• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us
Tamil2daynews
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
Tamil2daynews
No Result
View All Result
Home சினிமா சினிமா செய்திகள்

எதிர்பார்ப்பை எகிறவைத்த “கான் சிட்டி”… டிஜிட்டல் உரிமையை கைப்பற்றிய நெட்பிளிக்ஸ் !

by Tamil2daynews
March 25, 2026
in சினிமா செய்திகள்
0
0
SHARES
5
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp
எதிர்பார்ப்பை எகிறவைத்த “கான் சிட்டி”… டிஜிட்டல் உரிமையை கைப்பற்றிய நெட்பிளிக்ஸ் !

அர்ஜூன் தாஸ், அன்னா பென், யோகி பாபு, வடிவுக்கரசி உள்ளிட்ட பலர் நடித்துள்ள “கான் சிட்டி” திரைப்படம், வெளியீட்டுக்கு முன்பே மிகப்பெரிய வரவேற்பைப் பெற்று வருகிறது. அதற்கு முக்கிய சான்றாக, இப்படத்தின் டிஜிட்டல் உரிமையை உலகப் புகழ்பெற்ற ஓடிடி தளமான நெட்பிளிக்ஸ் பெரும் தொகைக்குக் கைப்பற்றியுள்ளது. படம் திரையரங்குகளில் வெளியாகும் முன்பே கிடைத்துள்ள இந்த மாபெரும் ஒப்பந்தம், திரைப்படத்தின் மீதான எதிர்பார்ப்பை மேலும் உயர்த்தியுள்ளது.

புதுமையான கதைக்களத்தில், கொண்டாட்டமான ஃபேமிலி எண்டர்டெயினராக உருவாகி வரும் “கான் சிட்டி”, ஏற்கனவே அதன் டைட்டில் டீசர் மூலம் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்திருந்தது. நகர வாழ்க்கையில் கடனில் சிக்கித் தவிக்கும் ஒரு மிடில் கிளாஸ் குடும்பத்தின் வாழ்க்கையை மையமாகக் கொண்டு நடக்கும் கதை, அவர்களுக்கு கிடைக்கும் ஒரு பணம் அச்சிடும் மிஷினைச் சுற்றி சுவாரஸ்யமாக நகர்கிறது. பட்டன் தட்டினால் கொட்டும் பணம் என்ற வித்தியாசமான கற்பனை, குடும்ப உணர்வுகள், நகைச்சுவை, பரபரப்பு ஆகியவற்றுடன் சேர்ந்து படத்திற்கு தனித்துவமான எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது.

இந்த படத்தில்  இளம் முன்னணி நடிகர்அர்ஜூன் தாஸ் நாயகனாக நடிக்க, மலையாளத்தின் திறமையான நடிகை அன்னா பென் கதாநாயகியாக இணைந்துள்ளார். இவர்களுடன் நகைச்சுவை நடிகர் யோகி பாபு, மூத்த நடிகை வடிவுக்கரசி, குழந்தை நட்சத்திரம் அகிலன் உள்ளிட்டோர் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்துள்ளனர். வித்தியாசமான கதாபாத்திரத் தேர்வும், புதிய கூட்டணியும் இப்படத்தின் பலமாக பார்க்கப்படுகிறது.
Imageபவர் ஹவுஸ் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவாகும் இந்தப் படத்தை அறிமுக இயக்குநர் ஹரிஷ் துரைராஜ் எழுதி இயக்கியுள்ளார். மங்களூர், சென்னை, மும்பை உள்ளிட்ட பல நகரங்களில் படப்பிடிப்பு நடைபெற்றுள்ளது. நகர வாழ்க்கையின் நெருக்கடியையும், அதற்குள் நகைச்சுவை மற்றும் உணர்வுகளையும் கலந்து சொல்லும் முயற்சியாக இந்தப் படம் உருவாகியுள்ளது.

மேலும், தமிழ் சினிமாவில் தனித்துவமான இசைக்காக பெரும் ரசிகர் வட்டத்தைப் பெற்றுள்ள இசையமைப்பாளர் ஷான் ரோல்டன் இப்படத்திற்கு இசையமைத்திருப்பது கூடுதல் பலமாக அமைந்துள்ளது. டீசரில் இருந்தே இசை, காட்சியமைப்பு, கதையின் மையக்கரு ஆகியவை ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளன.

தற்போது நெட்பிளிக்ஸ் நிறுவனம் இந்த படத்தின் டிஜிட்டல் உரிமையை கைப்பற்றியிருப்பது திரை வட்டாரத்தில், “கான் சிட்டி” படத்தின் வணிக மதிப்பையும்  ரசிகர் மத்தியிலான எதிர்பார்ப்பையும் பெரும்பளவில் அதிகரித்துள்ளது. குறிப்பாக திரையரங்கு வெளியீட்டுக்கு முன்பே ஓடிடி உரிமை பெரிய அளவில் விற்கப்படுவது, படத்தின் உள்ளடக்கத்தின் மீது மட்டுமல்ல, அதன் நடிப்பு, தொழில்நுட்பத் தரத்திலும், வணிக வெற்றியில் இருக்கும் நம்பிக்கையை வெளிப்படுத்துகிறது.

குடும்ப உணர்வுகள், நகைச்சுவை, புதுமையான ஃபேண்டஸி கலந்த கதை, வலுவான நடிகர்கள்,  தொழில்நுட்பக் குழுவும் இணைந்துள்ள “கான் சிட்டி”, தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் விரைவில் வெளியாக உள்ளது.

தொழில்நுட்ப குழு
இயக்கம்: ஹரிஷ் துரைராஜ்
தயாரிப்பு: Power House Pictures (பவர் ஹவுஸ் பிக்சர்ஸ்)
ஒளிப்பதிவு: அரவிந்த் விஸ்வநாதன்
எடிட்டிங்: அருள் மோசஸ்
இசை: ஷான் ரோல்டன்
கலை இயக்கம்: ராஜ் கமல்
உடை வடிவமைப்பு: நவா ராம்போ ராஜ்குமார்
ஸ்டண்ட்: ஆக்ஷன் சந்தோஷ்
மக்கள் தொடர்பு: யுவராஜ்

Previous Post

குட் ஸ்டஃப்( Good Stuff) நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் B.DILLI -( பி. டில்லி) வழங்கும் ‘ தி டார்ம் ‘ படத்தின் தொடக்க விழா

Next Post

ஷர்வானந்த் நடிக்கும் பைக்கர் ( BIKER) பட பத்திரிகையாளர் சந்திப்பு !!

Next Post

ஷர்வானந்த் நடிக்கும் பைக்கர் ( BIKER) பட பத்திரிகையாளர் சந்திப்பு !!

Popular News

  • ஆகஸ்ட் 7 முதல் தமிழிலும் கிடைக்கும் ZEE5-இல் பிரம்மாண்ட டிஜிட்டல் பிரீமியருக்கு தயாராகும் ‘லெனின்’

    0 shares
    Share 0 Tweet 0
  • விஜய் சேதுபதி நடிக்கும் ‘ஸ்லம் டாக் : 33 டெம்பிள் ரோடு’ திரைப்படத்தில் நடிகை தபுவின் ‘கேரக்டர் கிளிம்ப்ஸ்’ வெளியீடு

    0 shares
    Share 0 Tweet 0
  • இந்த சுதந்திர தினத்தில், 26/11 பயங்கரவாத தாக்குதலின்போது தைரியமாக நின்று போராடிய பெயரிடப்படாத நாயகர்களின் சொல்லப்படாத கதையை கொண்டுவருகிறது இந்தி ZEE5-இன் பாரத் பாக்ய விதாதா

    0 shares
    Share 0 Tweet 0
  • துல்கர் சல்மானின் ‘ஐ ம் கேம்- I Am Game’ திரைப்படத்தின் முதல் பாடல் வெளியீடு: ஆகஸ்ட் 20ஆம் தேதி முதல் உலகம் முழுவதும் திரையரங்குகளில் !

    0 shares
    Share 0 Tweet 0
  • விசாகப்பட்டினத்தில் பிரம்மாண்டமாக ‘AAA சினிமாஸ்’ தொடங்கி, தனது பொழுதுபோக்கு சாம்ராஜ்யத்தை விரிவுபடுத்தும் ஐகான் ஸ்டார் அல்லு அர்ஜுன்!

    0 shares
    Share 0 Tweet 0

Recent News

‘பியார் பிரேமா கல்யாணம்’ டிரெய்லரை வெளியிட்ட Netflix – வித்தியாசமான ட்விஸ்டுடன் வரும் முழுமையான குடும்ப பொழுதுபோக்கு திரைப்படம்!

August 12, 2026

நடிகர் வைபவ்வின் ‘மாறுவேஷம்’ திரைப்படம் யூ/ஏ சான்றிதழுடன் அக்டோபர் 1 முதல் உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது!

August 12, 2026

‘பியார் பிரேமா கல்யாணம்’ டிரெய்லர் வெளியீட்டு விழா !

August 12, 2026

‘அடடா’ பாடல் மூலம் தமிழ் சினிமா நினைவுகளை ராப் இசையில் கொண்டு வரும் கில்லா கே மற்றும் பால் டப்பா

August 12, 2026

அட்லி வழங்கும், விஜய் சேதுபதி நடிக்கும் ‘பத்தா’ – அக்டோபர் 1ம் தேதி திரையரங்குகளில் வெளியீடு!

August 12, 2026

‘சேயோன்’ திரைப்படம் மிகுந்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் உருவாகி வருகிறது, அதன் இரண்டாவது கட்டப் படப்பிடிப்பு மதுரையில் இன்று அதிகாரப்பூர்வமாகத் தொடங்கியது.

August 12, 2026
  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2025 Tamil2daynews.com.

error: Content is protected !!
No Result
View All Result
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்

© 2025 Tamil2daynews.com.