• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us
Tamil2daynews
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
Tamil2daynews
No Result
View All Result
Home சினிமா சினிமா செய்திகள்

நடிகர் ரியோ ராஜ் தனது முதல் தயாரிப்பு நிறுவனமான River Route Studios-ஐ தொடங்கியுள்ளார்.

by Tamil2daynews
March 3, 2026
in சினிமா செய்திகள்
0
0
SHARES
5
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp
நடிகர் ரியோ ராஜ் தனது முதல் தயாரிப்பு நிறுவனமான River Route Studios-ஐ தொடங்கியுள்ளார்.

நடிகர் ரியோ ராஜ் தனது முதல் தயாரிப்பு நிறுவனமான River Route Studios-ஐ தொடங்கியதை பெருமையுடன் அறிவித்துள்ளார். இது அவரது திரைப்பயணத்தில் ஒரு முக்கியமான புதிய அத்தியாயமாகும். தனது தொழில்வாழ்க்கையின் தொடக்கம் முதலே புதிய திறமைகளை ஆதரித்து வந்த ரியோ ராஜ், பல அறிமுக இயக்குநர்களுடன் இணைந்து நினைவில் நிற்கும் வெற்றிப் படைப்புகளை வழங்கியுள்ளார். இந்தப் புதிய முயற்சியின் மூலம், அர்த்தமுள்ள மற்றும் ஈர்க்கக்கூடிய கதைகளை சொல்லும் தனது ஆர்வத்தை மேலும் விரிவுபடுத்தியுள்ளார்.

அகமகிழ்ச்சியுடன் ரியோ ராஜ் இதுபற்றிக் கூறும் பொழுது:

“இது என் நீண்டநாள் கனவு. என்னை நம்பி என் பயணத்திற்கு ஆதரவளித்த அனைவருக்கும் — என் குடும்பத்தினர், என் பெற்றோர், திரைப்படத் துறையில் உள்ள என் நண்பர்கள், மற்றும் ஊடக நண்பர்கள் அனைவருக்கும் நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். இவர்களின் இடையறாத ஊக்கமும் நம்பிக்கையும் தான் இன்று என்னை ஒரு நடிகனாக உருவாக்கியது. அந்த நம்பிக்கையே இப்போது இந்த புதிய முயற்சியை தொடங்கும் தன்னம்பிக்கையை அளித்துள்ளது. River Route Studios என்பது என் ஆர்வத்தின் வெளிப்பாடு. பார்வையாளர்களுடன் ஆழமாக இணையும் கதைகளை சொல்ல நான் ஆவலுடன் காத்திருக்கிறேன்.”

River Route Studios தனது பயணத்தை இரண்டு உறுதியான படைப்புகளுடன் தொடங்குகிறது. இவ்விரு திட்டங்களுக்கும் மதிப்புமிக்க முதலீட்டாளர்களான Red Rock Pictures மற்றும் Maali and Manvi Movie Makers ஆதரவளிக்கின்றனர்.
Project 1:

முதல் தயாரிப்பை கதிரவன் இயக்குகிறார். சக்தி சுப்பிரமணியன் ஒளிப்பதிவை கவனிக்கிறார். தேவ் பிரகாஷ் ரேகன் இசையமைக்கிறார்; சுந்தர் படத்தொகுப்பை மேற்கொள்கிறார். ராம் கலை இயக்குநராகவும், ஸ்ரீதேவி கோபாலகிருஷ்ணன் ஆடை வடிவமைப்பாளராகவும் பணியாற்றுகின்றனர். சண்டைக் காட்சிகளை சுகன் வடிவமைக்கிறார்.
இந்தத் திட்டம் புத்துணர்ச்சியும் ஆற்றலும் நிறைந்த தொழில்நுட்பக் குழுவை ஒன்றிணைக்கிறது. புதியதன்மை, ஈர்ப்பு, மற்றும் தொழில்நுட்ப வலிமை கொண்ட திரைப்படங்களை வழங்கும் நிறுவனத்தின் உறுதியை இது பிரதிபலிக்கிறது.

Project 2

இரண்டாவது திட்டத்தை கே. சிவமுனீஸ்வரன் எழுதி இயக்குகிறார். K. G. வருண் — ‘ஜோ’ மற்றும் ‘ஆண் பாவம் பொல்லாதது’ திரைப்படங்களின் படத்தொகுப்பாளராக அறியப்படும் இவர் — இந்தப் படத்தில் கதாநாயகனாக நடிக்கிறார். இதற்கு முன் யூடியூப் இணையத் தொடரிலும், ஒரு சுயாதீனத் திரைப்படத்திலும் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்துள்ளார். இது அவருக்கு வெள்ளித்திரையுலகில் நுழைவதற்கானமுன்னேற்றமாக அமைகிறது.
ராகுல் K G விக்னேஷ் ஒளிப்பதிவாளராக பணியாற்றுகிறார்; வருண் K G படத்தொகுப்பை கவனிக்கிறார். ABR கலை இயக்குநராக இணைகிறார். ஸ்ரீதேவி கோபாலகிருஷ்ணன் உடை வடிவமைப்பை மேற்கொள்கிறார்; சித்து குமார் இசையமைக்கிறார்.
இந்தத் திட்டம் திறமையான தொழில்நுட்பக் கலைஞர்கள் மற்றும் கதையாசிரியர்களுடன் இணைந்து செயல்படுவதற்கான River Route Studios-இன் நோக்கத்தை வலியுறுத்துகிறது. மேலும், புதிய கலைஞர்களுக்கு வாய்ப்பளிக்கும் அதன் அர்ப்பணிப்பையும் வெளிப்படுத்துகிறது.

ஒரு புதிய தொடக்கம்:

River Route Studios மூலம், ரியோ ராஜ் வலுவான கதைகளைக் கொண்ட திரைப்படங்களை உருவாக்கி, வளர்ந்து வரும் திறமைகளை ஊக்குவித்து, பார்வையாளர்களுக்கு தாக்கமிக்க மற்றும் நினைவில் நிற்கும் திரை அனுபவங்களை வழங்குவதை இலக்காகக் கொண்டுள்ளார்.

Previous Post

சூர்யா நடிக்கும் #சூர்யா46 படத்திற்கு ‘விஸ்வநாத் & சன்ஸ்’ – என தலைப்பிடப்பட்டுள்ளது !!

Next Post

“தொடக்கம்” திரைப்படம் மார்ச் 2 அன்று சிறப்புபூஜையுடன் தொடக்கம்!

Next Post

“தொடக்கம்” திரைப்படம் மார்ச் 2 அன்று சிறப்புபூஜையுடன் தொடக்கம்!

Popular News

  • முன்னணி தயாரிப்பாளர் ஆர். ரவீந்திரன், டிரைடென்ட் ஆர்ட்ஸின் 22வது படத்தை சுல்தான் ஜசானி மற்றும் சேத்தன் தியோலேகர் ஆகியோரோடு இணைந்து தயாரிக்கிறார்

    0 shares
    Share 0 Tweet 0
  • ஹைக்கூ – விமர்சனம்

    0 shares
    Share 0 Tweet 0
  • “ஒரு மனிதனின் வாழ்க்கையில் இருவேறு காலக்கட்டங்களை பேசும் திரைப்படம் ‘ஹைக்கூ’” நடிகர் ஏகன்

    0 shares
    Share 0 Tweet 0
  • 418 – விமர்சனம்

    0 shares
    Share 0 Tweet 0
  • விஜய் சேதுபதி ஒரு ஜென்டில்மேன்.அவருடன் நடித்தது மறக்க முடியாதது: வியக்கிறார் நடிகை சாய் ரோகிணி!

    0 shares
    Share 0 Tweet 0

Recent News

“‘ஹைக்கூ’ ரசிகர்களின் மனதைத் தொடும் ஃபீல் குட் என்டர்டெயினர் திரைப்படம்”- இயக்குநர் யுவராஜ் சின்னசாமி!

October 23, 2026

நாய்ஸ் அண்டு கிரைன்ஸ் நிறுவனத்தின் முதல் தயாரிப்பான ‘கோயம்பத்தூர் மாப்பிள்ளை’ திரைப்படம் டிசம்பர் 24 அன்று உலகெங்கும் வெளியாகிறது

October 23, 2026

சட்டமும் நீதியும்-2 – விமர்சனம்

October 23, 2026

418 – விமர்சனம்

October 23, 2026

“ஒரு மனிதனின் வாழ்க்கையில் இருவேறு காலக்கட்டங்களை பேசும் திரைப்படம் ‘ஹைக்கூ’” நடிகர் ஏகன்

October 23, 2026

யஷ் ராஜ் என்டர்டெயின்மென்ட் தயாரிப்பில், கீர்த்தி சுரேஷ் – ராதிகா ஆப்தே மோதும் அதிரடி கேங்ஸ்டர் கதையான ‘அக்கா’ வெப் தொடரின் டிரெய்லரை வெளியிட்டது நெட்ஃபிளிக்ஸ்!

October 23, 2026
  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2025 Tamil2daynews.com.

error: Content is protected !!
No Result
View All Result
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்

© 2025 Tamil2daynews.com.