ரெட்ட தல – விமர்சனம் ரேட்டிங் – 4 / 5

ரெட்ட தல – விமர்சனம்

 

நடிகர் அருண் விஜய்க்கு சமீப காலமாக எந்த படமும் தமிழில் கை கொடுக்காத நிலையில் 2025 ஆம் ஆண்டு கிறிஸ்துமஸ் அன்று வெளியாகி இரக்கும் படம் ரெட்டை தல.

பாலாவின் இயக்கத்தில் இவர் நடித்த  படமான வணங்கான் ரசிகர்களை பெரிதாக கவரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

க்ரிஸ் திருக்குமரன் இயக்கத்தில் அருண் விஜய் இரட்டை வேடங்களில் இப்படத்தில் நடித்துள்ளார். சித்தி இத்னானி , தான்யா ரவிச்சந்திரன் நாயகியாக நடித்துள்ளனர். சாம் சி.எஸ் படத்திற்கு இசையமைத்துள்ளார்.
‘ ஆசையே தீய எண்ணங்கள் உருவாவதற்கு மூலக்காரணம்’ என்கிற புத்தரின் வாக்கியம ரெட்ட தல படத்தின் மையக் கதை. பகை , அதிகார ஆசைகள் ஒரு மனிதனை எந்த எல்லைவரை கொண்டு செல்லும் என்பதை புதுமையான ஒரு திரைக்கதையின் வழி சொல்ல முயன்றிருக்கிறார் கிரிஸ் திருக்குமரன். முதல் நிமிடத்தில்  படம் ஒரு முக்கியமான கேள்வியை முன்வைக்கிறது. இந்த கேள்விககான முடிவு கடைசி வரை கதையை நகர்த்திச் செல்லும் அம்சமாக இருக்கிறது. அடுத்தடுத்து வரும் எதிர்பாராத ட்விஸ்ட்கள் . தொழில்நுட்ப நேர்த்தியோடு எடுக்கப்பட்ட விறுவிறுப்பான சேஸிங் மற்றும்  ஆக்‌ஷன் காட்சிகள் படத்தின் பெரிய பலம் . இரண்டு கதாபாத்திரங்களுக்கும் இருக்கும் வித்தியாசங்களை தனது நடிப்பில் நன்றாக கொண்டு வந்திருக்கிறார் அருண் விஜய். நாயகி சித்தி இத்னானியின் வழியே இந்த கதை சொல்லப்படுவதால் அவருக்கு படம் முழுவதும் சமமான கதாபாத்திரம் கொடுக்கப்பட்டிருக்கிறது.
2 மணி நேரம் விறுவிறுவென ஓடும் கதையில் நிறுத்தி யோசிப்பதற்கோ ஃபீல் பண்ணுவதற்கோ பெரியளவில் நேரம் இருப்பதில்லை. இயக்குநர் ஒரு கதையுலகத்தை கற்பனை செய்திருக்கிறார். அதை நாம் பார்க்கிறோம். விறுப்பான ஆக்‌ஷன் திரைப்படங்களை பார்க்க விரும்புபவர்களுக்கு ரெட்ட தல படம் நல்ல க்றிஸ்துமஸ் கேக் தான்.
படத்தின் இன்னொரு நாயகன் என்று சொன்னால் இசையமைப்பாளர் சாம் சிஎஸ் என்று சொல்லலாம் அந்த அளவுக்கு திரைக்கதையுடன் ஒன்றிய பின்னணி இசையில் பின்னி பெடல் எடக்கிறார்

அருண் விஜய் இதுவரை எந்த படத்திற்கும் எடுக்காத ரிஸ்க் இந்த படத்திற்கு எடுத்திருக்கிறார் உடற்பயிற்சிக்கு உண்டான அனைத்தும் அவரது பாடி லாங்குவேஜ தெரிகிறது

கோலிவுட்டில் சிறந்த ஆக்‌ஷன் ஹீரோக்களில் அருண் விஜயும் ஒருவராக இருந்து வருகிறார். தடையறத் தாக்க ,  என்னை அறிந்தால் , செக்கச் சிவந்த வானம் , தடம் போன்ற படங்களில் ஆக்‌ஷன் மற்றும் தன்னுடைய உடன் மொழிக்காக பாராட்டப்பட்டிருக்கிறார். அதே நேரம் பாண்டவர் பூமி , இயற்கை ஆகிய படங்களில் அருண் விஜய் நடிப்பிற்கு என தனி ரசிகர்கள் இருக்கிறார்கள். அண்மை காலங்களில் தொடர்ச்சியாக ஒரே மாதிரியான ஆக்‌ஷனை பிரதானமாக கொண்ட கதைகளை தேர்வு செய்து நடித்து வருகிறார். ஆனால் ரசிகர்கள்  ஒரே இமேஜில் அவரை பார்ப்பதற்கு விருப்பம் காட்டுவதில்லை.
இயக்குனர் முதல் படமான மான் கராத்தே இரண்டாவது படமான கெத்து படங்களுக்குப்பின் அவரது மூன்றாவது படமான ரெட்டை தலையில் விறுவிறுப்பான திரைக்கதையுடன் நிமிர்ந்து நிற்கிறார்.

அருண் விஜய்க்கு இந்த 2025 ஆம் ஆண்டு பிளாக்பஸ்டர் படம் என்றே சொல்லலாம்.

மொத்தத்தில் இந்த ரெட்டை தல படம் ரெட்ட பிரியாணி விருந்து.
Next Post

Recent News

error: Content is protected !!