• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us
Tamil2daynews
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
Tamil2daynews
No Result
View All Result
Home சினிமா சினிமா செய்திகள்

ஆர்யா-சயீஷா நடிப்பில் “டெடி” படத்தின் ‘என் இனிய தனிமையே’ வீடியோ பாடல் வெளியாகியுள்ளது!

by Tamil2daynews
March 3, 2021
in சினிமா செய்திகள்
0
ஆர்யா-சயீஷா நடிப்பில் “டெடி” படத்தின் ‘என் இனிய தனிமையே’ வீடியோ பாடல் வெளியாகியுள்ளது!
0
SHARES
17
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp
தமிழ் சினிமாவில்  சிறந்த மற்றும் புதுமையான திரைப்படங்களை இயக்கிவரும் இயக்குநர் சக்தி சவுந்தர் ராஜன் இயக்கியுள்ள  திரைப்படம் “டெடி” . டிஸ்னி + ஹாட்ஸ்டார் மல்டிப்ளெக்ஸ் தளத்தில் ப்ரத்யேகமாக  வெளியாகும் தமிழ் மொழி திரைப்படமாகும்.
“டெடி” டிஸ்னி + ஹாட்ஸ்டார் விஐபி மற்றும் டிஸ்னி + ஹாட்ஸ்டார் பிரீமியம் சந்தாதாரர்களுக்காக பிரத்தியேகமாக மார்ச் 12, 2021 அன்று வெளியிடப்படுகிறது.
‘டெடி’ படத்தின் விறுவிறுப்பான ட்ரெய்லர் ரசிகர்களை கவர்ந்த நிலையில், “டெடி” படத்திலிருந்து முதல் தனிப்பாடலாக ‘என் இனிய தனிமையே’ பாடல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவின் நட்சத்திர நடிகர்  ஆர்யா நடித்திருக்கும் இந்த பாடல் உங்கள் தனிமையை போக்கும் விருந்தாக இருக்கும். தனிமையின் எதார்த்தத்தை கூறும் வகையில் இப்பாடல் அமைந்துள்ளது. இசையமைப்பாளர் டி.இமான் அவர்களின்  வியக்க வைக்கும்  இசையில், சித் ஸ்ரீராம்  தனது அழகான குரலில் இப்பாடலை பாடியுள்ளார். இப்பாடலின் மயக்கும் வரிகளை  மதன் கார்க்கி எழுதியுள்ளார்.
                         
‘டெடி’ படத்தில் நிஜத்தில் காதல் தம்பதிகளாக உலா வரும்  ஆர்யா மற்றும் சயீஷா நாயகன், நாயகியாக நடித்துள்ளனர்.  அவர்களுடைய காதலின் எழில்மிகு தருணங்கள் அட்டகாசமான வகையில்  திரையிலும்  உயிர்பெற்றுள்ளது. தமிழ் சினிமாவின் மிக சிறந்த  இயக்குநர்களில் ஒருவரான சக்தி சவுந்தர் ராஜன் இயக்கத்தில், ஸ்டுடியோ கிரீன் தயாரிப்பு நிறுவனத்தின் சார்பில்  K.E.ஞானவேல் ராஜா இப்படத்தை தயாரித்துள்ளார். ரசிகர்களால் பெரிதும்  எதிர்பார்க்கப்படும் “டெடி”  படம் டிஸ்னி + ஹாட்ஸ்டார் விஐபியில் பிரத்தியேகமாக மார்ச் 12, 2021 அன்று வெளியிடப்படுகிறது.
பாடலைப் பற்றி இசையமைப்பாளர் டி இமான் கூறியதாவது…
” என் இனிய தனிமையே”  பாடல் மாடர்ன் உலகின்  பாடல்.  இளைஞர்களின் இதயதுடிப்பை பிரதிபலிக்கும் அழகான பாடல். மதன் கார்க்கி எழுதிய அழகான பாடல் வரிகளை,  சித் ஸ்ரீராம் அற்புதமாக பாடியுள்ளார். இளைஞர்கள் விரும்பும் நட்சத்திர  நடிகர் ஆர்யா நடித்திருப்பதால், “டெடி” பார்வையாளர்களால் விரும்பப்படுவது உறுதி என்றார்.
பாடல் குறித்து நடிகர் ஆர்யா கூறியதாவது…,
” என் இனிய தனிமையே” ஒரு அருமையான பாடல், குறிப்பாக தனிமையை நேசிக்கும், தன்னை நேசிக்கும், தற்காலத்திய சிங்கிள் உலகத்தினருக்கான பாடல். இசையமைப்பாளர் டி. இமான், “டெடி”  படத்திற்கு வெகு சிறப்பான  இசையை வழங்கியுள்ளார். இப்பாடல் ரசிகர்களை மயக்கும் அதே  நேரத்தில் உத்வேகம் தரும்  ஆற்றலும் கொண்டுள்ளது. என்னைப் போலவே ரசிகர்களும் பாடலையும் ரசிப்பார்கள் என்று நம்புகிறேன். ” என்றார்.
பாடல் இணைப்பு:
கதை சுருக்கம்:
ஸ்ரீ வித்யா ஒரு இளம் மாணவி, கல்லூரி சுற்றுல்லா பயணத்தின் போது துரதிர்ஷ்டவசமான விபத்தை சந்தித்து ஒரு மருத்துவமனையில் தனியாக இருக்கிறார். இந்த மருத்துவமனையின் பணிபுரியும் சில  கெட்ட குணம் கொண்ட மருத்துவர்கள், உதவியற்று, தனியாக இருக்கும் அவரை, மருத்துவ பலன்களுக்கு பயன்படுத்திக் கொள்ள,  மருத்துவ ரீதியாக தூண்டப்பட்ட கோமாவில் வைக்கின்றனர். கரடி பொம்மையாக வாழும் பேச்சுதிறன் கொண்ட  “டெடி”  ஸ்ரீ வித்யாவின் அவல நிலையை அறிந்ததும், அவரது உயிரைக் காப்பாற்றத் தீர்மானிக்கிறது. ஆனால் அது தனியாக இதைச் செய்ய முடியாது என்பதை அறியும். ஒரு நாள், சிவா என்ற பலசாலி இளைஞன், ஒரு பெண்ணைக் காப்பாற்றுவதை “டெடி” காண்கிறது. மேலும் ஶ்ரீ வித்யா   விசயத்தில் அவனது உதவியை நாட முடிவு செய்கிறது. டெடி சிவாவிடம் முழு கதையையும் சொல்கிறது, இருவரும் ஸ்ரீ வித்யாவைக் காப்பாற்றும் ஒரே நோக்கத்துடன் இந்தியாவிலிருந்து ஐரோப்பாவுக்குச் செல்கின்றனர். பின்னர் நடக்கும் சாகசங்களே படம்.
ஆர்யா-சயீஷா நடிப்பில் ஃபேண்டஸி கமர்ஷியல் படமாக உருவாகியுள்ள ‘டெடி’ படத்தின்  உலகளாவிய பிரீமியரை அனைவரும் கண்டுகளியுங்கள். இப்படம் டிஸ்னி + ஹாட்ஸ்டார் வி.ஐ.பி மற்றும் டிஸ்னி + ஹாட்ஸ்டார் பிரீமியம் சந்தாதாரர்களுக்காக   பிரத்தியேகமாக 12 மார்ச் 2021 அன்று வெளியிடப்படுகிறது.
Previous Post

மிகப்பெரும் ஹிட்டடித்த, நடிகை ஹன்ஷிகா மோத்வானியின் இரண்டாவது ஆல்பம் “Mazaa” !

Next Post

தமிழ்நாடு சின்னத்திரை இயக்குனர்கள் சங்க தேர்தலில் போட்டியிடுகிறார் இயக்குனர் மங்கை அரிராஜன்

Next Post
தமிழ்நாடு சின்னத்திரை இயக்குனர்கள் சங்க தேர்தலில் போட்டியிடுகிறார் இயக்குனர் மங்கை அரிராஜன்

தமிழ்நாடு சின்னத்திரை இயக்குனர்கள் சங்க தேர்தலில் போட்டியிடுகிறார் இயக்குனர் மங்கை அரிராஜன்

Popular News

  • டங்கி : ஷாருக்கானின் ரசிகர்கள் மேள தாளத்துடன் பட்டாசுகளையும் வெடித்து மும்பை கெயிட்டி கேலக்ஸியில் முதல் நாள் முதல் காட்சியை காணத் தொடங்கினர். இது தொடர்பான காணொளிகள் இணையத்தில் வைரலாகி வருகின்றன. இது தொடர்பாக ஷாருக்கான் குறிப்பிடுகையில், ”நண்பர்களே மற்றும் தோழிகளே.. நல்ல நிகழ்ச்சிக்கு நன்றி” என தெரிவித்திருக்கிறார்.‌

    0 shares
    Share 0 Tweet 0
  • மாநில அளவிலான பாரா பளுதூக்கும் போட்டியில் வெற்றி வாகை சூடிய 9 மாற்றுத்திறனாளி வீரர், வீராங்கனைகள் தேசிய அளவிலான போட்டிக்குத் தேர்வாகியுள்ளனர்.*

    0 shares
    Share 0 Tweet 0
  • சூர்யாவின் தயாரிப்பில் உருவான ராமே ஆண்டாலும் ராவணே ஆண்டாலும் (ராரா) தமிழ் திரைப்படத்தின் ‘காசு’ எனும் தலைப்பிலான புதிய பாடலை AMAZON PRIME VIDEO வெளியிட்டது

    0 shares
    Share 0 Tweet 0
  • ‘ஸ்ட்ரீட் ஃபைட்டர்’ திரைப்பட டிரெய்லர்: நோவா சென்டினியோ, ஜேசன் மோமோவா மற்றும் வித்யுத் ஜமால் இணையும் அதிரடி ஆக்‌ஷன்!

    0 shares
    Share 0 Tweet 0
  • நடிகை சிம்ரனின் நெகிழ்ச்சியான மனிதநேய செயல் – மாற்றுத்திறனாளி சிறுமியின் கனவை நனவாக்கிய மறக்க முடியாத தருணம்!

    0 shares
    Share 0 Tweet 0

Recent News

‘ஸ்ட்ரீட் ஃபைட்டர்’ திரைப்பட டிரெய்லர்: நோவா சென்டினியோ, ஜேசன் மோமோவா மற்றும் வித்யுத் ஜமால் இணையும் அதிரடி ஆக்‌ஷன்!

July 31, 2026

நடிகை சிம்ரனின் நெகிழ்ச்சியான மனிதநேய செயல் – மாற்றுத்திறனாளி சிறுமியின் கனவை நனவாக்கிய மறக்க முடியாத தருணம்!

July 31, 2026

ஏழு மாநிலங்களை சேர்ந்த 1000 ரசிகர்களுடன் ஆறு மணி நேரத்திற்கும் மேலாக நேரம் செலவிட்டு மகிழ்ந்த நடிகர் அல்லு அர்ஜுன்!

July 31, 2026

மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள ‘மொத ராத்திரி’ திரைப்படம் ஆகஸ்ட் 21ஆம் தேதி உலகம் முழுவதும் பிரம்மாண்டமாக வெளியாகிறது!

July 31, 2026
நமித் மல்ஹோத்ராவின் ‘ராமாயணம்’ திரைப்படத்தின் அதிகாரப்பூர்வ டிரெய்லர் ஐந்து இந்திய மொழிகளில் உலகளவில் வெளியீடு!

நமித் மல்ஹோத்ராவின் ‘ராமாயணம்’ திரைப்படத்தின் அதிகாரப்பூர்வ டிரெய்லர் ஐந்து இந்திய மொழிகளில் உலகளவில் வெளியீடு!

July 31, 2026

பிரைம் வீடியோ, ‘வதந்தி சீசன் 2 – தி மிஸ்டரி ஆஃப் மணி’ சீரிஸிலிருந்து துள்ளலான புதிய ‘தெய்வா’ பாடலை வெளியிட்டது !

July 31, 2026
  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2025 Tamil2daynews.com.

error: Content is protected !!
No Result
View All Result
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்

© 2025 Tamil2daynews.com.