• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us
Tamil2daynews
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
Tamil2daynews
No Result
View All Result
Home சினிமா சினிமா செய்திகள்

சூர்யா நடிக்கும் #சூர்யா46 படத்திற்கு ‘விஸ்வநாத் & சன்ஸ்’ – என தலைப்பிடப்பட்டுள்ளது !!

by Tamil2daynews
March 3, 2026
in சினிமா செய்திகள்
0
0
SHARES
7
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp
சூர்யா நடிக்கும் #சூர்யா46 படத்திற்கு  ‘விஸ்வநாத் & சன்ஸ்’ – என தலைப்பிடப்பட்டுள்ளது !!

நடிகர் சூர்யா நடிக்கும் அடுத்த படம் #சூர்யா46 தற்போது அதிகாரப்பூர்வமாக ‘விஸ்வநாத் & சன்ஸ்’ என பெயரிடப்பட்டுள்ளது. பெயரே சொல்வது போல், இப்படம் ஒரு அழகான, உணர்ச்சிபூர்வமான குடும்பக் கதையாக  உருவாகியுள்ளது. ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்களில் சூர்யா ஒரு  குழந்தையுடன் தோன்றும் காட்சி, ரசிகர்களுக்கு பழைய நினைவுகளை எழுப்பும் வகையில் நெகிழ்ச்சியும், நம்பிக்கையும் கலந்த இனிய உணர்வை தருகிறது.

முன்னதாக ‘வாத்தி’ மற்றும் ‘லக்கி பாஸ்கர்’ போன்ற வெற்றிப் படங்களை வழங்கிய இயக்குநர் வெம்கி அட்லூரி (Venky Atluri) இந்தப் படத்தை இயக்குகிறார். உணர்வுப்பூர்வமான கதை சொல்லலில் வல்லவரான இவர், இந்தப் படத்திலும் மறக்க முடியாத அனுபவத்தை வழங்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

Imageஇப்படத்தில் மமிதா பைஜு, ராதிகா சரத்குமார், ரவீனா டாண்டன் உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள்  இணைந்து நடித்துள்ளனர்.  குடும்பத்தோடு கொண்டாடும்  அசத்தலான திரை அனுபவமாக உருவாகும் இப்படத்தின் படப்பிடிப்பு முழுமையாக நிறைவு பெற்ற நிலையில், வருகிற ஜூலை மாதம் உலகம் முழுவதும் பிரம்மாண்டமாக வெளியாகத் தயாராகி வருகிறது. இப்படத்தின் டீசர் விரைவில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இப்படத்திற்கான இசையை ஜி. வி. பிரகாஷ் குமார் அமைத்துள்ளார். ஒளிப்பதிவை நிமிஷ் ரவி மேற்கொள்கிறார். எடிட்டிங்கை நவீன் நூலி கவனிக்கிறார். தயாரிப்பு வடிவமைப்பை பங்களான் மேற்கொள்கிறார்.

தயாரிப்பாளராக சூர்யதேவர நாக வம்ஷீ, சாயி சௌஜன்யா இணைந்து இந்தப் படத்தை உருவாக்குகின்றனர்.  சிதாரா எண்டர்டெயின்மெண்ட்ஸ் (Sithara Entertainments) மற்றும் ஃபார்ச்சூன் ஃபோர் சினிமாஸ் ( Fortune Four Cinemas ) நிறுவனங்களின் தயாரிப்பில், ஸ்ரீகரா ஸ்டுடியோஸ் (Srikara Studios) வழங்கும் இப்படம், தமிழ்நாட்டில் திங்க் ஸ்டுடியோஸ் ( Think Studios) மூலம் வெளியிடப்படுகிறது.

குடும்ப உணர்வுகளும், நெகிழ்ச்சியும், வெகுஜன அம்சங்களும் கலந்த ஒரு பிரம்மாண்ட குடும்பக் கதை – ‘விஸ்வநாத் & சன்ஸ்’ திரைப்படத்தை ஜூலை மாதம் திரையரங்குகளில் கொண்டாடலாம் !

Previous Post

ஓ பட்டர்ஃப்ளை திரைப்படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு!

Next Post

நடிகர் ரியோ ராஜ் தனது முதல் தயாரிப்பு நிறுவனமான River Route Studios-ஐ தொடங்கியுள்ளார்.

Next Post

நடிகர் ரியோ ராஜ் தனது முதல் தயாரிப்பு நிறுவனமான River Route Studios-ஐ தொடங்கியுள்ளார்.

Popular News

  • சர்தார் 2 – விமர்சனம்

    0 shares
    Share 0 Tweet 0
  • இந்திய ரசிகர்களுக்கு மிகப்பிடித்த ஃபேமிலி திரில்லர் திரைப்படமான ‘த்ரிஷ்யம் தி கன்குலூஷன்’ (Drishyam The Conclusion) அக்டோபர் 2 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது!

    0 shares
    Share 0 Tweet 0
  • “இம்மார்டல்” வெற்றியை கொண்டாடிய தயாரிப்பாளர் – ஜிவி பிரகாஷுக்கு RX100 பைக் பரிசு!

    0 shares
    Share 0 Tweet 0
  • ஒரு புதிய துணிச்சலான Zee 5-ஐ அறிமுகப்படுத்துகிறது: இந்தியாவின் ஸ்ட்ரீமிங் அனுபவத்தை மறுவரையறை செய்கிறது

    0 shares
    Share 0 Tweet 0
  • குரு சோமசுந்தரம் – அனுமோல் நடிக்கும் ‘பாரிஸ் கஃபே’ செப்டம்பர் 18ஆம் தேதி வெளியாகிறது!

    0 shares
    Share 0 Tweet 0

Recent News

குரு சோமசுந்தரம் – அனுமோல் நடிக்கும் ‘பாரிஸ் கஃபே’ செப்டம்பர் 18ஆம் தேதி வெளியாகிறது!

September 11, 2026

“இம்மார்டல்” வெற்றியை கொண்டாடிய தயாரிப்பாளர் – ஜிவி பிரகாஷுக்கு RX100 பைக் பரிசு!

September 11, 2026

சர்தார் 2 – விமர்சனம்

September 11, 2026

இந்திய ரசிகர்களுக்கு மிகப்பிடித்த ஃபேமிலி திரில்லர் திரைப்படமான ‘த்ரிஷ்யம் தி கன்குலூஷன்’ (Drishyam The Conclusion) அக்டோபர் 2 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது!

September 11, 2026

ஒரு புதிய துணிச்சலான Zee 5-ஐ அறிமுகப்படுத்துகிறது: இந்தியாவின் ஸ்ட்ரீமிங் அனுபவத்தை மறுவரையறை செய்கிறது

September 10, 2026

‘என்ன விலை’ திரைப்படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா!

September 10, 2026
  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2025 Tamil2daynews.com.

error: Content is protected !!
No Result
View All Result
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்

© 2025 Tamil2daynews.com.