• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us
Tamil2daynews
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
Tamil2daynews
No Result
View All Result
Home சினிமா சினிமா செய்திகள்

‘அப்பா வேணாம்ப்பா’ இயக்குநரின் புதிய படம் ‘முதற்கனல்’ ; மே மாதம் திரைக்கு வருகிறது.

by Tamil2daynews
April 16, 2026
in சினிமா செய்திகள்
0
0
SHARES
5
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

‘அப்பா வேணாம்ப்பா’ இயக்குநரின் புதிய படம் ‘முதற்கனல்’ ; மே மாதம் திரைக்கு வருகிறது.

 

ஸ்ரீகெங்கா புரொடக்ஷன்ஸ் சார்பில் ஆர்.போத்திராஜ் DFT தயாரிப்பில் உருவாகியுள்ள படம் ‘முதற்கனல்’. ‘அப்பா ..வேணாம்ப்பா’, ‘அதையும் தாண்டி புனிதமானது’ போன்ற திரைப்படங்களை இயக்கிய R.வெங்கட்டரமணன் இப்படத்தின் கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கியுள்ளார்.

புது முகங்கள் அஸ்வின், விக்னேஷ், ராஜேஷ், யோகேஷ், லட்சுமணன், ஆதி, அரிகிருஷ்ணன், ஹரி, பாலாஜி, ஆகாஷ், ஸ்ரீஜித், பிரதாப், தீபாபத்மநாபன், கருப்பசாமி,  திருவேங்கடகிருஷ்ணன், உடன் டாக்டர்.சிவா, ராமசாமி, தனுஜா, ரோகிணி, சஜன், மணிகுமார், ஷிவகுமார், ருக்மணி, இலக்கியா, அருட்பிரகாஷ், சந்திரசேகரன், மதன், கணேஷ் சுப்ரமணியம் உள்ளிட்ட பலர் இதில் நடித்துள்ளனர்.
‘அப்பா வேணாம்ப்பா’ படத்தில் மதுவினால் ஒரு குடும்பம் எந்த அளவிற்கு சீரழிகிறது என்பதை கமர்சியலான ஒரு படமாக கொடுத்த இயக்குநர் வெங்கட்டரமணன், இந்த ‘முதற்கனல்’ படத்தில் போதைப்பொருள் கலாச்சாரத்தால் இன்றைய இளைஞர்களின் வாழ்க்கை எப்படி தடம் மாறுகிறது, மற்றும் அவர்களது குடும்பம் எந்த அளவுக்கு பாதிப்புக்கு உள்ளாகிறது என்பதை மையப்படுத்தி இந்த படத்தை உருவாக்கியுள்ளார்.

படம் குறித்து இயக்குநர் வெங்கட்ட ரமணன் கூறும்போது, ”இன்று நாடெங்கிலும், ஏன் உலகெங்கிலும் போதைப் பொருள் பயன்பாடு அதிகம் புழக்கத்தில் இருக்கிறது. மதுவினால் ஏற்படும் போதை மற்றும் சீரழிவை விட இப்படிப்பட்ட சிந்தடிக் போதைப் பொருட்கள் இளைஞர்களின் வாழ்வை வெகு குறுகிய காலத்திலேயே சீரழித்து விடுகின்றன. அன்றாடம் போதைப்பொருள் வழக்குகள் குறித்து நாம் செய்திகளில் பார்க்கிறோம். அதுமட்டுமல்ல, போதை மீட்பு மறுவாழ்வு மையத்திற்கு நேரில் சென்று பார்த்தபோது தான், பள்ளி செல்லும் இளைஞர்கள் முதல் கல்லூரி மாணவர்கள், வேலைக்கு போகும் வயதில் இருப்பவர்கள் என பலரும் இப்படி போதைப்பொருள் பயன்படுத்தி அதற்கு அடிமையாகி தங்களையே தொலைத்துவிட்ட அவலத்தை கண்கூடாக பார்க்க முடிந்தது.
அதனால் இந்த விஷயத்தையே ஏன் படமாக எடுக்க கூடாது என்று தோன்றிய எண்ணத்தின் விளைவாகத் தான் இந்த ‘முதற்கனல்’ திரைப்படம் உருவாகியுள்ளது. மது அருந்த பயப்படும் சிறுவர்கள், இளைஞர்கள் கூட, இது போன்ற போதை வஸ்துக்களை, அவை மிகக்குறைந்த விலையில் கிடைக்கிறது என்பதாலும் யாரும் அறியாமல் பயன்படுத்துவது எளிது என்பதாலும் இதன் பிடியில் சுலபமாக சிக்குகின்றனர். இதன் பின்னணியில் இருக்கும் உளவியல் சிக்கல், அதனால் ஒவ்வொரு குடும்பமும் எப்படி பாதிக்கப்படுகிறது என்பதை அழுத்தமாக சொல்லி இருக்கிறோம்.

அதேசமயம் அனைத்து தரப்பினரையும் கவரும் விதமான கமர்சியல் அம்சங்கள் நிறைந்த ஒரு குடும்ப படமாக இது தயாராகியுள்ளது. படத்தில் நடித்திருக்கும் பலரும் புதுமுகங்கள் என்றாலும் இந்த கதைக்கு அவர்கள் தான் பொருத்தமாக இருந்தார்கள். படத்திலும் சிறப்பான பங்களிப்பை கொடுத்துள்ளார்கள். நானும் ஒரு வழக்கறிஞர் கதாபாத்திரத்தில் நடித்துள்ளேன்” என்று கூறியுள்ளார்…

மே மாதம் இத்திரைப்படம் திரைக்கு வருகிறது

தொழில்நுட்ப கலைஞர்கள் விவரம்

ஒளிப்பதிவு ; கந்தசாமி கோபால் DFT-

இசை ; மீராலால்

படத்தொகுப்பு ; டிஷ்யன்சாரதி,

பாடல்கள் ; கவிஞர். மருதபரணி, மோகன், ஆத்தூர் பெரியசாமி

டிசைன்ஸ் ; சதீஷ்,

தயாரிப்பு மேற்பார்வை ;D. ராஜேந்திரன்,

இணைத்தயாரிப்பு ; ஆர்.நட்ராஜ் DFT

மக்கள்தொடர்பு ; KSK செல்வகுமார்

Previous Post

‘டீகன்ஸ்ட்ரக்ட்’ நிறுவனத்தின் பிராண்ட் பார்ட்னரான அனிருத்

Next Post

கருப்பையா முருகன், பிரேம்ஜி மீண்டும் இணையும் மியூசிக்கல் ஹாரர்

Next Post

கருப்பையா முருகன், பிரேம்ஜி மீண்டும் இணையும் மியூசிக்கல் ஹாரர்

Popular News

  • சர்தார் 2 – விமர்சனம்

    0 shares
    Share 0 Tweet 0
  • இந்திய ரசிகர்களுக்கு மிகப்பிடித்த ஃபேமிலி திரில்லர் திரைப்படமான ‘த்ரிஷ்யம் தி கன்குலூஷன்’ (Drishyam The Conclusion) அக்டோபர் 2 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது!

    0 shares
    Share 0 Tweet 0
  • “இம்மார்டல்” வெற்றியை கொண்டாடிய தயாரிப்பாளர் – ஜிவி பிரகாஷுக்கு RX100 பைக் பரிசு!

    0 shares
    Share 0 Tweet 0
  • ஒரு புதிய துணிச்சலான Zee 5-ஐ அறிமுகப்படுத்துகிறது: இந்தியாவின் ஸ்ட்ரீமிங் அனுபவத்தை மறுவரையறை செய்கிறது

    0 shares
    Share 0 Tweet 0
  • குரு சோமசுந்தரம் – அனுமோல் நடிக்கும் ‘பாரிஸ் கஃபே’ செப்டம்பர் 18ஆம் தேதி வெளியாகிறது!

    0 shares
    Share 0 Tweet 0

Recent News

குரு சோமசுந்தரம் – அனுமோல் நடிக்கும் ‘பாரிஸ் கஃபே’ செப்டம்பர் 18ஆம் தேதி வெளியாகிறது!

September 11, 2026

“இம்மார்டல்” வெற்றியை கொண்டாடிய தயாரிப்பாளர் – ஜிவி பிரகாஷுக்கு RX100 பைக் பரிசு!

September 11, 2026

சர்தார் 2 – விமர்சனம்

September 11, 2026

இந்திய ரசிகர்களுக்கு மிகப்பிடித்த ஃபேமிலி திரில்லர் திரைப்படமான ‘த்ரிஷ்யம் தி கன்குலூஷன்’ (Drishyam The Conclusion) அக்டோபர் 2 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது!

September 11, 2026

ஒரு புதிய துணிச்சலான Zee 5-ஐ அறிமுகப்படுத்துகிறது: இந்தியாவின் ஸ்ட்ரீமிங் அனுபவத்தை மறுவரையறை செய்கிறது

September 10, 2026

‘என்ன விலை’ திரைப்படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா!

September 10, 2026
  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2025 Tamil2daynews.com.

error: Content is protected !!
No Result
View All Result
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்

© 2025 Tamil2daynews.com.