• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us
Tamil2daynews
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
Tamil2daynews
No Result
View All Result
Home சினிமா சினிமா செய்திகள்

சல்மான் கான் வெளியிட்ட சிவகார்த்திகேயனின் ‘ஹீரோ’ டீஸர்

by Tamil2daynews
October 26, 2019
in சினிமா செய்திகள்
0
சல்மான் கான் வெளியிட்ட சிவகார்த்திகேயனின் ‘ஹீரோ’ டீஸர்
0
SHARES
12
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp
‘தபாங் 3’ படத்தின் புரொமஷனல் நிகழ்ச்சிக்கு வந்த சல்மான்கான் இந்தி பேசும் பிரதேசங்களிலும் தமிழ்ப் படங்களுக்கு எந்த அளவுக்கு வரவேற்பு இருக்கிறது என்பதை விவரித்தவர், தனது சொந்த ஆர்வத்தின் காரணமாக சிவகார்த்திகேயனின் ‘ஹீரோ’ படத்தின் டீசரையும் வெளியிட்டார். தனது மைக்ரோ பிளாக்கில் டீசரை வெளியிட்ட சல்மான் ‘ஹீரோ’ படத்தின் ஸ்டைலான அம்சங்களையும் வெகுவாகப் பாராட்டினார்.

இது குறித்து விவரித்த தயாரிப்பாளர் கே.ஜே.ஆர்.ஸ்டுடியோஸ் அதிபர் கோட்டபாடி ராஜேஷ் தெரிவித்ததாவது…
“நாங்கள் எதிர்பார்த்தற்கும் மேலாக கிடைத்திருக்கிறது என்றுதான் சொல்ல வேண்டும். படத்தின் தயாரிப்பாளர் என்ற முறையில் உண்மையைச் சொல்ல வேண்டும் என்றால், படத்தின் டீசரை சல்மான் சாரிடம் காட்ட வேண்டும் என்று தான் நினைத்தோம். டீசரைப் பார்த்து ரசித்த சல்மான் கான் சார், தானாகவே முன் வந்து இதை நானே வெளியிடுகிறேனே என்றதுடன் டீஸரில் பங்கு பெற்ற நடிக நடிகையர் மற்றும் தொழில் நுட்பக் கலைஞர்கள் ஒவ்வொருவரைப் பற்றியும் கேட்டறிந்தார்.

சல்மான் சார் தமிழ்த் திரையுலகம் குறித்து எவ்வளவு ஆர்வமாக இருக்கிறார் என்பது அனைவருக்கும் தெரிந்ததுதான் என்றாலும், ஹீரோ படம் முழுமையாகப் பூர்த்தியடைந்ததும், தான் அதைப் பார்க்க மிகுந்த ஆர்வமாக இருப்பதாகத் தெரிவித்தார்”
கே.ஜே.ஆர்.ஸ்டுடியோஸ் நிறுவனத்தைப் பொறுத்தவரை இந்த ஆண்டு டிசம்பர் 20 என்பது ஒரு மிக முக்கியமான தினமாகும். காரணம், நிறுவனத்தின் சொந்தத் தயாரிப்பான ஹீரோ வெளியாகும் அதே தினத்தில், விநியோகம் செய்யும் தபாங் 3 படமும் வெளியாகிறது.
சிவகார்த்திகேயனுடன் ஆக்ஷன் கிங் அர்ஜுன் கல்யாணி ப்ரியதர்ஷன், அபி தியோல் பிரதான வேடங்களில் நடிக்கும் ஹீரோ படத்தை இருப்புத்திரை படத்தை இயக்கிய பி.எஸ்.மித்ரன் இயக்குகிறார். கே.ஜே.ஆர். ஸ்டுடியோஸ் சார்பில் கோட்டபாடி ராஜேஷ் தயாரிக்கும் இப்படத்துக்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார்.
 
Hero Movie Teaser Link : https://www.youtube.com/watch?v=MB9Dj_YEMW0
Previous Post

இரண்டு ஜோடிகளுடன் சந்தானம். R.கண்ணன் இயக்கும் புதிய படம் !

Next Post

ஸ்ரீ ரமணா – இணையத்தில் தீபாவளி

Next Post
ஸ்ரீ ரமணா – இணையத்தில் தீபாவளி

ஸ்ரீ ரமணா - இணையத்தில் தீபாவளி

Popular News

  • ‘கொலையாளி அல்ல..! நான் காதலன்..!’ என்ற அதிரடியான வாசகத்துடன் வெளியான நடிகர் ஷாருக்கானின் ‘கிங் – KING’ படத்தின் புதிய போஸ்டர்!

    0 shares
    Share 0 Tweet 0
  • ஜீவாவின் ‘தகப்பன்’ படத்திலிருந்து ‘தங்கப்புள்ள’ ஃபர்ஸ்ட் சிங்கிள் வெளியீடு!

    0 shares
    Share 0 Tweet 0
  • ஆர்.பி. பாலா இயக்கத்தில் நவீன் சந்திரா நடிக்கும் ‘என் சி 51’ படப்பிடிப்பு நிறைவு

    0 shares
    Share 0 Tweet 0
  • ஏகன் நடிப்பில் வெளியாகியுள்ள ‘ஹைக்கூ’ திரைப்படத்திற்கு கிடைத்து வரும் நேர்மறையான வரவேற்பால் திரையரங்குகளின் எண்ணிக்கை அதிகரிப்பு!

    0 shares
    Share 0 Tweet 0
  • பரத் – ராஜேஷ் மாதவன் இணையும் கலகலப்பான ஃபேமிலி என்டர்டெய்னர்! பூஜையுடன் கோலாகலமாகத் தொடங்கியது !

    0 shares
    Share 0 Tweet 0

Recent News

இசை கலைஞர் பால் டப்பாவின் புதிய மியூசிக் வீடியோ ஆல்பம் ‘ஏரோபிளேன்’ வெளியீடு

October 30, 2026

நடிகர்கள் ராஜ் அய்யப்பா, டெல்னா டேவிஸ் நடிப்பில் இறுதிக்கட்ட படப்பிடிப்பில் இருக்கும் ‘லவ் இங்க்’ திரைப்படத்தின் வில்லனாக சுனில் ரெட்டி!

October 30, 2026

“அக்கா’வில் நடிப்பதற்கு முன்பு என்னால் ஒரு கேங்க்ஸ்டராக நடிக்க முடியும் என நம்பவில்லை” கீர்த்தி சுரேஷ்!

October 30, 2026

ஜீவாவின் ‘தகப்பன்’ படத்திலிருந்து ‘தங்கப்புள்ள’ ஃபர்ஸ்ட் சிங்கிள் வெளியீடு!

October 30, 2026

‘வேட்டுவம்’ – பொங்கல் 2027-ல் உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது!

October 30, 2026
அமல் அஜித் – பிரியங்கா ராஜகுமாரன் நடிக்கும் புதிய திரைப்படம்  ‘ப்ளாக் நைட் பாய்ஸ்’! பூஜையுடன் படப்பிடிப்பு தொடங்கியது!

அமல் அஜித் – பிரியங்கா ராஜகுமாரன் நடிக்கும் புதிய திரைப்படம் ‘ப்ளாக் நைட் பாய்ஸ்’! பூஜையுடன் படப்பிடிப்பு தொடங்கியது!

October 27, 2026
  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2025 Tamil2daynews.com.

error: Content is protected !!
No Result
View All Result
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்

© 2025 Tamil2daynews.com.