல்வேறு சவால்கள் நிறைந்தததுமாகும். அந்த தருணங்களில் எனக்கு  உற்சாகம் தந்தது இப்படத்தை ரசிகர்கள் ஏற்றுக்கொள்வார்கள் எனும் எண்ணம் தான். நமது ரசிகர்கள் தாண்டி தற்போது உலகளவில் இப்படத்திற்கு கிடைக்கும் பெரும் மரியாதையும், பராட்டும் என்னை நெகிழச்செய்வதாக உள்ளது. கோல்டன் குளோப் மெம்பர்களின் திரையிடல் என்பது எனக்கு வைக்கப்பட்ட உச்சபட்ச பரிட்சை போன்றிருந்தது. திரையிடலுக்கு பிறகு அவர்கள் என்னிடம் நெருக்கமாக உரையாடியதும், படம் பற்றி நிறைய விஷயங்கள் விவாதித்ததும் மனதுக்கு நெகிழ்வாக இருந்தது. மேலும் படத்தினை மாறுபட்டதொரு முயற்சியாக அவர்கள் பாராட்டியது எனக்கு கிடைத்த மிகப்பெரும் அங்கீகாரமாக கருதுகிறேன். மேலும் இப்போது ஆஸ்கார் அகாடமி குழு திரையிடலுக்காக ஆவலுடன் காத்திருக்கிறேன்.

அமெரிக்காவில் (Metroplex Tamil Sangam at Dallas City ) மெட்ரோ பிளக்ஸ் தமிழ் சங்கம் டல்லாஸ் நகரக் குழு ஏற்பாடு செய்துள்ள இரவுணவுடன் கூடிய திரையிடலும் உரையாடலும் Fun Movie Grill Multiplex, Carrollton in Dallas ல் மாலை  4 மணி, அக்டோபர்  26 அன்று நடைபெற இருப்பது எனக்கு மேலும் பேருவகை அளிப்பதாக உள்ளது. இத்திரையிடலை ஏற்பாடு செய்த அவர்களுக்கு என் மனம்கனிந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.

Tags: Oththa Seruppu Size 7Radhakrishnan Parthipenஒத்த செருப்பு” சைஸ் 7பார்த்திபன்
Previous Post

சிபிராஜ் நடிக்கும் சஸ்பென்ஸ், எமோஷனல் திரில்லர் படத்திற்கு ‘கபடதாரி’ என்று பெயர் அறிவிப்பு

Next Post

“இசையுலகில் புது புரட்சி” அடுத்தடுத்து விருதுகளைக் குவிக்கும் பா.இரஞ்சித்தின் இசைக்குழு!!

Next Post
“இசையுலகில் புது புரட்சி” அடுத்தடுத்து விருதுகளைக் குவிக்கும் பா.இரஞ்சித்தின் இசைக்குழு!!

"இசையுலகில் புது புரட்சி" அடுத்தடுத்து விருதுகளைக் குவிக்கும் பா.இரஞ்சித்தின் இசைக்குழு!!

Popular News

  • ‘அன்பில் அவன்’ படத்தின் இரண்டாவது சிங்கிள் “கல்லா நிக்கிறியே” பாடல் வெளியானது !!

    0 shares
    Share 0 Tweet 0
  • துருவ் விக்ரம் நடிக்கும் புதிய படம் ‘ஜாக்கி – நோ ரீடேக்ஸ் அலவுட் (Jackie – No Retakes Allowed) ’!!

    0 shares
    Share 0 Tweet 0
  • இந்திய ரசிகர்களுக்கு மிகப்பிடித்த ஃபேமிலி திரில்லர் திரைப்படமான ‘த்ரிஷ்யம் தி கன்குலூஷன்’ (Drishyam The Conclusion) அக்டோபர் 2 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது!

    0 shares
    Share 0 Tweet 0
  • ‘என்ன விலை’ திரைப்படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா!

    0 shares
    Share 0 Tweet 0
  • KRG கண்ணன் ரவியின் பிரம்மாண்ட தயாரிப்பில் கவுதம் ராம் கார்த்திக் கூட்டணியில் உருவாகும் புதிய படத்தின் படப்பிடிப்பு துவக்கம்!

    0 shares
    Share 0 Tweet 0

Recent News

செப்டம்பர் 24-இல் வெளியாகிறது! நேச்சுரல் ஸ்டார் நானியின் ‘தி பாரடைஸ்’ – டிரெய்லர் இன்றி புதிய முயற்சி

September 14, 2026

‘அன்பில் அவன்’ படத்தின் இரண்டாவது சிங்கிள் “கல்லா நிக்கிறியே” பாடல் வெளியானது !!

September 14, 2026

“ரசிகர்களின் எதிர்பார்ப்பை எகிறவைக்கும் கிரைம் த்ரில்லர்…” ; ‘பீப்’ படம் குறித்து மனம் திறந்த நடிகர் ராகவ்!

September 14, 2026

அரசியலும், சமூக அக்கறையும் சேர்ந்து உருவாகியுள்ள படம் “ஆகாயம் ” தினந்தோறும் நாகராஜ் இயக்கியுள்ளார்.

September 14, 2026

துருவ் விக்ரம் – ரமேஷ் வர்மா கூட்டணியில் உருவாகும் தமிழ்–தெலுங்கு இருமொழி ஆக்‌ஷன் படம்

September 14, 2026

‘தி டார்க் ஹெவன்’ திரைப்பட வெளியீட்டுக்கு முந்தைய அறிமுக விழா!

September 14, 2026
  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2025 Tamil2daynews.com.

error: Content is protected !!
No Result
View All Result
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்

© 2025 Tamil2daynews.com.