• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us
Tamil2daynews
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
Tamil2daynews
No Result
View All Result
Home சினிமா சினிமா செய்திகள்

ஜப்பானில் வெளியாகும் ‘புஷ்பா2: தி ரூல்’ திரைப்படம்!

by Tamil2daynews
January 16, 2026
in சினிமா செய்திகள்
0
0
SHARES
5
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

ஜப்பானில் வெளியாகும் ‘புஷ்பா2: தி ரூல்’ திரைப்படம்!

 

ஐகான் ஸ்டார் அல்லு அர்ஜுனின் ‘புஷ்பா2: தி ரூல்’ திரைப்படம் ஜப்பானில் ஜனவரி 16 அன்று ‘புஷ்பா குன்ரின்’ என்ற பெயரில் வெளியாகிறது.

ஐகான் ஸ்டார் அல்லு அர்ஜுனின் மிகப்பெரிய பிளாக்பஸ்டர் திரைப்படமான ‘புஷ்பா 2: தி ரூல்’ தற்போது ஜப்பானிலும் வெளியாக தயாராக உள்ளது. இந்திய பாக்ஸ் ஆபிஸில் சாதனை படைத்த இந்த படம் இந்திய ரசிகர்கள் மத்தியில் கொண்டாட்டமாக மாறியது. படத்தின் தொடக்கத்தில் புஷ்பாவின் அறிமுக சண்டைக்காட்சி ஜப்பானில் படமாக்கப்பட்டது மட்டுமல்லாது, அதில் அல்லு அர்ஜுன் ஜப்பானிய மொழியிலும் சரளமாக வசனம் பேசும்படியும் காட்சி அமைக்கப்பட்டிருக்கும்.

ஜனவரி 16ஆம் தேதி ஜப்பானில் படம் வெளியாகவுள்ள நிலையில், குடும்பத்துடன் டோக்கியோ சென்றுள்ள நடிகர் அல்லு அர்ஜூன் தனது ஆக்‌ஷன் எண்டர்டெயினர் படத்தை புரமோட் செய்து வருகிறார்.  டோக்கியோ நகரத்தின் அழகிய ஸ்கைலைன் இடம்பெற்ற புகைப்படத்தை தனது அதிகாரப்பூர்வ இன்ஸ்டாகிராம் பக்கத்திலும் பகிர்ந்துள்ளார் அல்லு அர்ஜூன்.
Allu Arjun Stuns Fans at Pushpa 2 Tokyo Screeningமைத்ரி மூவி மேக்கர்ஸ் மற்றும் சுகுமார் ரைட்டிங்ஸ் உடன் இணைந்து, இந்தப் படத்தை ஜப்பானில் ’புஷ்பா குன்ரின்’ என்ற பெயரில் கீக் பிக்சர்ஸ் மற்றும் சோசிகு நிறுவனங்கள் வெளியிடுகின்றன. சுமார் 250 திரையரங்குகளில் இந்த படம் பிரமாண்டமாக வெளியாகவுள்ளது. இந்திய சினிமாவின் மிகப்பெரிய பிளாக்பஸ்டர்களுக்கு ஜப்பான் ரசிகர்கள் ஏற்கனவே காட்டி வரும் பேராதரவை கருத்தில் கொண்டு, இந்தப் படமும் அங்கு பெரிய வெற்றியைப் பெறும் என்ற நம்பிக்கையில் படக்குழு உள்ளது.

சுகுமார் இயக்கத்தில் தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ள இந்தப் படத்தில் நடிகர் அல்லு அர்ஜூன் கதாநாயகனாக நடித்துள்ளார். ஜப்பான் தியேட்டர்களில் ’புஷ்பா குன்ரின்’ என்ற பெயரில் ஜனவரி 15, 2026 அன்று படம் ப்ரீமியர் ஆகிறது. போலீஸ் அதிகாரியாக ஃபஹத் ஃபாசில் நடித்திருக்க, நாயகியாக ராஷ்மிகா மந்தானா நடித்துள்ளார். இந்தப் படத்தை நவீன் யெர்னேனி மற்றும் ஒய். ரவி சங்கர் தயாரித்துள்ளனர்.

Previous Post

உலகளாவிய திரைப்பட தளமான Letterboxd தளத்தின் டாப் டென்னில் இடம்பிடித்த ‘டூரிஸ்ட் ஃபேமிலி’ திரைப்படம் !!

Next Post

வா வாத்தியார் – விமர்சனம் ரேட்டிங் – 3 / 5

Next Post

வா வாத்தியார் - விமர்சனம் ரேட்டிங் - 3 / 5

Popular News

  • இரா.சரவணன் இயக்கத்தில், நிவாஸ் கே. பிரசன்னா இசையில், அழுத்தமான படைப்பாக அதிர வைக்க வருகிறது ‘நந்தன் 2’.

    0 shares
    Share 0 Tweet 0
  • பீப் – விமர்சனம்

    0 shares
    Share 0 Tweet 0
  • ‘வேட்டுவம்’ பா.இரஞ்சித்தின் பிரம்மாண்ட அபோகலிப்டிக் ஆக்ஷன் திரைப்படம்.

    0 shares
    Share 0 Tweet 0
  • நல்லபடம் -விமர்சனம்

    0 shares
    Share 0 Tweet 0
  • ‘சிக்மா’ திரைப்படத்தின் டிரெய்லர் மற்றும் இசை வெளியீட்டு விழா நிகழ்வு!

    0 shares
    Share 0 Tweet 0

Recent News

நல்லபடம் -விமர்சனம்

September 21, 2026

‘சிக்மா’ திரைப்படத்தின் டிரெய்லர் மற்றும் இசை வெளியீட்டு விழா நிகழ்வு!

September 21, 2026

இரா.சரவணன் இயக்கத்தில், நிவாஸ் கே. பிரசன்னா இசையில், அழுத்தமான படைப்பாக அதிர வைக்க வருகிறது ‘நந்தன் 2’.

September 21, 2026

அதிரடி ஆக்ஷனில் மிரளவைக்கும் ராஷ்மிகா: மைசா’ திரைப்படத்தின் டீசர் வெளியீடு!

September 21, 2026

#Love’ – அக்டோபர் 2 முதல் நெட்ஃப்ளிக்ஸில் மட்டும்

September 20, 2026

பிரம்மாண்டமாக நடைபெற்ற ‘பத்தா’ இசை வெளியீட்டு விழா!

September 20, 2026
  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2025 Tamil2daynews.com.

error: Content is protected !!
No Result
View All Result
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்

© 2025 Tamil2daynews.com.