• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us
Tamil2daynews
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
Tamil2daynews
No Result
View All Result
Home சினிமா சினிமா செய்திகள்

மாலா மணியன் தயாரிப்பில் குட்டி ரேவதி இயக்கத்தில் உருவாகியுள்ள ‘சிறகு’ ; உலக மகளிர் தினத்தில் சிறப்பு காட்சி திரையிடல்

by Tamil2daynews
February 27, 2026
in சினிமா செய்திகள்
0
0
SHARES
47
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

மாலா மணியன் தயாரிப்பில் குட்டி ரேவதி இயக்கத்தில் உருவாகியுள்ள ‘சிறகு’ ; உலக மகளிர் தினத்தில் சிறப்பு காட்சி திரையிடல்

 

ஃபர்ஸ்ட் காபி புரொடக்சன்ஸ் ( First Copy Productions ) சார்பில் மாலா மணியன் தயாரிப்பில் உருவாகி உள்ள படம் ‘சிறகு’. கவிஞரும் எழுத்தாளருமான குட்டி ரேவதி இப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகிறார். இவர் தனுஷ் நடித்த ‘மரியான்’ படத்தில் துணை இயக்குநராக பணியாற்றியவர்.

‘மெட்ராஸ் ஜானி’ ஹரிகிருஷ்ணன் கதாநாயகனாக நடிக்க, கோவையைச் சேர்ந்த அக்ஷிதா கதாநாயகியாக நடித்திருக்கிறார். நிவாஸ், வித்யா, காளி வெங்கட் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

அரோல் குரோலி இசையமைக்க, ‘பியார் பிரேமா காதல்’ உள்ளிட்ட படங்களில் பணியாற்றிய ராஜா பட்டச்சார்ஜி ஒளிப்பதிவில் உருவாகியுள்ள இப்படத்திற்கு அருண்குமார் வி.எஸ் படத்தொகுப்பு செய்துள்ளார்.

சிறகு’ படம் குறித்து தயாரிப்பாளர் மாலா மணியன் கூறும்போது,

“எந்த காலத்திற்கும் ஏற்ற ஒரு கதை அம்சத்துடன் தான் இந்த படம் உருவாகியுள்ளது. பயணம், இசை மற்றும் உறவுகளை மையப்படுத்தி ஒரு ஃபீல் குட் படமாக இளைஞர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் குடும்பத்துடன் தியேட்டருக்கு வந்து பார்த்து ரசிக்கும் விதமாக இப்படம் உருவாகி இருக்கிறது.. க்ரவுட் ஃபண்டிங் போல ‘பிரண்ட்ஸ் ஃபண்டிங்’ என்று சொல்லும் விதமாக இந்த படத்தை நண்பர்கள் உதவியுடன் தான் தயாரித்திருக்கிறேன்..

இப்படி ஒரு படம் உருவாகி இருக்கிறது என்பது மக்களுக்கு முதலில் தெரிய வேண்டும். அதற்காக ஏற்கனவே சென்னையில் 5 முறை பொதுமக்கள் பார்வைக்காக இப்படத்தின் சிறப்பு காட்சியை திரையிட்டு அவர்களின் கருத்துக்கள் கேட்கப்பட்டு தயாரிப்பு நிறுவனத்தின் அதிகார்ப்பூர்வ இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவை பதிவேற்றப்பட்டுள்ளன..

இதை அடுத்து உலக மகளிர் தினமான மார்ச் 8ஆம் தேதி (ஞாயிறு) மதுரையில் உள்ள கோபுரம் சினிமாஸ் திரையரங்கில் மாலை 6 மணிக்கு ஒரு சிறப்பு பிரீமியர் காட்சியை திரையிட இருக்கிறோம்.

இந்த சிறப்பு காட்சியில் பத்திரிகையாளர்கள், விமர்சகர்கள், சமூக ஊடகவியலார்கள் என பலதரப்பட்ட நபர்கள் கலந்து கொள்ள இருக்கிறார்கள்.

பெண்களை மையப்படுத்தி உருவாகியுள்ள இந்த படத்தின் சிறப்பு காட்சியில் இயக்குநர் குட்டி ரேவதி, நாயகி அக்ஷிதா, தயாரிப்பாளரான நான் என மூன்று பெண்களுமே கலந்து கொள்கிறோம்.

2023ல் நார்வேயில் நடைபெற்ற சர்வதேச திரைப்பட விழாவில் ‘சிறகு’ படம் கலந்து கொண்டு சிறந்த முதல் தயாரிப்பாளர், சிறந்த அறிமுக கதாநாயகி என இரண்டு பரிசுகளை பெற்றது. அனைத்து தரப்பினரும் ரசிக்க கூடிய வகையில் இப்படம் உருவாகி இருக்கிறது” என்று கூறினார்.

‘சிறகு’ படத்தின் சிறப்பு பிரீமியர் காட்சியில் கலந்துகொள்ள விருப்பம் உள்ளவர்கள் இப்படத்தின் போஸ்டரில் கொடுக்கப்பட்டுள்ள தொலைபேசி எண்ணை தொடர்புகொண்டு முன்பதிவு செய்துகொள்ளலாம்..
Previous Post

தாய் கிழவி – விமர்சனம்

Next Post

மாசாணி பிக்சர்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் ஆர். ராஜசேகர் தயாரிப்பில், விமல் – நட்டி நட்ராஜ் நடித்திருக்கும் ‘வடம்’ படத்தின் இசை வெளியீட்டு விழா

Next Post

மாசாணி பிக்சர்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் ஆர். ராஜசேகர் தயாரிப்பில், விமல் - நட்டி நட்ராஜ் நடித்திருக்கும் 'வடம்' படத்தின் இசை வெளியீட்டு விழா

Popular News

  • அசோக் செல்வன் நடிக்கும் ‘அன்பில் அவன்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் டைட்டிலுக்கான டீசர் வெளியீடு

    0 shares
    Share 0 Tweet 0
  • மாஸ் மகாராஜா ரவி தேஜா நடிப்பில், சிவா நிர்வாணா இயக்கத்தில், மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள ‘இருமுடி’ திரைப்படத்தின் தெலுங்கு மற்றும் தமிழ் மொழி டிரெய்லர் வெளியானது!

    0 shares
    Share 0 Tweet 0
  • நூறு சாமி திரைப்படம் ZEE5-இல் 100 மில்லியன் பார்வை நிமிடங்களை கடந்தது; காதல், குடும்பம் மற்றும் இரண்டாவது வாய்ப்புகளைப் பேசும் அதன் உணர்வுபூர்வமான கதையால் ரசிகர்களின் இதயங்களை வென்றது

    0 shares
    Share 0 Tweet 0
  • ஆகஸ்ட் 7 முதல் தமிழிலும் கிடைக்கும் ZEE5-இல் பிரம்மாண்ட டிஜிட்டல் பிரீமியருக்கு தயாராகும் ‘லெனின்’

    0 shares
    Share 0 Tweet 0
  • விசாகப்பட்டினத்தில் பிரம்மாண்டமாக ‘AAA சினிமாஸ்’ தொடங்கி, தனது பொழுதுபோக்கு சாம்ராஜ்யத்தை விரிவுபடுத்தும் ஐகான் ஸ்டார் அல்லு அர்ஜுன்!

    0 shares
    Share 0 Tweet 0

Recent News

மாஸ் மகாராஜா ரவி தேஜா நடிப்பில், சிவா நிர்வாணா இயக்கத்தில், மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள ‘இருமுடி’ திரைப்படத்தின் தெலுங்கு மற்றும் தமிழ் மொழி டிரெய்லர் வெளியானது!

August 13, 2026

நூறு சாமி திரைப்படம் ZEE5-இல் 100 மில்லியன் பார்வை நிமிடங்களை கடந்தது; காதல், குடும்பம் மற்றும் இரண்டாவது வாய்ப்புகளைப் பேசும் அதன் உணர்வுபூர்வமான கதையால் ரசிகர்களின் இதயங்களை வென்றது

August 13, 2026

அசோக் செல்வன் நடிக்கும் ‘அன்பில் அவன்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் டைட்டிலுக்கான டீசர் வெளியீடு

August 13, 2026

‘பியார் பிரேமா கல்யாணம்’ டிரெய்லரை வெளியிட்ட Netflix – வித்தியாசமான ட்விஸ்டுடன் வரும் முழுமையான குடும்ப பொழுதுபோக்கு திரைப்படம்!

August 12, 2026

நடிகர் வைபவ்வின் ‘மாறுவேஷம்’ திரைப்படம் யூ/ஏ சான்றிதழுடன் அக்டோபர் 1 முதல் உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது!

August 12, 2026

‘பியார் பிரேமா கல்யாணம்’ டிரெய்லர் வெளியீட்டு விழா !

August 12, 2026
  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2025 Tamil2daynews.com.

error: Content is protected !!
No Result
View All Result
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்

© 2025 Tamil2daynews.com.