• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us
Tamil2daynews
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
Tamil2daynews
No Result
View All Result
Home செய்திகள்

பள்ளி ஆசிரியர் நியமன  உச்ச வயது வரம்பில் முந்தைய நிலையே தொடர வேண்டும்! 

by Tamil2daynews
October 19, 2021
in செய்திகள்
0
பள்ளி ஆசிரியர் நியமன  உச்ச வயது வரம்பில் முந்தைய நிலையே தொடர வேண்டும்! 
0
SHARES
3
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp
தமிழக அரசுப் பள்ளிகளில் முதுகலைப் பட்டதாரி ஆசிரியர்கள் நியமனத்தில் உச்ச வயதுவரம்பு குறைக்கப்பட்டது ஏற்புடையதல்ல. இவ்விவகாரத்தில் முந்தைய நிலையே தொடர வேண்டும் என்பதை மக்கள் நீதி மய்யம் வலியுறுத்துகிறது.
தமிழக பள்ளிக்கல்வித் துறையில் அரசுப் பள்ளி ஆசிரியர் மற்றும் பணியாளர் நியமன உச்ச வயதுவரம்பு 57 ஆக இருந்தது. கடந்த அ.தி.மு.க ஆட்சிக்காலத்தில், கொரோனா தொற்றைத் தொடர்ந்து ஓய்வுபெறும் வயது 58-லிருந்து 60 ஆக உயர்த்தப்பட்டது. அப்போது நியமன வயதுவரம்பை 59 ஆக உயர்த்தியிருக்க வேண்டும். மாறாக, பொதுப்பிரிவினருக்கு 40 வயது என்றும், இடஒதுக்கீட்டுப் பிரிவினருக்கு 45 என்றும் குறைத்துவிட்டனர். இதை எதிர்த்து பட்டதாரிகள் போராடிய நிலையில், அப்போது எதிர்க்கட்சித் தலைவராக இருந்த திரு.மு.க.ஸ்டாலின், “ஆசிரியர்களுக்கான வயதுவரம்பைக் குறைத்து, கேடுகெட்ட மனநிலையை வெளிப்படுத்தியுள்ளது எடப்பாடி அரசு” என்று கடுமையாக விமர்சித்தார். அதுதொடர்பான அரசாணையை ரத்துசெய்ய வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார். இப்போது தி.மு.க ஆட்சிக்கு வந்துவிட்டது. இந்த ஆட்சியிலாவது வயதுவரம்பு உயர்த்தப்படும் என்று பட்டதாரிகள் எதிர்பார்த்திருந்தனர். ஆனால், மாபெரும் மௌனமே பதிலாக இருந்தது… போராட்டம் மட்டும் தொடர்ந்தது!
இந்த நிலையில் வேண்டா வெறுப்பாகச் செய்வதைப்போல தி.மு.க அரசு, அரசாணை ஒன்றைப் பிறப்பித்துள்ளது. அதில் ஆசிரியர் நியமன வயதுவரம்பு பொதுப்பிரிவினருக்கு 40-லிருந்து 45 ஆகவும் இடஒதுக்கீட்டுப் பிரிவினருக்கு 45-லிருந்து 50 ஆகவும் ஐந்து ஆண்டுகள் உயர்த்தப்பட்டுள்ளது.
அதுவும் இந்த அறிவிப்பானது 31-12-2022 வரையே செல்லுபடியாகும். பிறகு, மீண்டும் வயதுவரம்பு 45-லிருந்து 42 ஆகவும் 50-லிருந்து 47 ஆகவும் மூன்றாண்டுகள் குறையும். கொடுப்பதுபோல் கொடுத்துவிட்டு நைச்சியமாகத் திரும்பப் பெறும் வழிமுறை இது. வயதுவரம்பு குறைப்புப் பிரச்சனையால், தமிழ்நாட்டில் 3 முதல் 5 லட்சம் பட்டதாரிகள் பாதிக்கப்படுவார்கள் என்கிறார்கள் கல்வித்துறையில் இருப்பவர்கள். அரசு வேலை என்பது பலருக்கும் கனவாக இருந்துவரும் நிலையில், அவர்களின் கனவுகள் கருகிப்போவதை அனுமதிக்கக்கூடாது. இவ்விவகாரத்தில் தி.மு.க அரசானது, எதிர்க்கட்சியாக இருந்தபோது வலியுறுத்தியதைப்போலவே உச்ச வயதுவரம்பை 57 அல்லது 59 ஆக்குவதற்கான ஆணை பிறப்பிக்க வேண்டும் என்று  மக்கள் நீதி மய்யம் கேட்டுக்கொள்கிறது.
– செந்தில் ஆறுமுகம்
மாநிலச் செயலாளர், மக்கள் நீதி மய்யம்.
Previous Post

தொட்டதெல்லாம் வெற்றி காணும் நாம் தமிழர் சீமான்…

Next Post

*SKLS கேலக்சி மால் புரொடக்‌ஷன்ஸ், மெட்ராஸ் ஸ்டோரிஸ் உடன் இணையும் சர்ஜுன் இயக்கத்தில் புதிய படம்* 

Next Post
*SKLS கேலக்சி மால் புரொடக்‌ஷன்ஸ், மெட்ராஸ் ஸ்டோரிஸ் உடன் இணையும் சர்ஜுன் இயக்கத்தில் புதிய படம்* 

*SKLS கேலக்சி மால் புரொடக்‌ஷன்ஸ், மெட்ராஸ் ஸ்டோரிஸ் உடன் இணையும் சர்ஜுன் இயக்கத்தில் புதிய படம்* 

Popular News

  • ‘நிறம்’ திரைப்படத்தின் இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!

    ‘நிறம்’ திரைப்படத்தின் இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!

    0 shares
    Share 0 Tweet 0
  • ஆகஸ்ட் 14ஆம் தேதி ஆலி

    0 shares
    Share 0 Tweet 0
  • புத்தியே சிறந்த ஆயுதம் ; க்ரைம் த்ரில்லராக உருவாகும் ‘பீப்’ திரைப்படம்

    0 shares
    Share 0 Tweet 0
  • பிரைம் வீடியோ வழங்க, சசிகுமார் நடிக்கும் ‘வதந்தி சீசன் 2: தி மிஸ்டரி ஆஃப் மணி’ இணையத் தொடரின் பத்திரிகையாளர் சந்திப்பு.

    0 shares
    Share 0 Tweet 0
  • ‘ஸ்ட்ரீட் ஃபைட்டர்’ திரைப்பட டிரெய்லர்: நோவா சென்டினியோ, ஜேசன் மோமோவா மற்றும் வித்யுத் ஜமால் இணையும் அதிரடி ஆக்‌ஷன்!

    0 shares
    Share 0 Tweet 0

Recent News

‘நிறம்’ திரைப்படத்தின் இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!

‘நிறம்’ திரைப்படத்தின் இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!

August 3, 2026

ஆகஸ்ட் 14ஆம் தேதி ஆலி

August 3, 2026

புத்தியே சிறந்த ஆயுதம் ; க்ரைம் த்ரில்லராக உருவாகும் ‘பீப்’ திரைப்படம்

August 3, 2026

வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல் நிறுவனம் தயாரிக்கும் ‘டயங்கரம்’ படத்தின் படப்பிடிப்பு நிறைவு

August 3, 2026

கார்த்தி நடிப்பில் ‘சர்தார் 2’ டீசர் வெளியீடு

August 3, 2026

பிரைம் வீடியோ வழங்க, சசிகுமார் நடிக்கும் ‘வதந்தி சீசன் 2: தி மிஸ்டரி ஆஃப் மணி’ இணையத் தொடரின் பத்திரிகையாளர் சந்திப்பு.

August 3, 2026
  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2025 Tamil2daynews.com.

error: Content is protected !!
No Result
View All Result
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்

© 2025 Tamil2daynews.com.