• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us
Tamil2daynews
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
Tamil2daynews
No Result
View All Result
Home சினிமா சினிமா செய்திகள்

மெகா பவர் ஸ்டார் ராம் சரண் – புச்சி பாபு சானா இயக்கத்தில் உருவாகும் ‘பெத்தி’ (peddi) படம் ஏப்ரல் 30 அன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது !!

by Tamil2daynews
February 7, 2026
in சினிமா செய்திகள்
0
0
SHARES
5
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

மெகா பவர் ஸ்டார் ராம் சரண் – புச்சி பாபு சானா இயக்கத்தில் உருவாகும் ‘பெத்தி’ (peddi) படம் ஏப்ரல் 30 அன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது !!

 

மெகா பவர் ஸ்டார் ராம் சரண் நடிப்பில், புச்சி பாபு சானா ,இயக்கத்தில் உருவாகும், மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள பிரம்மாண்டமான பான்-இந்தியா கிராமத்து பின்னணியில் ஆக்சன் ஸ்போர்ட்ஸ் டிராமா திரைப்படமான “பெத்தி” படத்தின் இறுதிக்கட்ட  பணிகள் பரபரப்பாக நடந்து வருகிறது. முன்னதாக மார்ச் 27 அன்று வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்த இப்படம், தற்போது ஏப்ரல் 30 என்ற முக்கியமான கோடை வெளியீட்டு தேதிக்கு மாற்றப்பட்டுள்ளது. நீண்ட விடுமுறை காலத்தை முழுமையாகப் பயன்படுத்தும் வகையில் இந்த மாற்றம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதனுடன், படக்குழு தீவிரமான புரமோசன் பணிகளுக்கும் தயாராகி வருகிறது.

வெளியீட்டு தேதி போஸ்டரில், ராம் சரண் இதுவரை காணாத முற்றிலும் புதிய, மாஸ் தோற்றத்தில் தோன்றுகிறார். நீளமாக அலங்கோலமாக இருக்கும் முடி, கனமான தாடி, மூக்கில் அணிந்த வளையம் ஆகியவை அவரது உருவத்திற்கு தனிச்சிறப்பு சேர்க்கின்றன. புகை சூழ்ந்த பரபரப்பான சூழலில், சோர்வுற்றும் கடுமையான முகபாவனையுடன் நிற்கும் மக்கள் கூட்டத்திலிருந்து அவர் முன்னேறி வருகிறார். அவரது கடும் பார்வை அந்த குழப்பத்தை துளைத்துச் செல்லும் விதத்தில் அமைந்துள்ளது. முழு காட்சியும்  இருள் மிகுந்த வண்ணத்தில் வடிவமைக்கப்பட்டு, போராட்டம், எதிர்ப்பு மற்றும் கலக்கம் நிறைந்த உணர்வுகளை ஆழமாக வெளிப்படுத்துகிறது.Image‘பெத்தி’ படத்தின் விளம்பர உள்ளடக்கங்கள் ஏற்கனவே ரசிகர்களிடையே பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளன. முதல் க்ளிம்ப்ஸ், ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்கள் மற்றும் A.R.ரஹ்மான் இசையமைத்த “சிக்கிரி சிக்கிரி” பாடல் அனைத்து தளங்களிலும் அபார வரவேற்பைப் பெற்றுள்ளது. இந்தப் பாடல் 200 மில்லியன் பார்வைகளை கடந்துள்ளதுடன், பல சாதனைகளை முறியடிக்கும் பாதையில் பயணித்து வருகிறது.

படத்தின் பிரம்மாண்டத்தை மேலும் உயர்த்தும் வகையில், நடிகை ஜான்வி கபூர் நாயகியாக நடித்துள்ளதுடன், சிவ ராஜ்குமார், ஜகபதி பாபு,  திவ்யேந்து சர்மா மற்றும் பொமன் இரானி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ராம் சரண், இதுவரை காணாத முற்றிலும் புதிய கதாபாத்திரத்தில் இந்தப் படத்தில் தோன்றுகிறார்.

வெங்கட சதீஷ் கிலாரு, தயாரிப்பில், விருத்தி சினிமாஸ் நிறுவனம் சார்பில் உருவாகும் ‘பெத்தி’ படத்திற்கு, மிகச் சிறந்த தொழில்நுட்பக் குழு இணைந்துள்ளது. ஆஸ்கர் விருது பெற்ற A.R.ரஹ்மான் இசையமைக்க, பிரபல ஒளிப்பதிவாளர் R.ரத்னவேலு காட்சிகளைப் ஒளிப்பதிவு செய்கிறார். தேசிய விருது பெற்ற நவீன் நூலி படத்தொகுப்பை கவனிக்க, அவிநாஷ் கொல்லா  தயாரிப்பு வடிவமைப்பின் மூலம் படத்தின் உலகத்தை அழகாக உருவாக்கியுள்ளார்.

‘பெத்தி’ திரைப்படம் தென்னிந்திய மொழிகள் அனைத்திலும் மற்றும் இந்தியிலும், பான் இந்திய அளவில் திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

நடிகர்கள் :
மெகா பவர் ஸ்டார் ராம் சரண், ஜான்வி கபூர், சிவ ராஜ்குமார், ஜகபதி பாபு,திவ்யேந்து சர்மா, பொமன் இரானி

தொழில்நுட்பக் குழு :
இயக்கம், திரைக்கதை: புச்சி பாபு சானா
வழங்குபவர்கள் : மைத்ரி மூவி மேக்கர்ஸ், சுகுமார் ரைட்டிங்ஸ்
தயாரிப்பு நிறுவனம்: விருத்தி சினிமாஸ்
தயாரிப்பாளர்:  வெங்கட சதீஷ் கிலாரு
இணை தயாரிப்பாளர்: இஷான் சக்சேனா
இசை: A.R. ரஹ்மான்
ஒளிப்பதிவு: R. ரத்னவேலு
கலை இயக்கம்:  அவிநாஷ் கொல்லா
படத்தொகுப்பு: நவீன் நூலி
நிர்வாக தயாரிப்பாளர்: V.Y. பிரவீன் குமார்
மார்க்கெட்டிங்: ஃபர்ஸ்ட் ஷோ
மக்கள் தொடர்பு : யுவராஜ்.

Previous Post

பத்திரிகையாளர்கள் மற்றும் ரசிகர்கள் முன்னிலையில் வெளியிடப்பட்ட லெஜெண்ட் சரவணனின் ‘லீடர்’ படத்தின் டைட்டில் & கிளிம்ப்ஸ்

Next Post

போலீஸ் ஸ்டேஷன் பின்னணியில் உருவாகும் காதல் படம்

Next Post

போலீஸ் ஸ்டேஷன் பின்னணியில் உருவாகும் காதல் படம்

Popular News

  • ஆகஸ்ட் 7 முதல் தமிழிலும் கிடைக்கும் ZEE5-இல் பிரம்மாண்ட டிஜிட்டல் பிரீமியருக்கு தயாராகும் ‘லெனின்’

    0 shares
    Share 0 Tweet 0
  • விஜய் சேதுபதி நடிக்கும் ‘ஸ்லம் டாக் : 33 டெம்பிள் ரோடு’ திரைப்படத்தில் நடிகை தபுவின் ‘கேரக்டர் கிளிம்ப்ஸ்’ வெளியீடு

    0 shares
    Share 0 Tweet 0
  • இந்த சுதந்திர தினத்தில், 26/11 பயங்கரவாத தாக்குதலின்போது தைரியமாக நின்று போராடிய பெயரிடப்படாத நாயகர்களின் சொல்லப்படாத கதையை கொண்டுவருகிறது இந்தி ZEE5-இன் பாரத் பாக்ய விதாதா

    0 shares
    Share 0 Tweet 0
  • துல்கர் சல்மானின் ‘ஐ ம் கேம்- I Am Game’ திரைப்படத்தின் முதல் பாடல் வெளியீடு: ஆகஸ்ட் 20ஆம் தேதி முதல் உலகம் முழுவதும் திரையரங்குகளில் !

    0 shares
    Share 0 Tweet 0
  • விசாகப்பட்டினத்தில் பிரம்மாண்டமாக ‘AAA சினிமாஸ்’ தொடங்கி, தனது பொழுதுபோக்கு சாம்ராஜ்யத்தை விரிவுபடுத்தும் ஐகான் ஸ்டார் அல்லு அர்ஜுன்!

    0 shares
    Share 0 Tweet 0

Recent News

‘பியார் பிரேமா கல்யாணம்’ டிரெய்லரை வெளியிட்ட Netflix – வித்தியாசமான ட்விஸ்டுடன் வரும் முழுமையான குடும்ப பொழுதுபோக்கு திரைப்படம்!

August 12, 2026

நடிகர் வைபவ்வின் ‘மாறுவேஷம்’ திரைப்படம் யூ/ஏ சான்றிதழுடன் அக்டோபர் 1 முதல் உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது!

August 12, 2026

‘பியார் பிரேமா கல்யாணம்’ டிரெய்லர் வெளியீட்டு விழா !

August 12, 2026

‘அடடா’ பாடல் மூலம் தமிழ் சினிமா நினைவுகளை ராப் இசையில் கொண்டு வரும் கில்லா கே மற்றும் பால் டப்பா

August 12, 2026

அட்லி வழங்கும், விஜய் சேதுபதி நடிக்கும் ‘பத்தா’ – அக்டோபர் 1ம் தேதி திரையரங்குகளில் வெளியீடு!

August 12, 2026

‘சேயோன்’ திரைப்படம் மிகுந்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் உருவாகி வருகிறது, அதன் இரண்டாவது கட்டப் படப்பிடிப்பு மதுரையில் இன்று அதிகாரப்பூர்வமாகத் தொடங்கியது.

August 12, 2026
  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2025 Tamil2daynews.com.

error: Content is protected !!
No Result
View All Result
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்

© 2025 Tamil2daynews.com.