• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us
Tamil2daynews
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
Tamil2daynews
No Result
View All Result
Home சினிமா சினிமா செய்திகள்

“பிளான் பண்ணி பண்ணனும்” குடும்பங்கள் கொண்டாடும்,  மிகச்சிறந்த பொழுதுபோக்கு திரைப்படமாக இருக்கும் – இயக்குநர் பத்ரி வெங்கடேஷ் !

by Tamil2daynews
January 1, 2022
in சினிமா செய்திகள்
0
“பிளான் பண்ணி பண்ணனும்” குடும்பங்கள் கொண்டாடும்,  மிகச்சிறந்த பொழுதுபோக்கு திரைப்படமாக இருக்கும் – இயக்குநர் பத்ரி வெங்கடேஷ் !
0
SHARES
8
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

சமீபத்திய ஆண்டுகளில், நல்ல தரத்துடன் கூடிய காமெடி திரைப்படங்கள், கோலிவுட்டில்  மிக அரிதானதாகிவிட்டது. பரபர க்ரைம் த்ரில்லர்கள், முதுகெலும்பை சில்லிட வைக்கும் பேய் கதைகள், கோலிவுட் களத்தை அதிகளவில் ஆக்கிரமித்து, திரை அரங்குகளை மன அழுத்தமுடன் கூடிய பகுதியாகவே வைத்துள்ளது. ஆனால் இந்த ஆண்டு முடிவடையும் நிலையில், இந்த நிலையை முற்றிலும் மாற்றியமைக்கும் வகையில், இயக்குநர் பத்ரி வெங்கடேஷ் இயக்கத்தில், ரியோ ராஜ்-ரம்யா நம்பீசன் நடிப்பில், ரசிகர்களை வயிறு குலுங்க சிரிக்க வைக்கும்,  மிகச்சிறந்த காமெடி சரவெடியாக “பிளான் பண்ணி பண்ணனும்” திரைப்படம் டிசம்பர் 30, 2021 அன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியானது. இந்த தொற்று நோய் காலகட்டம், நம அனைவருக்கும் தீவிரமான மன அழுத்தத்தை தந்துள்ளது. அதன் தீவிரத்தை போக்க,  நாம் அனைவருமே வாய்விட்டு சிரிக்க, சிரிப்பு மருந்து தேவை, அந்த மருந்தை,  ரசிகர்கள்  திரையரங்கில்  “பிளான் பண்ணி பண்ணனும்” படத்தில் உற்சாகத்துடன் அனுபவிப்பார்கள் என்கிறார் இயக்குநர் பத்ரி வெங்கடேஷ்.

‘திரையரங்கு’ என்ற சொல்லைக் குறிப்பிடுகையில், ரசிகர்களுக்கு அந்த அனுபவத்தை தந்ததற்காக தனது தயாரிப்பாளர்களான ராஜேஷ் குமார் மற்றும் L.சிந்தன் ஆகியோருக்கு மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். திரையரங்கு வெளியீட்டில் அவர்களின் மன உறுதியை விவரிக்க என்னிடம் வார்த்தைகள் இல்லை. இது ஒரு வழக்கமான அறிக்கை போல் தோன்றலாம், ஆனால் அதுதான் உண்மை. திரையரங்குகளில் நகைச்சுவை வேண்டும் என்பது காலத்தின் தேவையாகும், மேலும் எங்கள் படம் பார்வையாளர்களை குதூகலப்படுத்தி மகிழ்விக்கும், என்றார் இயக்குநர் பத்ரி வெங்கடேஷ்.

இப்படத்தின் நடிகர் குழுவுடன் பணிபுரிந்த அனுபவம் குறித்து இயக்குநர்  பத்ரி வெங்கடேஷ் கூறும்போது.., இப்படத்தில் அடல்ட் காமெடி அம்சங்கள்  ஏதேனும் உள்ளதா?, என்று பலர் என்னிடம் கேட்கிறார்கள். குடும்ப பார்வையாளர்களின், குறிப்பாக குழந்தைகளின் இதயங்களை வென்ற நடிகர் ரியோ ராஜ் போன்ற ஒரு நடிகர் படத்தில் இருக்கும்போது, அவரது இமேஜைக் கெடுப்பது நியாயமற்றது. மேலும், எனக்கு பதினாறு வயதுடைய ஒரு மகள் இருக்கிறாள், அதனால் படத்தில் அத்தகைய அம்சங்களை வைப்பது, ஒரு தந்தையாக அவமானமாக இருக்கும்.  “பிளான் பண்ணி பண்ணனும்”   படத்தை தூய்மையான பொழுதுபோக்கு திரைப்படமாக, பார்வையாளர்கள் முழுமையாக ரசிப்பார்கள். ரம்யா நம்பீசனைப் பற்றி கூறுவதென்றால், நான் முதலில் அவரை ‘ஒழுக்கவாதி’ என்று தான்  முத்திரை குத்துவேன், அதன் பிறகு தான் நடிகை என்பதெல்லாம். அவர்  சிறிய விவரங்களில் கூட மிக ஆர்வமாக இருக்கிறார், நேரத்தை சரியாக கடைபிடிக்கும் அவரது நேர்மை பிரமிப்பானது. நடிகர் பால சரவணன் இந்த படத்திற்கு ஒரு தூணாக இருந்துள்ளார் அவரது நகைச்சுவை உணர்வு,  இந்த காமெடி படத்திற்கு  மிகப்பெரும் பலமாக இருந்துள்ளது. M.S.பாஸ்கர், ரோபோ ஷங்கர், தங்கதுரை உள்ளிட்ட அனைத்து நடிகர்களுக்கும்  இந்த படத்திற்கு பெரும் உறுதுணையாக இருந்த அனைவருக்கும் நன்றி. யுவன் ஷங்கர் ராஜாவுடன் “பிளான் பண்ணி பண்ணனும்”   எனது நான்காவது படம், அவரது அற்புதமான இசை, மிகப்பெரிய இடத்திற்கு எடுத்து சென்றுள்ளது. மேலும்  எனது தொழில்நுட்பக் குழுவினரின் அர்ப்பணிப்பு மிக்க உழைப்பிற்கு நன்றி என்று கூறியுள்ளார்.

“பிளான் பண்ணி பண்ணனும்”  திரைப்படத்தை இயக்குநர் பத்ரி வெங்கடேஷ் இயக்கியுள்ளார் மற்றும் Positive Print Studios LLP சார்பில் தயாரிப்பாளர்கள் ராஜேஷ் குமார்-L சிந்தன்  இப்படத்தை தயாரித்துள்ளார். யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார், B ராஜேகர் ஒளிப்பதிவு செய்துள்ளார், சாம் RDX படத்தொகுப்பாளராக பணியாற்றியுள்ளார். “பிளான் பண்ணி பண்ணனும்” திரைப்படம் டிசம்பர் 30, 2021 அன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியானது.

Previous Post

மீண்டும் மிகுந்த வலிமையுடன் “மைக்” மோகன்  திரையில்..!

Next Post

குடும்ப ரசிகர்கள்   “அன்பறிவு” படத்தில்  அனுபவிக்கவும், ரசிக்கவும் ஏராளமான பொழுதுபோக்குகள் அம்சங்கள் இருக்கும்” – நடிகை காஷ்மீரா பர்தேஷி !

Next Post
குடும்ப ரசிகர்கள்   “அன்பறிவு” படத்தில்  அனுபவிக்கவும், ரசிக்கவும் ஏராளமான பொழுதுபோக்குகள் அம்சங்கள் இருக்கும்” – நடிகை காஷ்மீரா பர்தேஷி !

குடும்ப ரசிகர்கள்   “அன்பறிவு” படத்தில்  அனுபவிக்கவும், ரசிக்கவும் ஏராளமான பொழுதுபோக்குகள் அம்சங்கள் இருக்கும்” - நடிகை காஷ்மீரா பர்தேஷி !

Popular News

  • பூச்சிக்கொல்லி விவசாயத்தின் மறைக்கப்பட்ட உண்மையை வெளிச்சமிடும் ‘தி இந்தியா ஸ்டோரி’ டீசர் வெளியீடு!

    0 shares
    Share 0 Tweet 0
  • ஒவ்வொரு பயணத்திற்கும் முடிவு உண்டு…விஷன் சினிமா ஹவுஸின் ‘ஹைக்கூ’ திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவு!

    0 shares
    Share 0 Tweet 0
  • “நான் ஒரு புதிய நாட்டில் விழித்தெழுந்தாலும், அங்கும் என்னை மக்கள் அடையாளம் கண்டுகொள்கிறார்கள்” – ‘பாகுபலி’ உலகளாவிய தாக்கம் குறித்து பிரபாஸ் உலகின் எந்த நாட்டுக்குச் சென்றாலும் யாராவது ஒருவர் வந்து ‘பாகுபலி’ என்று அழைத்துவிடுகிறார்கள்.”-பிரபாஸ்

    0 shares
    Share 0 Tweet 0
  • என்னை நம்பாமலேயே என் படத்தில் நடித்தார்கள்: ‘தி டார்க் ஹெவன்’ இயக்குநர் பாலாஜி பேச்சு!

    0 shares
    Share 0 Tweet 0
  • பி கே ஆர் ப்ரொடக்ஷன்ஸ் சார்பில் பிரணய் காளியப்பன் வெளியிடும் அருபீ திரைப்படம்

    0 shares
    Share 0 Tweet 0

Recent News

பூச்சிக்கொல்லி விவசாயத்தின் மறைக்கப்பட்ட உண்மையை வெளிச்சமிடும் ‘தி இந்தியா ஸ்டோரி’ டீசர் வெளியீடு!

June 29, 2026

ஒவ்வொரு பயணத்திற்கும் முடிவு உண்டு…விஷன் சினிமா ஹவுஸின் ‘ஹைக்கூ’ திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவு!

June 29, 2026

“நான் ஒரு புதிய நாட்டில் விழித்தெழுந்தாலும், அங்கும் என்னை மக்கள் அடையாளம் கண்டுகொள்கிறார்கள்” – ‘பாகுபலி’ உலகளாவிய தாக்கம் குறித்து பிரபாஸ் உலகின் எந்த நாட்டுக்குச் சென்றாலும் யாராவது ஒருவர் வந்து ‘பாகுபலி’ என்று அழைத்துவிடுகிறார்கள்.”-பிரபாஸ்

June 29, 2026

என்னை நம்பாமலேயே என் படத்தில் நடித்தார்கள்: ‘தி டார்க் ஹெவன்’ இயக்குநர் பாலாஜி பேச்சு!

June 29, 2026

பி கே ஆர் ப்ரொடக்ஷன்ஸ் சார்பில் பிரணய் காளியப்பன் வெளியிடும் அருபீ திரைப்படம்

June 29, 2026

அட்டாக்கர் படத்தின் படப்பிடிப்பு துவங்கியது

June 25, 2026
  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2025 Tamil2daynews.com.

error: Content is protected !!
No Result
View All Result
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்

© 2025 Tamil2daynews.com.