• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us
Tamil2daynews
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
Tamil2daynews
No Result
View All Result
Home சினிமா சினிமா செய்திகள்

இயக்குநராக மாறிய  பிரபல தயாரிப்பாளர் தனஞ்செயன் ! 

by Tamil2daynews
November 7, 2019
in சினிமா செய்திகள்
0
இயக்குநராக மாறிய  பிரபல தயாரிப்பாளர் தனஞ்செயன் ! 
0
SHARES
36
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

தமிழ் சினிமாவில் பன்முக திறமை கொண்டவர்களில் ஒருவரான தனஞ்செயன் தற்போது  புதியதோர் அத்தியாயத்திற்கு தயாராகியுள்ளார். நிர்வாகத் தயாரிப்பாளராக ஆரம்பித்து சினிமாவின் ஒவ்வொரு பிரிவிலும் பயணித்து, இரண்டு தேசிய விருதுகள் பெற்றிருக்கும் தனஞ்செயன் தற்போது படைப்பாளி உலகில்  இணைந்து இயக்குநராக மாறியுள்ளார்.

BOFTA MEDIAWORKS & Creative Entertainers  சார்பில் பல நல்ல படங்கள் தயாரித்து வெளியிட்டு வரும் தனஞ்செயன் தனது இயக்குநர் அவதாரம் பற்றி கூறியதாவது …

 

நான் நிர்வாக தயாரிப்பாளராக பல படங்களில் பணியாற்றியபோது அப்படங்களின் கதை விவாதத்திலும், திரைக்கதை உருவாக்கத்திலும், பட உருவாக்கத்தின் பல்வேறு துறைகளிலும் இணைந்து பணியாற்றியுள்ளேன். படத்தின் வெற்றி தோல்விகள் மற்றும் அதில் கிடைத்த அனுபவங்கள் படத்தினை உருவாக்குவதில் நிறைய பாடங்களை கற்று தந்தது.

BOFTA Film Institute ல் எனது பயணம் பல சினிமா ஜாம்பவான்களுடன் அவர்களது பொன்னான அனுபவங்களை பகிர்ந்து கொள்ளும் பெருமையான தருணமாக  அமைந்தது. அந்த அனுபவங்கள் எனக்குள் கதையை ஒரு திரைப்படத்தை உருவாக்கும் ஆர்வத்தை பல வருடங்களாக விதைத்திருந்தது. ஆனாலும் பல்வேறு வேலை தொடர்பான காரணங்களால் அக்கனவு தள்ளிப்போய்க்கொண்டே இருந்தது. இறுதியில் எனது மனைவி எனது இந்தப்பயணத்தை ஊக்குவித்து துவங்கி வைத்தார்.

கடந்த 4 மாதங்களாக நானும் எனது குழுவும் படத்தின் திரைக்கதை விவாதத்தில் ஈடுபட்டிருந்தோம். பின்னர் நடிகர்களிடமும் தொழில்நுட்ப கலைஞர்களிடமும் எனது திரைக்கதையை சொன்னபோது அவர்கள் வெகுவாக  பாராட்டி, மிகுந்த ஆர்வத்துடன் இந்த படத்தில் இணைந்து பணியாற்ற விரும்பினார்கள்.

எனது மனைவியின் பிறந்தநாளளையொட்டி   சிறப்பான தருணத்தில் இந்த செய்தியை உங்களுடன் பகிர்ந்து கொள்வதில் பெரு மகிழ்ச்சி கொள்கிறேன். இப்படத்தில் பங்குபெறவுள்ள நடிகர்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் பற்றிய விவரம் இந்த டிசம்பரில் வெளியிட உள்ளோம். ஜனவரி 2020 ல் ஷூட்டிங்கை துவங்க உள்ளோம். இது ஒரு புதிய வகை  க்ரைம் திரில்லர் படமாக ஒரு புத்தம்புது அனுமபவமாக இருக்கும்.

Tags: BoftaProducer Dr. G. Dhananjayan
Previous Post

கீழடி அகழாய்வு குறித்து மாண்புமிகு தமிழக முதல்வருக்கு இயக்குனர் பாரதிராஜா அவர்கள் நன்றி அறிக்கை

Next Post

நித்தின் சத்யா தயாரிப்பில்  வைபவ் – வெங்கட் பிரபு நடிப்பில்  அறிமுக இயக்குனர் SG.சார்லஸ் இயக்கும் “லாக்கப்”

Next Post
நித்தின் சத்யா தயாரிப்பில்   வைபவ் – வெங்கட் பிரபு நடிப்பில்   அறிமுக இயக்குனர் SG.சார்லஸ் இயக்கும் “லாக்கப்”

நித்தின் சத்யா தயாரிப்பில்  வைபவ் – வெங்கட் பிரபு நடிப்பில்  அறிமுக இயக்குனர் SG.சார்லஸ் இயக்கும் “லாக்கப்”

Popular News

  • கோலாகலமாக நடைபெற்ற ‘கான் சிட்டி’ திரைப்படத்தின் நன்றி அறிவிப்பு விழா

    0 shares
    Share 0 Tweet 0
  • டாக்ஸிக்’-Toxic திரைப்படத்தின் ‘தடுமாறுதே ‘ பாடல் மூலம் ராயா மற்றும் ரெபெக்கா கதாபாத்திரத்தின் புதிய பரிமாணத்தை ‘ராக்கிங் ஸ்டார்’ யாஷ் மற்றும் தாரா சுதாரியா வெளிப்படுத்துகின்றனர்.

    0 shares
    Share 0 Tweet 0
  • நயன்தாரா- கவின் இணைந்து நடித்திருக்கும் ‘ஹாய்’ திரைப்படத்தின் இரண்டாவது பாடல் வெளியீடு

    0 shares
    Share 0 Tweet 0
  • காகங்கள்’ படப்பிடிப்பு நிறைவு – யோகி பாபுவின் பிறந்தநாளுடன் இணைந்த இரட்டை மகிழ்ச்சி

    0 shares
    Share 0 Tweet 0
  • ஜனநாயகன் – விமர்சனம்

    0 shares
    Share 0 Tweet 0

Recent News

கோலாகலமாக நடைபெற்ற ‘கான் சிட்டி’ திரைப்படத்தின் நன்றி அறிவிப்பு விழா

July 23, 2026

டாக்ஸிக்’-Toxic திரைப்படத்தின் ‘தடுமாறுதே ‘ பாடல் மூலம் ராயா மற்றும் ரெபெக்கா கதாபாத்திரத்தின் புதிய பரிமாணத்தை ‘ராக்கிங் ஸ்டார்’ யாஷ் மற்றும் தாரா சுதாரியா வெளிப்படுத்துகின்றனர்.

July 23, 2026

நயன்தாரா- கவின் இணைந்து நடித்திருக்கும் ‘ஹாய்’ திரைப்படத்தின் இரண்டாவது பாடல் வெளியீடு

July 23, 2026

காகங்கள்’ படப்பிடிப்பு நிறைவு – யோகி பாபுவின் பிறந்தநாளுடன் இணைந்த இரட்டை மகிழ்ச்சி

July 23, 2026

ஜனநாயகன் – விமர்சனம்

July 23, 2026

‘ஏழு கடல் ஏழு மலை’ ரிலீஸ் தேதி அறிவிப்பு

July 23, 2026
  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2025 Tamil2daynews.com.

error: Content is protected !!
No Result
View All Result
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்

© 2025 Tamil2daynews.com.