• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us
Advertisement
Tamil2daynews
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
Tamil2daynews
No Result
View All Result
Home சினிமா சினிமா செய்திகள்

சிகரங்களை தொடும் வருண் !

by Tamil2daynews
December 30, 2021
in சினிமா செய்திகள்
0
சிகரங்களை தொடும் வருண் !
0
SHARES
3
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

நம்மில் உள்ள புதுமையும், தடைகளை உடைத்து பயணிக்கும் தலைமையும்,  முன்கூட்டியே திட்டமிடப்பட்டு நடக்கும் செயல் அல்ல, அது  இயற்கையாக நடக்கும் ஒன்று. பிக்பாஸ் நிகழ்ச்சி பல ஆண்டுகளாக ஒரே வகையில், வழக்கமான பாணியில் வெற்றிகரமாக நிகழ்ந்துகொண்டிருக்கும் ஒரு நிகழ்வு.  ஆனால் நடிகர் வருண் அதன் இலக்கணங்களை மீறி, தடையை உடைத்து, அந்நிகழ்ச்சியில் தன்னை தனித்து நிறுத்தி, ஒரு முன்னோடியாக மாறியிருக்கிறார். இதன் மூலம் அவரது பண்பும், திறமையும் தனித்தன்மையும் மிக அழகாக வெளிப்பட்டுள்ளது. ஆம்! பிக் பாஸின் முந்தைய சீசன்கள், ஒரு போட்டியாளர் பட்டத்தை வென்ற பின்னரோ அல்லது குறைந்த பட்சம் ரன்னர்-அப் அந்தஸ்தையோ பெற்ற பின்னரே, தலைப்புச் செய்திகளில் இடம்பிடிக்கும் எனும் முறையை தெளிவாக நிறுவியுள்ளது. மாறாக, நடிகர் வருண், 84 நாட்கள் தன் திறமையால் அவ்வீட்டில் தங்கி பிறகு பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியில் வரும்போது, புகழ்வெளிச்சத்தை  தன் மீது ஏற்றி வைத்து, மிகச்சிறந்த போட்டியாளர் எனும் பாராட்டை ரசிகர்களிடம் பெற்றுள்ளார். பிக் பாஸ் வீட்டிற்குள் தன்னை தக்கவைத்துகொள்ள அவர் எந்த ஒரு தந்திரங்களையும் செய்யவே இல்லை,  உள்ளே அவர் தன் இயல்பை காட்டினார் அனைவரிடத்திலும் அன்பை காட்டினார்.  நேர்மறையான அதிர்வுகளை வீடெங்கும் பரப்பினார். அவ்வீட்டில் 84 நாட்களும், ஒவ்வொரு பணியிலும் மிகுந்த உற்சாகத்துடனும், ஊக்கமளிக்கும் ஈடுபாட்டுடனும் அங்குள்ளவர்களுக்கும் பிடித்தமானவராக இருந்தார். அவர் கச்சிதமிக்கவராக இணக்கமானவராக ஒரு நல்ல ஆத்மாவாக Mr. Perfect என்பதன் உதாரணமாக வலம் வந்தார்.

இந்நிகச்சி குறித்து நடிகர் வருண் கூறும்போது.., இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்ட போது, ரசிகர்கள் இதயம் மகிழ்ந்து என்னை பாராட்டுவார்கள்  என நான் எதிர்பார்க்கவே இல்லை. பார்வையாளர்கள் என்னைப் பற்றிய நேர்மறை விசயங்களை பகிர்ந்துகொண்ட விதத்தைப் பார்த்து நான் உண்மையில் வியப்படைகிறேன். நான் உண்மையிலேயே ஆசீர்வதிக்கப்பட்டவனாக உணர்கிறேன்,  என்னை ஆதரித்த அனைவருக்கும் என் நன்றியைத் தெரிவிக்க வார்த்தைகள் இல்லாமல் தவிக்கிறேன்.

நடிகர் வருண் நடிப்பில்  வெளியான “ஜோஷ்வா இமை போல் காக்கா”  டிரெயலர் வெளியான 24 மணி நேரத்திற்குள் 1 மில்லியனுக்கும் அதிகமான பார்வையாளர்களைக் கடந்து சாதனை படைத்துள்ளது,  டிரெய்லரில் அதிரடி-ஆக்சனில் கலக்கியுள்ள வருணின்  நடிப்பு பலதரப்பிலும்  பாராட்டுக்களை குவித்து வருகிறது. இது குறித்து  தனது மகிழ்ச்சியைப் பகிர்ந்துகொண்ட வருண்.., “ஜோஷ்வா இமை போல் காக்கா” படத்தின் டிரெய்லர் எனக்கு முற்றிலும் ஆச்சரியமான செய்தியாக இருந்தது. நான் வீட்டை விட்டு வெளியே வரும் வரையிலும், என் மாமா டாக்டர் ஐசரி K கணேஷுடன் மேடையைப் பகிர்ந்து கொள்ளும் வரையிலும், இந்த டிரெய்லர் வெளியீடு பற்றி எனக்குத் எதுவுமே தெரியாது, வெளியே வந்த பிறகு தான் அவர் அதை வெளிப்படுத்தினார். உண்மையில், அந்த  தருணத்தில் கமல்ஹாசன் சார் உடன் இருந்தது எனக்கு கிடைத்த பாக்கியம், இது என் வாழ்வில் மறக்க முடியாத நிகழ்வாக இருக்கும். மேலும், நிகழ்ச்சியின் தொகுப்பாளரான இந்தியாவின் திரையுலக சின்னமாக விளங்கும் ஸ்ரீ கமல்ஹாசன் அவர்களே, வருணின் சிறப்பான ஆட்டத்திற்காகவும், அவரது பண்பையும் குறிப்பிட்டு பாராட்டினார். அது குறித்து கூறும்போது…
நிச்சயமாக,  ஒரு சினிமா சக்கரவர்த்தி உங்களை ஆசீர்வதித்து, உங்களைப் பற்றி நேர்மறையான வார்த்தைகளைப் பேசும்போது,  வாழ்வில் நீங்கள் உற்சாகம் கொள்ள வேறு  என்ன  பெரிதாக வேண்டும்? நிகழ்ச்சியிலும் எனது வரவிருக்கும் திரைப்படங்களுக்கும், எனது தீவிர முயற்சிகளுக்கும் அவர் வாழ்த்து தெரிவித்ததில் நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். என்னைப் பற்றி பல நேர்மறையான விஷயங்களைப் பரப்பிய பொது மக்கள், எனது நண்பர்கள், எனது குடும்பத்தினர், எனது ரசிகர்கள், பிபி வீட்டில் உள்ள எனது ஹவுஸ்மேட்கள், மீம் கிரியேட்டர்கள், ட்ரோல் பேஜ்கள், வெறுப்பாளர்கள், பிரபலங்கள், குறிப்பாக எனது அன்பான பத்திரிகைகள் மற்றும் ஊடக நண்பர்களின் அன்புக்கு நன்றி. அவர்களுக்கு நிறைய கடன்பட்டிருக்கிறேன். அவர்களின் நிபந்தனையற்ற அன்பிற்கு நன்றி தெரிவிக்க,   ஒரு வாய்மொழி குறிப்பு செய்தியால் முடியாது, எனது வரவிருக்கும் திரைப்படங்களில், எனது சிறந்த திறனைக் கொண்டு அவர்களை மகிழ்விக்க முயல்வேன். “ஜோஷ்வா இமை போல் காக்கா” திரைப்படம் அவர்களை கண்டிப்பாக மகிழ்விக்கும் என உறுதியாக நம்புகிறேன்.

இதில் பெரும் ஆச்சர்யகரமான செய்தி என்னெவென்றால், உச்ச நடிகர்களை வைத்து திரைப்படங்கள் தயாரிக்கும் மிகப்பிரபலமான முன்ணனி தயாரிப்பு நிறுவனங்களின் இரண்டு படங்களில்  நடிக்க நடிகர் வருண் ஒப்பந்தமாகியுள்ளார்.

நடிகராக வருணுக்கு இது உண்மையில் மிகப்பெரும் ஆரம்பம். இந்த இனிய புத்தாண்டில் துவங்கும் இனிமையான புது துவக்கம்!!!

Previous Post

“ரசிகர்கள் 100 சதவீதம் சிரித்து, மகிழ்ந்து குதூகலிக்கும், மிகச்சிறந்த பொழுதுபோக்கு திரைப்படமாக “பிளான் பண்ணி பண்ணனும்” இருக்கும் !

Next Post

இசைமேதை’ எம். எஸ். சுப்புலட்சுமியின் வாரிசுகளின் குரலில் நவீன தொழில்நுட்பத்தில் ஸ்ரீ வெங்கடேச சுப்ரபாதம்

Next Post
இசைமேதை’ எம். எஸ். சுப்புலட்சுமியின் வாரிசுகளின் குரலில் நவீன தொழில்நுட்பத்தில் ஸ்ரீ வெங்கடேச சுப்ரபாதம்

இசைமேதை' எம். எஸ். சுப்புலட்சுமியின் வாரிசுகளின் குரலில் நவீன தொழில்நுட்பத்தில் ஸ்ரீ வெங்கடேச சுப்ரபாதம்

Popular News

  • மீண்டும் இணைந்த “பிளாக்” வெற்றிப்படக்கூட்டணி, “ஜீவா 46” கோலாகலத் துவக்கம்!!

    0 shares
    Share 0 Tweet 0
  • திங்க் ஸ்டுடியோஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் நடிக்கும் கவின்- பிரியங்கா மோகன் ஜோடி

    0 shares
    Share 0 Tweet 0
  • ‘ஜென்ம நட்சத்திரம்’ வெளியீட்டுக்கு முன்பே ஹிட்! ஊடக விமர்சனங்களும் முன்னோட்டக் காட்சிகளும் வரவேற்பை பெற்றுள்ளன!

    0 shares
    Share 0 Tweet 0
  • பிரபல இயக்குநர் லோகேஷ் கனகராஜ் வழங்க , Passion ஸ்டூடியோஸ், ஜி ஸ்க்வாட், தி ரூட் ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கும் யூட்யூப் சென்சேஷனல் ஐகான்கள் பாரத் & நிரஞ்சனின் “Mr. பாரத்” படப்பிடிப்பு வெற்றிகரமாக முடிவடைந்துள்ளது!

    0 shares
    Share 0 Tweet 0
  • பான் இந்தியா படமாக இருந்தால், தளபதி விஜயை முதல்வராக அல்லாமல் பிரதமராகவே காட்டியிருப்பேன் – ‘யாதும் அறியான்’ இயக்குநர் அதிரடி பேச்சு

    0 shares
    Share 0 Tweet 0

Recent News

சட்டமும் நீதியும் – விமர்சனம்

July 19, 2025
திங்க் ஸ்டுடியோஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் நடிக்கும் கவின்- பிரியங்கா மோகன் ஜோடி

திங்க் ஸ்டுடியோஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் நடிக்கும் கவின்- பிரியங்கா மோகன் ஜோடி

July 19, 2025

கெவி – விமர்சனம் ரேட்டிங் – 4 / 5

July 19, 2025

ஜென்ம நட்சத்திரம் – விமர்சனம் ரேட்டிங் – 3.5 / 5

July 19, 2025

நடிகர் உன்னி முகுந்தனின் UMF மற்றும் ஐன்ஸ்டீன் மீடியாவுடன் இணைந்து லெஜெண்ட்ரி இயக்குநர் ஜோஷி இயக்கும் அடுத்த பட அறிவிப்பு அவரது பிறந்தநாளன்று வெளியாகியுள்ளது!

July 19, 2025

திரையிலும், நிஜ வாழ்க்கையிலும் முத்திரை பதித்துவரும் நடிகை பவ்யா த்ரிகா

July 19, 2025
  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2025 Tamil2daynews.com.

error: Content is protected !!
No Result
View All Result
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்

© 2025 Tamil2daynews.com.