• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us
Tamil2daynews
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
Tamil2daynews
No Result
View All Result
Home சினிமா சினிமா செய்திகள்

சிபிராஜ் நடிக்கும் சஸ்பென்ஸ், எமோஷனல் திரில்லர் படத்திற்கு ‘கபடதாரி’ என்று பெயர் அறிவிப்பு

by Tamil2daynews
October 24, 2019
in சினிமா செய்திகள்
0
சிபிராஜ் நடிக்கும் சஸ்பென்ஸ், எமோஷனல் திரில்லர் படத்திற்கு ‘கபடதாரி’ என்று பெயர் அறிவிப்பு
0
SHARES
23
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

கிரியேட்டிவ்  என்டர்டெயின்மெண்ட் அண்ட் டிஸ்ட்ரிபியூட்டர்ஸ் வழங்கும் பிரதீப் கிருஷ்ணமூர்த்தி இயக்கத்தில் சிபிராஜ் நாயகனாக நடிக்கும் சஸ்பென்ஸ், எமோஷனல் திரில்லராக உருவாகும் படத்திற்கு இதுவரை பெயர் சூட்டப்படாமல் இருந்தது. தற்போது அப்படத்திற்கு ‘கபடதாரி‘ என்று பெயர் வைத்திருக்கிறார்கள். ‘கபடதாரி’ என்றால் பாசாங்குக்காரன்/வேஷக்காரன் என்று பொருள். சிபிராஜுடன் நாசரும் நடிப்பதாக முடிவாகிவிட்ட நிலையில் சமீபத்தில் சிபிராஜ் ஜோடியாக நந்திதா ஸ்வேதா ஒப்பந்தமாகியிருந்தார். இவர்களுடன் ஜெயபிரகாஷ், ஜே.சதிஷ் குமார், மயில்சாமி மற்றும் சில முக்கிய நடிகர்கள் நடிக்கிறார்கள்.


சிபிராஜ் இதுவரை நடித்த ஏற்று நடித்த பாத்திரங்களை விட இந்த படத்தில் முக்கியமான மற்றும் வித்தியாசமான கதாபாத்திரமாக இருக்கும் என்கிறார் இப்படத்தின் கிரியேட்டிவ் தயாரிப்பாளர் Dr. கோ. தனஞ்செயன். லலிதா தனஞ்செயன் படத்தைத் தயாரிக்க, பிரதீப் கிருஷ்ணமூர்த்தி இயக்குகிறார். கதையை எம்.ஹேமந்த் ராவ் எழுத, திரைக்கதையையும் வசனங்களையும் இயக்குநர் மகேந்திரனின் மகன் ஜான் மகேந்திரனும், Dr.கோ. தனஞ்செயனும் ஏற்கிறார்கள். கலை இயக்குநராக விதேஷ் பணியாற்ற, சில்வா சண்டை காட்சிகளை அமைக்க,  பிரவீன் கே.எல். படத்தொகுப்பு பணியைச் செய்கிறார். சைமன் கே கிங் இசையமைக்க, பாடல்களை வைரமுத்து மற்றும் கு. கார்த்திக் எழுதுகிறார்கள். ராசாமதி ஒளிப்பதிவு செய்கிறார். வணிகத்தை எஸ்.சரவணன் தலைமையேற்க, நிர்வாக தயாரிப்பு என்.சுப்பிரமணியன் கவனிக்கிறார்.

இப்படத்தின் படப்பிடிப்பு  வரும் நவம்பர் 1-ஆம் தேதி துவங்குகிறது. சென்னை மற்றும் ஹைதராபாத் நகரத்தில் முக்கியமான இடங்களில் படப்பிடிப்பு நடத்தவுள்ளார்கள். ஒரே கட்டமாக முழுவீச்சில் நடைபெற்று மார்ச் 2020-ல் உலகளாவிய திரையரங்கில் வெளியிடப்படும்.

 

https://youtu.be/8mDxGdDi1Zw

 

 

 

 

Tags: KabadadaariNanditha ShwethaSibiraj
Previous Post

அன்பு தனது தந்தை மயிலசாமியிடம் இருக்கும் பல நல்ல விஷங்களைக் கற்றுக் கொள்ள வேண்டும் – நடிகர் விஜய் சேதுபதி

Next Post

அமெரிக்க கோல்டன் குளோப்பில் பாராட்டு பெற்ற “பார்த்திபனின் ஒத்த செருப்பு” சைஸ் 7 படம் !

Next Post
அமெரிக்க கோல்டன் குளோப்பில் பாராட்டு பெற்ற “பார்த்திபனின் ஒத்த செருப்பு” சைஸ் 7 படம் !

அமெரிக்க கோல்டன் குளோப்பில் பாராட்டு பெற்ற “பார்த்திபனின் ஒத்த செருப்பு” சைஸ் 7 படம் !

Popular News

  • ‘அன்பில் அவன்’ படத்தின் இரண்டாவது சிங்கிள் “கல்லா நிக்கிறியே” பாடல் வெளியானது !!

    0 shares
    Share 0 Tweet 0
  • துருவ் விக்ரம் நடிக்கும் புதிய படம் ‘ஜாக்கி – நோ ரீடேக்ஸ் அலவுட் (Jackie – No Retakes Allowed) ’!!

    0 shares
    Share 0 Tweet 0
  • இந்திய ரசிகர்களுக்கு மிகப்பிடித்த ஃபேமிலி திரில்லர் திரைப்படமான ‘த்ரிஷ்யம் தி கன்குலூஷன்’ (Drishyam The Conclusion) அக்டோபர் 2 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது!

    0 shares
    Share 0 Tweet 0
  • ‘என்ன விலை’ திரைப்படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா!

    0 shares
    Share 0 Tweet 0
  • KRG கண்ணன் ரவியின் பிரம்மாண்ட தயாரிப்பில் கவுதம் ராம் கார்த்திக் கூட்டணியில் உருவாகும் புதிய படத்தின் படப்பிடிப்பு துவக்கம்!

    0 shares
    Share 0 Tweet 0

Recent News

செப்டம்பர் 24-இல் வெளியாகிறது! நேச்சுரல் ஸ்டார் நானியின் ‘தி பாரடைஸ்’ – டிரெய்லர் இன்றி புதிய முயற்சி

September 14, 2026

‘அன்பில் அவன்’ படத்தின் இரண்டாவது சிங்கிள் “கல்லா நிக்கிறியே” பாடல் வெளியானது !!

September 14, 2026

“ரசிகர்களின் எதிர்பார்ப்பை எகிறவைக்கும் கிரைம் த்ரில்லர்…” ; ‘பீப்’ படம் குறித்து மனம் திறந்த நடிகர் ராகவ்!

September 14, 2026

அரசியலும், சமூக அக்கறையும் சேர்ந்து உருவாகியுள்ள படம் “ஆகாயம் ” தினந்தோறும் நாகராஜ் இயக்கியுள்ளார்.

September 14, 2026

துருவ் விக்ரம் – ரமேஷ் வர்மா கூட்டணியில் உருவாகும் தமிழ்–தெலுங்கு இருமொழி ஆக்‌ஷன் படம்

September 14, 2026

‘தி டார்க் ஹெவன்’ திரைப்பட வெளியீட்டுக்கு முந்தைய அறிமுக விழா!

September 14, 2026
  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2025 Tamil2daynews.com.

error: Content is protected !!
No Result
View All Result
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்

© 2025 Tamil2daynews.com.