• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us
Tamil2daynews
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
Tamil2daynews
No Result
View All Result
Home சினிமா

*’வஞ்சிக்கோட்டை வாலிபன்’ படத்தில் வரும் ‘கண்ணும் கண்ணும்’ காவியப் பாடலை சரிகமாவுக்காக ‘தங்க மீன்கள்’ சாதனா மீண்டும் உருவாக்கியுள்ளார்*

by Tamil2daynews
December 4, 2021
in சினிமா
0
*’வஞ்சிக்கோட்டை வாலிபன்’ படத்தில் வரும் ‘கண்ணும் கண்ணும்’ காவியப் பாடலை சரிகமாவுக்காக ‘தங்க மீன்கள்’ சாதனா மீண்டும் உருவாக்கியுள்ளார்*
0
SHARES
29
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp
‘தங்க மீன்கள்’ படத்தில் தனது அற்புதமான நடிப்பிற்காக சிறந்த குழந்தை நட்சத்திரத்திற்கான தேசிய விருதை வென்ற சாதனா, பின்னர் ராம் இயக்கிய விமர்சன ரீதியாக பாராட்டப்பட்ட ‘பேரன்பு’ படத்தில் மெகாஸ்டார் மம்முட்டியுடன் இணைந்து நடித்தார்.
முறையாக பயிற்சி பெற்ற நடனக் கலைஞரான இவர், தற்போது சரிகம தமிழ் யூடியூப் சேனலுக்காக ‘வஞ்சிக்கோட்டை வாலிபன்’ திரைப்படத்தில் இடம்பெற்ற ‘கண்ணும் கண்ணும்’ பாடலை மீண்டும் உருவாக்கியுள்ளார்.’வஞ்சிக்கோட்டை வாலிபன்’ படத்தில் வரும் ‘கண்ணும் கண்ணும் கலந்து’ பாடலும், அதற்கு இடையே வரும் ‘சபாஷ் சரியானப் போட்டி’ என்ற வசனமும் இறவாப் புகழ் பெற்றவையாகும். சி ராமச்சந்திரா இசையமைப்பில், கொத்தமங்கலம் சுப்பு பாடல் வரிகளில் பி லீலா, ஜிக்கி ஆகியோர் பாடி பத்மினி, வைஜெயந்திமாலா பாலி நடனமாடியிருந்த இப்பாடலை யாரும் மறக்க முடியாது.
தங்க மீன்கள் சாதனாவின் நடனத்திற்கு குவியும் பாராட்டுகள்
இப்பாடலின் மறு உருவாக்க வீடியோவில், பத்மினி மற்றும் வைஜெயந்திமாலா பாலி ஆகிய இரு வேடங்களிலும் சாதனா நடனமாடியுள்ளார், இதுவரை யாரும் செய்யாத முயற்சி இதுவாகும்.பிரபல வீணை மேஸ்ட்ரோ ராஜேஷ் வைத்யா ரீமாஸ்டர் செய்துள்ள இப்பாடலை சரிகமா வெளியிட்டுள்ளது. ஒளிப்பதிவை விஜய் தீபக் கையாண்டுள்ளார், சிஜி விஎஃப்எக்ஸ் காட்சிகளை நாகராஜன் சக்திவேல் வடிவமைத்துள்ளார். இந்த வீடியோவை சாதனாவே இயக்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்தப் பாடல் சரிகமா தமிழ் யூடியூப் சேனல் மற்றும் பிற ஆடியோ ஸ்ட்ரீமிங் தளங்களில் வெளியிடப்பட்டுள்ளது. காலத்தால் அழியாத பாடலுக்கு செய்யப்படும் பொருத்தமான மரியாதையாக புதிய பதிப்பு அமைந்துள்ளது. இதன் மூலம் சாதனா மிகப்பெரிய உயரத்தைத் தொடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
Previous Post

To mark World Disability Day, the unit of Maayon, produced by Double Meaning Productions Arun Mozhi Manickam and starring Sibiraj and Tanya Ravichandran in the lead, released a special teaser of the film, exclusively for the visually-challenged.

Next Post

சிக்கில் குருசரணின் ‘எழுவோம்’ பாடலை தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் திரு மா சுப்பிரமணியன் வெளியிட்டார்

Next Post
சிக்கில் குருசரணின் ‘எழுவோம்’ பாடலை தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் திரு மா சுப்பிரமணியன் வெளியிட்டார்

சிக்கில் குருசரணின் 'எழுவோம்' பாடலை தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் திரு மா சுப்பிரமணியன் வெளியிட்டார்

Popular News

  • நடிகர் மகேஷ்பாபுவின் பிறந்தநாளை முன்னிட்டு, அப்டேட்டை வெளியிட்ட ‘வாரணாசி- #VARANASI’ படக் குழு

    0 shares
    Share 0 Tweet 0
  • கள்ள நோட்டு படத்திற்காக சிகரெட் பிடிக்கப் பழகிக் கொண்ட நடிகை சுமதி!

    0 shares
    Share 0 Tweet 0
  • படத்தின் தலைப்பிலேயே இயக்குனர் சுந்தர் பாலு வெற்றியடைந்து விட்டார் – இயக்குனர், தயாரிப்பாளர் தியாகராஜன்

    0 shares
    Share 0 Tweet 0
  • வானம் இலக்கிய விருது, வாழ்நாள் சாதனையாளர் விருது எழுத்தாளர் ராஜ் கவுதமனுக்கு நீலம் பண்பாட்டு மையம் சார்பாக வழங்கப்பட்டது.

    0 shares
    Share 0 Tweet 0
  • அஜித்தின் வலிமையை பார்த்து ரசித்த மலேசிய அமைச்சர்!

    0 shares
    Share 0 Tweet 0

Recent News

‘அன்பில் அவன்’ படத்தின் ‘ஆசை வரமே’ ஃபர்ஸ்ட் சிங்கிள் வெளியானது !! –

August 15, 2026

தமிழ் மற்றும் கன்னடத்தில் டப்பிங் செய்து மனோரமாமேக்ஸ் தளத்தில் ஸ்ட்ரீம் ஆகும் ‘காட்டாளன்’ திரைப்படம்!

August 15, 2026

டிரைடெண்ட் ஆர்ட்ஸ் ஆர். ரவீந்திரன் தயாரிப்பில் பிரியன் ராஜேந்திரன் இயக்கத்தில் ‘மேரிகோல்ட்’

August 15, 2026

’மொத ராத்திரி’ திரைப்படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா!

August 15, 2026

விறுவிறுப்பான இரண்டாம் கட்ட படப்பிடிப்பில் ரஜினியின் ‘தர்மன்’.

August 15, 2026

மகுடம் – விமர்சனம்

August 15, 2026
  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2025 Tamil2daynews.com.

error: Content is protected !!
No Result
View All Result
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்

© 2025 Tamil2daynews.com.