• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us
Tamil2daynews
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
Tamil2daynews
No Result
View All Result
Home சினிமா சினிமா செய்திகள்

‘ஹபீபி’ திரைப்படத்தில் உணர்வுப்பூர்வமான நடிப்பை கொடுத்துள்ள நடிகை மாளவிகா மனோஜ்!

by Tamil2daynews
April 4, 2026
in சினிமா செய்திகள்
0
0
SHARES
9
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

‘ஹபீபி’ திரைப்படத்தில் உணர்வுப்பூர்வமான நடிப்பை கொடுத்துள்ள நடிகை மாளவிகா மனோஜ்!

 

‘ஜோ’ மற்றும் ‘ஆண் பாவம் இல்லாதது’ ஆகிய தனது அடுத்தடுத்த படங்களின் வெற்றியால் ரசிகர்களின் மனதை கவர்ந்த நடிகை மாளவிகா மனோஜ், தமிழ் சினிமாவில் நம்பிக்கைக்குரிய வளர்ந்து வரும் நடிகைகள் பட்டியலில் இடம்பிடித்துள்ளார். தனது இயல்பான மற்றும் உணர்வுப்பூர்வமான நடிப்பிற்காக அறியப்படும் இவர், ஆழமும் யதார்த்தமும் தேவைப்படும் கதாபாத்திரங்களுக்கு விரும்பப்படும் தேர்வாக தமிழ் சினிமாவில் மாறி வருகிறார். தமிழ் மட்டுமல்லாது தெலுங்கு மற்றும் கன்னட மொழிகளிலும் படங்கள் நடித்து வருவதால் தென்னிந்திய திரையுலகிலும் விரும்பப்படும் நடிகையாக அவர் உள்ளார். தற்போது, இயக்குநர் மீரா கதிரவனின் ‘ஹபீபி’ படத்தில், அழுத்தமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இப்படத்தை பார்த்த விநியோகஸ்தர்கள், திரையரங்க உரிமையாளர்கள் மற்றும் திரையுலகினர் என பலரும் இப்படத்தைப் பாராட்டி வருகின்றனர்.

அவரது கதாபாத்திரம் குறித்து இயக்குநர் மீரா கதிரவன் பகிர்ந்து கொண்டதாவது, “மாளவிகா மனோஜ் இந்தப் படத்தில் ‘நிலோஃபர் நிஷா’ என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். படத்தில் உள்ள அனைத்து கதாபாத்திரங்களும் அவரை அன்பாக ‘நிலா பொண்ணு’ என்ற செல்லப்பெயரில் அழைப்பார்கள். இந்தக் கதாபாத்திரத்தை எழுதும் போது, 90களில் வாழ்ந்த ஒரு பெண்ணை இரண்டு காலகட்டங்களில் வேறுபட்ட தோற்றங்களுடன் நம்பகமாக வெளிப்படுத்தக்கூடிய ஒருவரை தேடினேன். அதற்காக 200–250க்கும் மேற்பட்ட நடிகர்களை ஆடிஷன் செய்தோம். இறுதியில் மாளவிகா மனோஜை பார்த்தவுடன் அவர் தான் சரியான தேர்வு என்று உணர்ந்தேன். குறிப்பாக இந்தக் கதாபாத்திரத்திற்கு கண்களிலேயே உணர்வுகளை வெளிப்படுத்தும் ஒரு பெண் தேவைப்பட்டார்” என்றார்.
மேலும் அவர் பகிர்ந்து கொண்டதாவது, “அவரை ஆடிஷன் செய்த பிறகு, அவரது குடும்பத்தின் ஊக்கமும், நடிப்பின் மீது அவருக்கு இருந்த ஆழமான ஆர்வமும் எங்களை மிகவும் கவர்ந்தது. அந்த சமயத்தில் அவர் தனது மலையாள அறிமுகப்படமான ‘பிரகாஷம் பரவத்தே’ படப்பணிகளை முடித்திருந்தார். அந்த படம் இன்னும் வெளியாகவில்லை. ’ஹபீபி’ படத்தில் அவருடைய கதாபாத்திரம் பெரும்பாலும் வசனங்களைக் காட்டிலும் முகபாவங்கள் மூலமும் உடல் மொழியாலும் நடிப்பை வெளிப்படுத்தக் கூடியது. அதை அவர் எப்படி கையாள்வார் என்று ஆரம்பத்தில் எங்களுக்கு ஆவல் இருந்தது. ஆனால், அவர் அதை மிகவும் திறமையாகக் கையாண்டு எங்களை ஆச்சரியப்படுத்தினார். படத்தை பார்த்த அனைவருமே அவரது நடிப்பை பாராட்டி வருகின்றனர். மாளவிகா நடித்த  ‘ஜோ’ மற்றும் ‘ஆண் பாவம் பொல்லாதது’ போன்ற படங்களின் வெற்றி, ‘ஹபீபி’ படத்திற்கு மேலும் வலு சேர்க்கும்” என்றார்.
இயக்குநர் மீரா கதிரவன் இயக்கியுள்ள ‘ஹபீபி’ திரைப்படம் தமிழ் முஸ்லிம்களின் வாழ்க்கை, கலாச்சாரம் மற்றும் உணர்வுப்பூர்வமான நிலப்பரப்பை நம்பகத்தன்மையுடனும் உணர்வுப்பூர்வமாகவும் சித்தரிக்கும் ஆத்மார்த்தமான திரைப்படமாகும். ‘என் அன்புக்குரியவளே’ என்ற படத்தின் தலைப்பின் பொருளுக்கு ஏற்ப இப்படம் காதல், மனித உறவுகள் மற்றும் வாழ்வியல் அனுபவங்களை பேசுகிறது.

பிளாக்பஸ்டர் பொழுதுபோக்கு படங்கள் மற்றும் நல்ல கதையம்சம் கொண்ட திரைப்படங்களைத் தயாரிப்பதில் பெயர் பெற்ற ரோமியோ பிக்சர்ஸ் ராகுல், இந்தப் படத்தை உலகெங்கும் வெளியிடுகிறார். புதுமுகங்கள் நடித்திருக்கும் இந்தப் படத்தில், இயக்குநரும் நடிகருமான கஸ்தூரி ராஜா ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். சாம் சி.எஸ். இசையமைத்துள்ள இந்தப் படம், உணர்வுப்பூர்வமான அனுபவத்தை பார்வையாளர்களுக்கு வழங்கும் என உறுதியளிக்கிறது. ’ஹபீபி’ படத்தின் டிரெய்லர், இசை வெளியீடு மற்றும் திரையரங்கு வெளியீடு குறித்த தகவல்கள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Previous Post

‘பேச்சுலர் பார்ட்டி’ திரைப்படத்தில் அனுமதியின்றி பாடல்கள் பயன்படுத்திய வழக்கில் நடிகர் ரக்‌ஷித் ஷெட்டிக்கு ரூ. 5 லட்சம் அபராதம் விதித்த டெல்லி உயர்நீதிமன்றம்!

Next Post

பைக்கர் – விமர்சனம்

Next Post

பைக்கர் - விமர்சனம்

Popular News

  • கமல்ஹாசன் – எஸ்.யு.அருண் குமார் கூட்டணிக்கு அமோக வரவேற்பு; ‘லுக் டெஸ்ட்’ காட்சிகள் வைரல்

    0 shares
    Share 0 Tweet 0
  • ‘ஹாய்’ படத்திற்கு கிடைத்த வரவேற்பு மகிழ்ச்சியில் – பத்திரிகை, ஊடக நண்பர்களைச் சந்தித்து நன்றி தெரிவித்த படக்குழு!

    0 shares
    Share 0 Tweet 0
  • மாரி செல்வராஜ் வழங்கும், அமீர் நடிப்பில் ‘மாகாளி’ – பூஜையுடன் படப்பிடிப்பு துவங்கியது!

    0 shares
    Share 0 Tweet 0
  • இம்மார்ட்டல் – விமர்சனம்

    0 shares
    Share 0 Tweet 0
  • I”am Game – விமர்சனம்

    0 shares
    Share 0 Tweet 0

Recent News

விமல் – ஸ்ரேயா கூட்டணியில் அதிரடி ரோம்-காம் ‘சண்டக்காரி’!

September 5, 2026

மோகன்லால் – விஷ்ணு மோகன் இணையும் படத்திற்கு ‘ஆபரேஷன் கங்கா’ என பெயர் சூட்டப்பட்டது

September 5, 2026

நடிகர்கள் த்ரிஷா கிருஷ்ணன், ராதிகா சரத்குமார், அபர்ணா பாலமுரளி நடிப்பில், ராஜா கிருஷ்ண மேனன் இயக்கத்தில், பனோரமா ஸ்டுடியோஸ் நிறுவனம், லோகோமோட்டிவ் குளோபல் நிறுவனத்துடன் இணைந்து தயாரிக்கும் முதல் தமிழ் படத்தின் படப்பிடிப்பு லண்டனில் தொடங்கியது!

September 5, 2026

‘மூன்வாக்’ – 2026 தீபாவளி விருந்தாக மகிழ்ச்சி, சிரிப்பை அள்ளித் தரும் குடும்ப பொழுதுபோக்கு படமாக திரைக்கு வருகிறது

September 5, 2026

பெத்லகேம் குடும்ப யூனிட் – விமர்சனம்

September 5, 2026

நிவின் பாலி நடிக்கும் ‘பெத்லகேம் குடும்ப யூனிட்: பட பத்திரிகையாளர் சந்திப்பு

September 5, 2026
  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2025 Tamil2daynews.com.

error: Content is protected !!
No Result
View All Result
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்

© 2025 Tamil2daynews.com.