• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us
Tamil2daynews
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
Tamil2daynews
No Result
View All Result
Home சினிமா சினிமா செய்திகள்

“ரஜினிகாந்தை யார் நீங்கள்” என கேள்வி கேட்ட இளைஞர் பைக் திருட்டு வழக்கில் கைது*

by Tamil2daynews
February 22, 2020
in சினிமா செய்திகள்
0
“ரஜினிகாந்தை யார் நீங்கள்” என கேள்வி கேட்ட இளைஞர் பைக் திருட்டு வழக்கில் கைது*
0
SHARES
40
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp
✍தூத்துக்குடி முத்துகிருஷ்ணாபுரம் பகுதியை சேர்ந்த பாலசுந்தர் என்பவரது மகன் ராம்குமார் (வயது 23). இவர் சம்பவத்தன்று இரவு வீட்டு முன்பு தனது மோட்டார் பைக்கை நிறுத்தி விட்டு  சென்றுள்ளார். மறுநாள் காலை பார்த்த போது நிறுத்தி வைத்திருந்த பைக் காணாமல் போனதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
✍இது குறித்து வடபாகம் போலீசில் புகார் அளித்தார், போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இதையடுத்து ராம்குமார் பழைய வண்டி வாங்குவதற்காக ஆன்லைனில் தேடியுள்ளார்.
✍திருடிய நபர்கள் வண்டியை விற்பதற்காக OLX ல் பதிவு செய்துள்ளார்கள். இதை பார்த்த வண்டியின் உரிமையாளர் ராம்குமார் விற்பனைக்கு பதிவு செய்த நபரை தொடர்பு கொண்டு வாங்குவதற்கான விபரங்களை கேட்டுள்ளார். அவர்களோ தூத்துக்குடி கால்டுவெல் காலணி பகுதிக்கு வரும்படி பதில் சொல்லியுள்ளனர். ராம்குமாரும் கால்டுவெல் காலணி பகுதிக்கு சென்று விற்பனைக்கு வைத்திருந்த வண்டியை பார்த்துள்ளார். பார்த்தவுடன் விறபனைக்காக வைத்துள்ள வண்டி தனக்குரிய வண்டி தான் என்பதை உறுதிபடுத்திக் கொண்டார்.
✍இதன் பின் வண்டியின் விலையை விற்பவரிடம் கேட்டுள்ளார். அவர்களும் வண்டி உரிமையாளரிடம் பேரம் பேசி முடிக்க முயற்சித்துள்ளார்கள்.  இதில் அவர்கள் நிர்ணயித்த தொகையில் கரராக பேசியுள்ளார். இறுதியில் ராம்குமார் சரி என ஒப்புக் கொண்டு பணம் எடுத்து வருவதாக சொல்லி விட்டு நேராக காவல்நிலையத்தில்  விபரங்களை கூறியுள்ளார். காவல்துறையினர் அவர் பின்னால் போலீஸ் உடையின்றி சாதாரண நபர் போல் உடையனிந்து ராம்குமார் நண்பர் போல்  கால்டுவெல் காலணிக்கு சென்றுள்ளனர்.   போனவுடன் வண்டியை கொண்டு வரச்சொல்லி கேட்டுக்கொண்டனர்
✍வண்டியை கொண்டு வந்ததும் போலீசார் ராம்குமாரின் வண்டிதானா என்பதை மேலும் ஒரு முறை சோதனையிட்டனர். போலீசாரும் ராம்குமார் வண்டி தான் என்பதை  உறுதிபடுத்திக் கொண்டதும் வண்டியை விற்பதற்காக கொண்டுவந்த சந்தோஷ் என்பவரை சம்பவ இடத்தில் கையும் களவுமாக பிடித்துக் கொண்டனர். கைது செய்யப்பட்ட சந்தோஷை போலீசார் காவல்நிலையம் கொண்டுவந்து விசாரணையை தொடங்கினார்கள். அந்த விசாரணையில் பண்டாரம்பட்டி கருவேலன் மகன் சந்தோஷ் (வயது.23)  என்பதும்  தெரியவந்தது. மேலும் விசாரணையில் சந்தோஷின் கூட்டாளிகளான கால்டுவெல் காலணியை சேர்ந்த துரைப்பாண்டி மகன்
மணி (வயது.23) , ஆசிரியர்காலணியை சேர்ந்த துரை என்பவரது மகன் சரவணன் (வயது.22)  ஆகிய மூன்று நபர்களும் சேர்ந்து பைக் திருட்டில் ஈடுபட்டது தெரிய வந்தது. இதன் பின் மூன்று பேர் மீதும் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.
✍மேலும் தூத்துக்குடி துப்பாக்கி சூட்டில் காயமடைந்த நபர்களை தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு பார்க்க வந்த நடிகர் ரஜினிகாந்தை பார்த்து “யார் நீங்கள்” என பாதிக்கப்பட்ட இளைஞர் ஒருவர் கேள்வி கேட்டார். இந்த கேள்வி அந்த தருணத்தில் சமூக வலைதளங்கள் , பத்திரிக்கைகள் முதல் ஆங்கில ஊடகங்கள் வரையில் மிகப் பெரிய பரபரப்பை ஏற்படுத்தியது. இது ரஜினிகாந்துக்கு கோபத்தை ஏற்படுத்தியது. அன்று அந்த பரபரப்பை ஏற்படுத்திய இளைஞர் தான் இந்த பைக் திருட்டு வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள பண்டாரம்பட்டி சந்தோஷ் என்பது குறிப்பிடத்தக்கது.
Previous Post

இயக்குனர் சீனுராமசாமியிடம்  துணை இயக்குனராக பணியாற்றிய தயானந்தன் இயக்குனராக திரையுலகில் தடம் பதிக்கிறார்.

Next Post

Introduction to #KiLiKi and 7 simple videos and Stills of Madan Karky

Next Post
Introduction to #KiLiKi and 7 simple videos and Stills of Madan Karky

Introduction to #KiLiKi and 7 simple videos and Stills of Madan Karky

Popular News

  • 418 – விமர்சனம்

    0 shares
    Share 0 Tweet 0
  • பரத் – ராஜேஷ் மாதவன் இணையும் கலகலப்பான ஃபேமிலி என்டர்டெய்னர்! பூஜையுடன் கோலாகலமாகத் தொடங்கியது !

    0 shares
    Share 0 Tweet 0
  • சிட்லிங்கியின் மருத்துவப் புரட்சியைப் பதிவு செய்யும் ஆவணப்படம் ‘தி வேலி ஆஃப் ஹெல்த்’!

    0 shares
    Share 0 Tweet 0
  • மூவிட்ரான் புரொடக்ஷன் நிறுவனத்தின் 2-வது தயாரிப்பான “குட் நியூஸ்” (GOOD NEWS) திரைப்படம் பூஜையுடன் இனிதே துவங்கியது!

    0 shares
    Share 0 Tweet 0
  • ப்ரைம் வீடியோ தனது புதிய ப்ரைம் ஒரிஜினல் திரைப்படமான “சிஸ்டம்” திரைப்படத்தின் உலகளாவிய வெளியீட்டு தேதியை மே 22 என அறிவித்துள்ளது.

    0 shares
    Share 0 Tweet 0

Recent News

“‘ஹைக்கூ’ ரசிகர்களின் மனதைத் தொடும் ஃபீல் குட் என்டர்டெயினர் திரைப்படம்”- இயக்குநர் யுவராஜ் சின்னசாமி!

October 23, 2026

நாய்ஸ் அண்டு கிரைன்ஸ் நிறுவனத்தின் முதல் தயாரிப்பான ‘கோயம்பத்தூர் மாப்பிள்ளை’ திரைப்படம் டிசம்பர் 24 அன்று உலகெங்கும் வெளியாகிறது

October 23, 2026

சட்டமும் நீதியும்-2 – விமர்சனம்

October 23, 2026

418 – விமர்சனம்

October 23, 2026

“ஒரு மனிதனின் வாழ்க்கையில் இருவேறு காலக்கட்டங்களை பேசும் திரைப்படம் ‘ஹைக்கூ’” நடிகர் ஏகன்

October 23, 2026

யஷ் ராஜ் என்டர்டெயின்மென்ட் தயாரிப்பில், கீர்த்தி சுரேஷ் – ராதிகா ஆப்தே மோதும் அதிரடி கேங்ஸ்டர் கதையான ‘அக்கா’ வெப் தொடரின் டிரெய்லரை வெளியிட்டது நெட்ஃபிளிக்ஸ்!

October 23, 2026
  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2025 Tamil2daynews.com.

error: Content is protected !!
No Result
View All Result
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்

© 2025 Tamil2daynews.com.