ஜி.டி.நாயுடு(GDN) – விமர்சனம்

ஜி.டி.நாயுடு(GDN)  – விமர்சனம் 

 

ஜி.டி. நாயுடுவின் வாழ்க்கை வரலாற்றை அடிப்படையாகக் கொண்டு கிரிஷ்குமார் ராமகுமார் இயக்கத்தில், ஆர். மாதவன் ஜி.டி. நாயுடுவாக நடித்து உருவாகியுள்ள ‘ஜி.டி.என்’ (GDN) திரைப்படம், இந்தியாவின் எடிசன் எனப்படும் அவரது உழைப்பையும், கண்டுபிடிப்புகளையும் திரையில் மிகச்சிறப்பாகக் கொண்டுவந்துள்ளது.
தமிழ் சினிமாவில் வாழ்க்கை வரலாற்றுப் படங்கள் பல வந்திருந்தாலும், ஒரு தொழிலதிபர், கண்டுபிடிப்பாளர், சமூக சிந்தனையாளர் ஆகிய மூன்று பரிமாணங்களையும் இவ்வளவு ஆழமாகவும், அதே நேரத்தில் சினிமாவின் விறுவிறுப்பை குறைக்காமலும் சொல்லியிருப்பது இந்தப் படத்தின் மிகப்பெரிய வெற்றி.
இயக்குநர் கிருஷ்ணகுமார் இந்தப் படத்தை வெறும் பயோபிக் என்ற எல்லைக்குள் நிறுத்தவில்லை. உண்மைகளை மதித்தபடியே, அதை வலுவான திரைக்கதையாக மாற்றி, ரசிகர்களின் மனதில் பதியும் வகையில் உருவாக்கியுள்ளார். ஒரு மனிதரின் சாதனைகளை பட்டியலிடாமல், அவர் சந்தித்த போராட்டங்களையும், தியாகங்களையும், தோல்விகளையும், மீண்டும் எழுந்து நின்ற மன உறுதியையும் காட்சிகளாக வடிவமைத்திருப்பது இயக்குநரின் முதிர்ச்சியை வெளிப்படுத்துகிறது.

படம் தொடங்கும் விதமே வித்தியாசமானது. “ஜி.டி. நாயுடுவின் வாழ்க்கை ஏன் பாடப்புத்தகத்தில் இருக்க வேண்டும்?” என்ற கேள்வியை முன்வைத்து, அதற்கு விடையாக முழு வாழ்க்கைப் பயணத்தையும் திரையில் விரிப்பது மிகவும் புத்திசாலித்தனமான திரைக்கதை உத்தி. இந்த அணுகுமுறையே பார்வையாளரை ஆரம்பம் முதல் இறுதி வரை கதையுடன் இணைத்துக் கொள்கிறது.GDN Movie Review: Incredible story, inadequate storytellingகோயம்புத்தூரில் சாதாரண குடும்பத்தில் பிறந்த ஜி.டி. நாயுடு, தனது தனிப்பட்ட ஆசைகளை விட மக்களின் முன்னேற்றத்தையே முக்கியமாகக் கருதுகிறார். தொழில் தொடங்குவதும், வேலைவாய்ப்புகளை உருவாக்குவதும், தமிழர்களை உலக அரங்கில் உயர்த்த வேண்டும் என்ற கனவும் அவரது வாழ்க்கையின் மையமாக அமைகிறது. ஆனால் அவரது வளர்ச்சியை பொறுக்காத ஆங்கிலேய ஆட்சியும், சுயநல அரசியல் சக்திகளும், சில போட்டியாளர்களும் அவருக்கு தொடர்ந்து தடைகளை உருவாக்குகின்றனர். அந்த சவால்களை எதிர்கொண்டு அவர் எப்படி சாதனையின் உச்சியை அடைகிறார் என்பதையே படம் உணர்ச்சிப்பூர்வமாகச் சொல்கிறது.

குறிப்பாக, 1940-களிலேயே கோயம்புத்தூருக்கு பென்ஸ் நிறுவனத்தை கொண்டு வர ஜி.டி. நாயுடு எடுத்த முயற்சிகளும், அது தோல்வியடைந்தபோது அவர் அனுபவித்த மனவேதனையும் மிகவும் தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. இந்திய தொழில்துறையின் வரலாற்றில் நாம் இழந்த மிகப்பெரிய வாய்ப்புகளில் ஒன்றை படம் நினைவூட்டுகிறது.

ஆர். மாதவன் தனது திரைப்பயணத்தின் மிகச்சிறந்த நடிப்புகளில் ஒன்றை வழங்கியிருக்கிறார். அவர் ஜி.டி. நாயுடுவாக நடித்திருக்கிறார் என்று சொல்வதை விட, ஜி.டி. நாயுடுவாகவே வாழ்ந்திருக்கிறார் என்று கூறலாம். உடல்மொழி, குரல், பார்வை, உணர்ச்சி வெளிப்பாடு என ஒவ்வொரு தருணத்திலும் அந்த மகத்தான மனிதரை திரையில் உயிர்ப்பித்திருக்கிறார். நடிகராக மட்டுமல்லாமல், திரைக்கதை மற்றும் தயாரிப்பு பணிகளிலும் அவரது அர்ப்பணிப்பு படத்தின் தரத்தை மேலும் உயர்த்தியுள்ளது.

சத்யராஜ், ஜி.டி. நாயுடுவின் பயணத்தில் முக்கிய பங்காற்றும் கதாபாத்திரத்தில் மிகச் சிறப்பாக நடித்திருக்கிறார். அனுபவம் மிக்க நடிகரின் முதிர்ச்சியான நடிப்பு ஒவ்வொரு காட்சியிலும் வெளிப்படுகிறது. பல வருடங்களாக அவரது நடிப்பைப் பார்த்திருந்தாலும், இந்தப் படம் அவரது சிறந்த நடிப்புகளில் ஒன்றாக நினைவில் நிற்கும்.

ஜெயராம், வருமான வரித்துறை அதிகாரியாக வலுவான எதிர் கதாபாத்திரத்தை உருவாக்கியிருக்கிறார். கடமைக்கும் மனிதநேயத்திற்கும் இடையே சிக்கித் தவிக்கும் அந்த கதாபாத்திரத்தை மிகுந்த நம்பகத்தன்மையுடன் சித்தரித்துள்ளார். குறிப்பாக உச்சக்கட்ட காட்சியில் அவரது நடிப்பு நீண்ட நேரம் மனதில் நிற்கும்.

துஷாரா விஜயன், ஜி.டி. நாயுடுவின் மனைவியாக அமைதியான, உறுதியான நடிப்பை வழங்கியிருக்கிறார். கதாபாத்திரத்தின் உணர்வுகளை மிக இயல்பாக வெளிப்படுத்தி, படத்தின் உணர்ச்சிப் பிணைப்பை வலுப்படுத்துகிறார்.

கருணாகரன் வித்தியாசமான வில்லத்தனத்தை வெளிப்படுத்தி ஆச்சரியப்படுத்துகிறார். பிரியாமணி, அதிதி பாலன் உள்ளிட்ட அனைத்து நடிகர்களும் தங்கள் கதாபாத்திரங்களுக்கு முழுமையான நியாயம் செய்துள்ளனர்.
R. Madhavan's 'G.D.N.' Makes an August presence as the No. 3 Among IMDb's Most Anticipated New Indian Movies and Shows – Cinema Inbox

படத்தின் மற்றொரு முக்கிய பலம் தொழில்நுட்பம். ஒளிப்பதிவாளர் அரவிந்த், காலகட்டத்தை கண்முன் நிறுத்தும் வகையில் காட்சிகளை வடிவமைத்திருக்கிறார். ஒவ்வொரு ஃபிரேமும் அந்தக் காலத்திற்குள் பார்வையாளரை அழைத்துச் செல்கிறது. ஜி.டி. நாயுடு குடும்பத்துடன் நெருங்கிய தொடர்பு கொண்டிருந்த அனுபவம், காட்சிகளின் நம்பகத்தன்மையில் தெளிவாக பிரதிபலிக்கிறது.

கோவிந்த் வசந்த் இசை படத்தின் உணர்வுகளுக்கு உயிர் கொடுக்கிறது. பின்னணி இசை எந்தக் காட்சியையும் மிகைப்படுத்தாமல், அதன் உணர்ச்சியை உயர்த்துகிறது. பாடல்களும் கதையின் ஓட்டத்துடன் ஒன்றிணைந்து பயணிக்கின்றன.

கலை இயக்கம், ஆடை வடிவமைப்பு, படத்தொகுப்பு, ஒலிப்பதிவு உள்ளிட்ட ஒவ்வொரு தொழில்நுட்பக் குழுவினரும் தங்கள் பங்களிப்பை சிறப்பாக வழங்கியுள்ளனர். குறிப்பாக 1940-களின் காலப்பின்னணியை திரையில் நம்பகமாக மீட்டெடுத்திருப்பது படக்குழுவின் கடின உழைப்பை வெளிப்படுத்துகிறது.

மொத்தத்தில், ‘ஜி.டி. நாயுடு’ ஒரு திரைப்படம் மட்டுமல்ல; இந்தியாவின் தலைசிறந்த கண்டுபிடிப்பாளர்களில் ஒருவருக்கு செலுத்தப்பட்ட நேர்மையான அஞ்சலி. வரலாற்றை மறந்துவிடக் கூடாது என்பதையும், சாதனையாளர்களை அடுத்த தலைமுறைக்கு அறிமுகப்படுத்துவது சினிமாவின் முக்கியப் பொறுப்பு என்பதையும் இந்தப் படம் வலியுறுத்துகிறது.

இயக்குநர் கிருஷ்ணகுமார் தனது  முயற்சியிலேயே மிகப்பெரிய வெற்றியைப் பதிவு செய்திருக்கிறார். ஆர். மாதவன் தனது நடிப்பால் படத்திற்கு உயிர் கொடுத்திருக்கிறார். தொழில்நுட்பக் கலைஞர்கள் ஒவ்வொருவரும் தங்களது திறமையை முழுமையாக வெளிப்படுத்தியுள்ளனர்.

மறைக்கப்பட்ட பல உண்மைகளை திரையில் வெளிச்சம் போட்டு காட்டிய இயக்குனர் கிருஷ்ணாவிற்கும் ஜிடி நாயுடுவாக நம் கண் முன்னே தோன்றிய மாதவனுக்கும் கோடான கோடி நன்றிகள்.

தமிழர்கள் கொண்டாட வேண்டிய  படம் GDN.
Next Post

Recent News

error: Content is protected !!