• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us
Tamil2daynews
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
Tamil2daynews
No Result
View All Result
Home சினிமா சினிமா செய்திகள்

“மை லார்ட்” பட நன்றி அறிவிப்பு விழா !

by Tamil2daynews
February 21, 2026
in சினிமா செய்திகள்
0
0
SHARES
7
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp
“மை லார்ட்” பட நன்றி அறிவிப்பு விழா !

9ஒலிம்பியா மூவிஸ் நிறுவனம் சார்பில் ஜெயந்தி அம்பேத்குமார் தயாரிப்பில், ராஜுமுருகன் இயக்கத்தில், நட்சத்திர நடிகரான சசிகுமார் கதையின் நாயகனாக அழுத்தமான வேடத்தில் நடித்திருக்கும் ‘ மை லார்ட்’ ( My Lord) திரைப்படம் கடந்த பிப்ரவரி மாதம் 13 ஆம் தேதி முதல் உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகி பெரும் வரவேற்பைப் பெற்று வருகிறது

சமூக அக்கறை மிக்க ஒரு படைப்பாகவும், ரசிகர்களை ரசிக்க வைத்த படைப்பாகவும் பார்வையாளர்களிடமும், விமர்சகர்களிடமும் பெரும் பாராட்டுக்களைக் குவித்த இப்படம் திரையரங்குகளில் அரங்கம் நிறைந்த காட்சிகளாக ஓடிக்கொண்டிருக்கிறது.

இந்நிலையில் இன்று படக்குழுவினர் பத்திரிக்கை ஊடக நண்பர்களைச் சந்தித்து நன்றி தெரிவித்தனர்.

இந்நிகழ்வினில்…

இசையமைப்பாளர் ஷான் ரோல்டன் பேசியதாவது..,
மறுபடியும் நன்றி சொல்ல வந்திருக்கிறேன் இம்முறை மை லார்ட் படத்திற்காக…. சில படங்கள்…நாம் ஒரு பணி எடுத்திருக்கிறோம் ,நாம் அதை நன்றாக செய்ய வேண்டும் என தோன்றும். ஒரு சில படங்கள் மட்டுமே இது வெறும் படம் கிடையாது ஒரு இசையமைப்பாளராகவும் சரி ஒரு மனிதனாகவும் இது நமக்கு ஒரு பெரிய பொறுப்பு… இதில் வேலையை மட்டும் முடித்தால் பத்தாது, இதை நாம் பதிவாகவும் அமைக்க வேண்டும் என்பது இரு பொறுப்புகள் ஆகிவிடும். எப்போதுமே ராஜூ முருகன் சார் எனக்கு பாட்டு எழுதும் போதோ இல்லை அவரோட படத்துக்கு நான் இசையமைக்கும்போதோ அந்தப் பொறுப்பை நான் உணர்ந்திருக்கிறேன்.

அவர் ஒரு ஸ்பெஷலான கிரியேட்டர், மை லார்ட் படத்துல ஒரு புதுவிதமான சர்ப்ரைஸ் கொடுத்திருக்கிறார்.

அவருக்கே உரித்தான பொலிட்டிக்கல் satire ஐ ரொம்ப ஜனரஞ்சகமாக எல்லோரும் ரசிக்கும்படி கொண்டு வந்தது சர்ப்ரைசிங்கா இருந்தது.மை லார்ட் படத்தை எனக்கு கொடுத்ததற்கு நன்றி.டூரிஸ்ட் ஃபேமிலி படத்திற்குப் பிறகு இந்த படம் தொடர்ச்சியாக சசி சாருடன் வெற்றியில் பங்கேற்பது ஒரு ஸ்பெஷலான தருணமாய் உணர்கிறேன்.

அம்பேத் சாருடன் நேரில் சந்தித்து பேசியதை விட போனில் பேசியது தான் அதிகம்..

Imageஇந்தப் படம் சமூகத்துக்கு ஒரு நல்ல விஷயத்தை செய்யக்கூடிய படம் . இந்தப் படத்தை நான் எடுத்து பண்றேன்னு அவர் எடுத்த அந்த முயற்சி இன்று வெற்றி என்ற புள்ளியில் வந்து நின்றதற்கு அவருக்கு என் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். சத்யராஜ் சாருக்கு மை லார்ட் படம் கண்டிப்பாக ஒரு மைல்கல்லாக இருக்கும் என நம்புகிறேன். சத்யராஜ் சார் மியூசிக் ல சில இன்புட்ஸ் கொடுத்தாரு. படங்களின் கலெக்ஷனை நாம் கம்பேர் பண்ணலாம் ஆனால் ஒரு சில படங்கள் மட்டுமே காலத்தைத் தாண்டி மனதில் நிற்கும். அப்படிப்பட்ட ஒரு படமாக மை லார்ட் இருக்கும். இப்படத்தில் வேலை செய்த இசை கலைஞர்களுக்கும் தொழில்நுட்ப கலைஞர்களுக்கும் என் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.நல்ல படங்களுக்கு ஒரு பலமாக இருந்து மக்களிடம் கொண்டு போய் சேர்க்கும் பத்திரிக்கை மற்றும் ஊடக நண்பர்களுக்கு என் நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன். ரொம்ப நன்றி

தயாரிப்பாளர் அம்பேத்குமார் பேசியதாவது..,
படம் வெளியாகி இவ்வளவு வேலைகளுக்கு நடுவிலும் ‘தேங்க்ஸ் மீட் கண்டிப்பாக நடக்க வேண்டும் என்று சொல்லி, எனக்கு ஒரு பெரிய ஊக்கமும் ஆக்கமும் கொடுத்தவர் சசிகுமார் சார். இந்தப் படம் ரிலீஸுக்கு முன்னாலிருந்து இன்று வரைக்கும், ‘இந்த படத்தை மக்களிடம் எப்படியாவது கொண்டு போய் சேர்க்க வேண்டும் என்று ஒரு தீர்மானத்தோடு தொடர்ந்து உழைத்து வருகிற இந்த மாதிரியான ஹீரோவை, உண்மையிலேயே நான் இதுவரை பார்த்ததே கிடையாது. அப்படிப்பட்ட ஒரு சிறந்த நடிகர் மட்டுமல்ல; மனிதநேயமும், மனிதாபிமானமும் நிறைந்த ஒரு அற்புதமான மனிதர் சசிகுமார் சாருக்கு என்னோட மனப்பூர்வமான நன்றிகள். அதேபோல், இந்த படத்தின் இயக்குநர்—என்னோட அருமையான நண்பர் ராஜுமுருகன் சாருக்கும் என் நன்றி. இந்த படத்தைப் பற்றி முன்வந்து பேசின வார்த்தைகளில் மட்டும் இல்லாமல், உள்ளத்திலேயே மனிதநேயத்தை சுமந்து பேசின—அருமையான நண்பர் ஷான் ரோல்டன் அவர்களுக்கும் என் நன்றிகள்.

இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனைத்து பத்திரிகை நண்பர்களுக்கும், ஊடக நண்பர்களுக்கும், ‘மை லார்ட்’ ஒரு நல்ல படம், சிறந்த படம், பிரியமான படம் என்று மக்களிடம் தொடர்ந்து கொண்டு போய் சேர்த்துக் கொண்டிருக்கும் ஒவ்வொரு பத்திரிகை நண்பர்களுக்கும் என்னோட அன்பும், மரியாதையும், வணக்கமும். இப்படம் எனக்கு ஜிப்ஸியை விட இந்தப் படம் எனக்கு வெற்றி படம்தான்.நான் திருப்தியாக இருக்கிறேன்.எங்களுக்கு ஆதரவு தந்த அனைவருக்கும் நன்றி.

இயக்குநர் ராஜுமுருகன் பேசியதாவது..,
இந்த படத்தை சரியாகப் புரிந்து கொண்டு, அது உங்களுக்குள் ஏற்படுத்திய பாதிப்புகளை தொடர்ந்து எங்களிடம் பகிர்ந்து கொண்டதற்கு நன்றி.

‘மை லார்ட்’ படத்தை தொடங்குவதற்கு முதன்மையான காரணமாக இருந்த அம்பேத்கர் சாருக்கு என் சிறப்பு நன்றிகள். ஷான் —தொடர்ந்து ஒரு வாத்தியார் மாதிரி, பல விஷயங்களை என்னோடு பகிர்ந்து கொண்டு, என்னுடைய இசை பயணத்திலும் தொடர்ந்து உறுதுணையாக இருந்து வருவதற்காக அவருக்கும் என் நன்றிகள். எடிட்டர் சத்யராஜ் சார், நீரவ் ஷா சார், இந்த படத்தில் வேலை பார்த்த அத்தனை பேருக்கும் என் மனப்பூர்வமான நன்றி.நான் சினிமாவுக்கு வந்ததிலிருந்து இன்றுவரை, இந்த உலகம் ரொம்ப மாறியிருக்கிறது. ஒரு படத்தை எழுதத் தொடங்கும் இடத்தில் ஒரு எழுத்தாளரின் வேலை ஆரம்பிக்கிறது. ஷூட்டிங் நேரத்தில் இயக்குநரின் வேலை வருகிறது. அதற்குப் பிறகு ரிலீஸ், போஸ்ட்-புரடக்சன் என்று தொடர்கிறது. ஆனால் இன்றைக்கு, படம் ரிலீஸான பிறகும்—ப்ரமோஷன் வரைக்கும்—நிறைய விஷயங்களை நாமே கவனிக்க வேண்டிய ஒரு சூழல் உருவாகியிருக்கிறது. ஒரு ரைட்டிங்குக்கு எவ்வளவு உழைப்போ, ஒரு படத்தை உருவாக்க எவ்வளவு உழைப்போ, அதே அளவு உழைப்பை இன்றைக்கு அந்த படத்தை மக்களிடம் கொண்டு போய் சேர்க்கவும் கொடுக்க வேண்டியிருக்கிறது.நான் அடிப்படையில் ஒரு ஜர்னலிஸ்டாக இருந்ததால், முன்பெல்லாம் ப்ரமோஷன், இன்டர்வியூஸ் இதிலெல்லாம் அதிக ஆர்வம் காட்டியதே இல்லை. ஆனால் இப்போ அது ஒரு பெரிய சவாலாக மாறியிருக்கிறது

ஒரு படத்துக்கு எப்படி முழு மனசோடு வேலை செய்கிறோம், அதே தீவிரத்தோடு ப்ரமோஷனுக்கும் வேலை பண்ண வேண்டிய ஒரு சூழல் இன்றைக்கு உருவாகியிருக்கிறது. இது நல்லதா, கெட்டதா என்ற விவாதத்தை தாண்டி—இந்த உலகம் மாறிக்கிட்டே இருக்கிறது என்பதையும், அதுக்கேற்ற மாதிரி நாமும் மாற வேண்டியிருக்கிறது என்பதையும் புரிந்து கொள்ள வேண்டியிருக்கிறது.

நாம் படத்தில் எதைப் பற்றி பேசினாலும், அந்த படத்தை எடுத்துக் கொண்டு போய் ஆடியன்ஸிடம் சேர்ப்பது ஒரு மிகப் பெரிய வேலை. அந்த இடத்தில் உறுதுணையாக நிற்பது ஊடகங்களான நீங்கள் தான்.உங்களுடைய பாசிட்டிவான அணுகுமுறை, பாசிட்டிவான வார்த்தைகள் எப்போதுமே எனக்கு பெரிய ஊக்கமாக இருந்திருக்கிறது. அதற்காக உங்களுக்கெல்லாம் என் மனப்பூர்வமான நன்றி. இந்த படைப்பில் எப்போதும் கூடவே இருந்து துணைநின்ற ஜேம்ஸ் சார், திங்க் மியூசிக் சந்தோஷ் சார்,இந்த படம் உருவாகுவதற்கு உறுதுணையாக இருந்த இரா. சரவணன் உட்பட அத்தனை நண்பர்களுக்கும் என் மனப்பூர்வமான நன்றிகள்.

Imageநடிகர் சசிக்குமார் பேசியதாவது..,
இந்த படத்தை மக்களிடம் கொண்டு போய் சேர்த்ததற்கு முதலில் உங்களுக்கு என் மனப்பூர்வமான நன்றி.என்னுடைய நடிப்பை எல்லாருமே பாராட்டியதை கேட்கும்போது எனக்கு உண்மையிலேயே ரொம்ப சந்தோஷமாக இருந்தது. என்னோட நடிப்பும், சைத்ரா நடிப்பும், அதுக்கப்புறம் குருசசோமசுந்தரம் உள்ளிட்ட பல சிறிய சிறிய கேரக்டர்ஸும் — முதல் காட்சியிலிருந்தே பாராட்டப்பட்டது எனக்கு மிகுந்த மகிழ்ச்சியைத் தந்தது.

ஒரு நடிகராக, என்னை இன்னொரு விதமாக அழகாக மாற்றிக் காட்டியிருக்கிறார் ராஜுமுருகன். அதுக்காக அவருக்கு நான் மனதார நன்றி சொல்லிக்கொள்கிறேன்.

தயாரிப்பாளர் அம்பேத்குமார் சார், எல்லாவற்றையும் நான் பார்த்துக்கொள்கிறேன் என சொல்லக்கூடிய அவரது மனது தான் பெரிய விஷயம். ராஜு முருகன் கொடுத்து வைத்தவர். ஒரு நல்ல இயக்குநரும், ஒரு நல்ல தயாரிப்பாளரும் எப்போதும் தோற்றுப் போகக் கூடாது. எப்போதும் ஜெயிக்க வேண்டும் என்பது தான் என் எண்ணம்.Image

முதல் நாள் கலெக்ஷனை பார்த்துவிட்டு எல்லோருக்கும் கொஞ்சம் பயம் வந்தது, ஆனால் எனக்கு தைரியமாக இருந்தது. ஏனென்றால் எல்லாருமே படம் நல்ல படம் எனச் சொன்னார்கள். அது கண்டிப்பா மக்களிடம் இன்னும் போய் சேரும் என்ற நம்பிக்கை எனக்கு இருந்தது. அது நடந்துள்ளது எனக்கு மகிழ்ச்சி. ‘அயோத்தி’படத்தில் நான் பார்த்த அனுபவம் தான் எனக்கு இந்த தைரியத்தை கொடுத்தது. அந்தப்படமும் இரண்டாவது, மூன்றாவது வாரத்தில் தான் கலெக்ஷனை எடுத்தது. அதே மாதிரி இந்தப் படமும் கண்டிப்பாக எடுக்கும் என்ற நம்பிக்கை மக்கள்மேல் இருக்கிறது. இப்படம் போய் சேர வேண்டிய இடத்திற்கு கண்டிப்பா போய்ச் சேரும். படம் பார்த்து விஜய் டிவி ரிலீஸுக்கு அப்புறம் வாங்கியதும், ஓடிடியிலும் வாங்கியதும்—இதெல்லாமே ஒரு பெரிய வெற்றிதான். அதே போல சூர்யா சார் படம் பார்த்து, இந்த படத்தை ப்ரெசென்ட் பண்ணுறோம் என சொன்னதுக்கும், அவருக்கும் அவரோட டீமுக்கும் என் மனப்பூர்வமான நன்றி.

சந்தோஷ், ஜேம்ஸ்—ஆரம்பத்திலிருந்தே கூடவே நின்ற எல்லாருக்கும் நன்றி. ஷான் மியூசிக் படம் முடிந்தும் மனதுக்குள் நின்றது. சத்யராஜ் எடிட்டிங் நன்றாக இருந்தது. இறுதியாக, எங்களை வாழ்த்திய, எங்களை பாராட்டிய அனைத்து பத்திரிகை மற்றும் ஊடக நண்பர்களுக்கும் என் மனப்பூர்வமான நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.”

மை லார்ட் திரைப்படம் திரையரங்குகளில் வெற்றி நடை போடுகிறது

இப்படத்தில் சசிகுமார், சைத்ரா ஜே. ஆச்சார், ஜெயப்பிரகாஷ், குரு சோமசுந்தரம் , ஆஷா சரத் , இயக்குநர் கோபி நயினார், வசுமித்ரா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

நீரவ் ஷா ஒளிப்பதிவு செய்துள்ள இந்த திரைப்படத்திற்கு, பாடலாசிரியர் யுகபாரதி பாடல்களை எழுத, ஷான் ரோல்டன் இசையமைத்துள்ளார். கலை இயக்கத்தை முனி பால்ராஜ் மேற்கொள்ள, படத்தொகுப்பு பணிகளை சத்யராஜ் நடராஜன் கவனித்துள்ளார். டி. ஆர். பூர்ணிமா ஆடை வடிவமைப்பாளராக பணியாற்ற, நடனத்தை எம். ஷெரீப்பும், சண்டை காட்சிகளை பி. சி. ஸ்டண்ட்டும் அமைத்துள்ளனர்.

Previous Post

ராயாவின் வருகை உறுதியானது : ‘டாக்ஸிக்’ டீசர் வெளியீட்டு தேதி போஸ்டருடன் அறிவிப்பு

Next Post

ரெட் ஜெயன்ட் மூவிஸ் தயாரிப்பில் 47 ஆண்டுகளுக்கு பின் ரஜினிகாந்த் மற்றும் கமல்ஹாசன் இணையும் வரலாற்றுச் சிறப்பு மிக்க ‘KHxRK’

Next Post

ரெட் ஜெயன்ட் மூவிஸ் தயாரிப்பில் 47 ஆண்டுகளுக்கு பின் ரஜினிகாந்த் மற்றும் கமல்ஹாசன் இணையும் வரலாற்றுச் சிறப்பு மிக்க ‘KHxRK’

Popular News

  • ‘கார்கில்’, ‘டேக் டைவர்ஷன்’ பட இயக்குநர் ஷிவானி செந்திலின் புதிய திரைப்படம் பரபரப்பான படப்பிடிப்பில்

    0 shares
    Share 0 Tweet 0
  • பிகினி உடையில் கீர்த்தி சுரேஷ் – விட்டு வைக்காத பாலிவுட் மோகம்..! 

    0 shares
    Share 0 Tweet 0
  • குரு சோமசுந்தரம் – அனுமோல் நடிக்கும் ‘பாரிஸ் கஃபே’ செப்டம்பர் 18ஆம் தேதி வெளியாகிறது!

    0 shares
    Share 0 Tweet 0
  • “இம்மார்டல்” வெற்றியை கொண்டாடிய தயாரிப்பாளர் – ஜிவி பிரகாஷுக்கு RX100 பைக் பரிசு!

    0 shares
    Share 0 Tweet 0
  • சர்தார் 2 – விமர்சனம்

    0 shares
    Share 0 Tweet 0

Recent News

குரு சோமசுந்தரம் – அனுமோல் நடிக்கும் ‘பாரிஸ் கஃபே’ செப்டம்பர் 18ஆம் தேதி வெளியாகிறது!

September 11, 2026

“இம்மார்டல்” வெற்றியை கொண்டாடிய தயாரிப்பாளர் – ஜிவி பிரகாஷுக்கு RX100 பைக் பரிசு!

September 11, 2026

சர்தார் 2 – விமர்சனம்

September 11, 2026

இந்திய ரசிகர்களுக்கு மிகப்பிடித்த ஃபேமிலி திரில்லர் திரைப்படமான ‘த்ரிஷ்யம் தி கன்குலூஷன்’ (Drishyam The Conclusion) அக்டோபர் 2 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது!

September 11, 2026

ஒரு புதிய துணிச்சலான Zee 5-ஐ அறிமுகப்படுத்துகிறது: இந்தியாவின் ஸ்ட்ரீமிங் அனுபவத்தை மறுவரையறை செய்கிறது

September 10, 2026

‘என்ன விலை’ திரைப்படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா!

September 10, 2026
  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2025 Tamil2daynews.com.

error: Content is protected !!
No Result
View All Result
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்

© 2025 Tamil2daynews.com.