கவிஞர் வைரமுத்து பிறந்தநாள் விழா, ஆரூர் தமிழ்நாடனுக்கு விருது வழங்கப்பட்டது
கவிஞர் வைரமுத்துவின் பிறந்தநாளை வெற்றித் தமிழர் பேரவை ஆண்டுதோறும் கவிஞர்கள் திருநாளாகக் கொண்டாடி வருகிறது.
வெற்றித் தமிழர் பேரவை ஒவ்வோராண்டும் கவிஞர் வைரமுத்துவின் பிறந்தநாளை முன்னிட்டு ஒரு கவிஞரைத் தேர்வு செய்து கவிஞர்கள் திருநாள் விருது வழங்கி வருகிறது. இந்த ஆண்டு கவிஞர்கள் திருநாள் விருதை கவிஞர் ஆரூர் தமிழ்நாடன் பெற்றார்.
அவருக்குக் கவிஞர் வைரமுத்து விருது வழங்கினார். கவிஞர் வைரமுத்து கல்வி அறக்கட்டளை வழங்கும் இந்த விருது ரூ.25,000 ரொக்கம், பாராட்டுப் பட்டயம் மற்றும் சால்வை கொண்டதாகும்.
விழாவின் தொடக்கமாக ஆலாப் ராஜூ – வர்ஷா இசைக் குழுவினர் கவிஞர் வைரமுத்துவின் தமிழிசைப் பாடல்களைப் பாடினார்கள்.
விழா ஏற்பாடுகளை சென்னை மாவட்ட வெற்றித் தமிழர் பேரவையின் சார்பில் வி.பி.குமார், வெங்கடேஷ், தமிழரசு, காதர்மைதீன், செல்லத்துரை, சண்முகம், ராஜசேகர், நாசர், மாந்துறைஜெயராமன், தமிழ்ச்செல்வன் உள்ளிட்டோர் சிறப்பாக செய்திருந்தனர்.