• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us
Tamil2daynews
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
Tamil2daynews
No Result
View All Result
Home சினிமா சினிமா செய்திகள்

டொவினோ தாமஸ் நடிக்கும் ‘பள்ளிச்சட்டம்பி’ படத்தின் முதல் பாடல் வெளியீடு

by Tamil2daynews
February 15, 2026
in சினிமா செய்திகள்
0
0
SHARES
4
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp
டொவினோ தாமஸ் நடிக்கும் ‘பள்ளிச்சட்டம்பி’ படத்தின் முதல் பாடல் வெளியீடு

ஜேக்ஸ் பிஜாய் (Jakes Bejoy) – டொவினோ தாமஸ் காம்போ மீண்டும் ட்ரெண்டிங்கில் இடம் பிடித்திருக்கிறது. டிஜோ ஜோஸ் ஆண்டனியின் ( Dijo Jose Antony)  ‘பள்ளிச்சட்டம்பி’ படத்தின் தமிழ் பதிப்பு பாடலான ‘காட்டு செண்பகம்’ வெளியிடப்பட்டிருக்கிறது

டிஜோ ஜோஸ் ஆண்டனி இயக்கத்தில் டொவினோ தாமஸ் கதாநாயகனாக நடித்த ‘பள்ளிச்சட்டம்பி’ படத்தின் முதல் பாடலான ‘காட்டு செண்பகம்’ எனும் பாடலின் தமிழ் பதிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்தப் பாடல் இசையமைப்பாளர் ஜேக்ஸ் பிஜாய் இசையமைத்து ஏற்கனவே இசை ஆர்வலர்களிடையே கவனத்தை ஈர்த்து வருகிறது.

இப்பாடலின் தமிழ் பதிப்பின் வரிகளை மோகன் ராஜா எழுதியுள்ளார். இது பாடலுக்கு ஒரு புதிய பாடல் வரிகளையும், அழகியலையும் வழங்குகிறது. இந்த பாடலை அகில் ஜே சந்த் மற்றும் ஆவணி மல்ஹார் ( Avani Malhar) பாடியுள்ளனர். இவர்களின் ஆத்மார்த்தமான குரல்கள்.. இசையமைப்பின் உணர்ச்சி ஆழத்தையும், வசீகரத்தையும் ஒன்றிணைக்கின்றன.

இந்த படத்தில் தென்னிந்திய திரைப்படத் துறையை சார்ந்த பல முக்கிய நடிகர்களும் இடம் பெற்றுள்ளனர். மலையாள பதிப்பிற்கு கிடைத்த வலுவான வரவேற்பை தொடர்ந்து தமிழ் பதிப்பும் பார்வையாளர்களிடையே பரவலாக எதிரொலிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பார்வையை ஈர்க்கும் பாடல் வரிசையில் டொவினோ தாமசுடன் முன்னணி நாயகியான கயாடு லோஹரும் இடம் பிடித்துள்ளார். இது பாடலின் காதல் மற்றும் உணர்வுபூர்வமான ஈர்ப்பினை அதிகரிக்கிறது.

தென்னிந்திய சினிமாவில் மிகவும் விரும்பப்படும் இசையமைப்பாளர்களில் ஒருவராக ஜேக்ஸ் பிஜாய் தற்போது திகழ்கிறார்.

சமீபத்தில் பாலிவுட் சூப்பர் ஸ்டார் ரன்பீர் கபூர் ரசிகர்களுடனான உரையாடலின் போது, ஜேக்ஸ் பிஜாயின் ‘லோகா’ படத்திற்கான இசையை பாராட்டினார். பள்ளிச்சட்டம்பி படத்தின் மூலம் டொவினோ தாமசுடன் தனது வெற்றிகரமான பங்களிப்பை தொடர்கிறார்.  இந்தப் படம் இயக்குநர் டிஜோ ஜோஸ் ஆண்டனி மற்றும் ஜேக்ஸ் பிஜாய் ஆகியோர் இணைந்து பணியாற்றும் நான்காவது படமாகும். அவர்கள் இதற்கு முன் ‘குயின்’, ‘ஜன கன மன’ போன்ற படங்களின் சார்ட் பஸ்டர் ஆல்பங்களை வழங்கிய கூட்டணியாகும்.

வெற்றிகரமான திரைக்கதை எழுத்தாளர் எஸ். சுரேஷ் பாபு எழுதி, ஒளிப்பதிவாளர் டிஜோ டோமி ஒளிப்பதிவு செய்த ‘பள்ளிச்சட்டம்பி எனும் திரைப்படம்- வேர்ல்ட் வைட் பிலிம்ஸ் (Worldwide Films) சார்பில் தயாரிப்பாளர்கள்  நௌஃபல் மற்றும் பிரிஜீஷ் ஆகியோர் இணைந்து தயாரித்துள்ள பீரியாடிக் திரைப்படமாகும்.சானுக்யா – சைதன்யா சரண்  தலைமையிலான சி கியூப் ப்ரோஸ் என்டர்டைன்மென்ட் நிறுவனம் (C Qube Bros Entertainment) நிறுவனத்துடன் இணைந்து உருவாகி இருக்கும் இந்த திரைப்படம் ஏப்ரல் ஒன்பதாம் தேதி முதல் உலக அளவில் ஐந்து மொழிகளில் திரையரங்குகளில் வெளியிட தயாராகி வருகிறது.

Previous Post

பிக்சல் ஸ்டுடியோஸ் தயாரிப்பில் நடிகர் நிகில் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகியுள்ள ‘சுயம்பு’ படத்தின் டீசர் வெளியான குறுகிய காலத்திலேயே 12 மில்லியனுக்கும் அதிகமான பார்வைகள் கடந்து சாதனை படைத்துள்ளது!

Next Post

கன்னட திரையுலகின் முன்னணி தயாரிப்பு நிறுவனமான ஸ்ரீ புரந்தனா ஃபிலிம் புரொடக்ஷன்ஸ் தமிழ் திரையுலகில் தனது முதல் படத்தை தயாரிக்கிறது!

Next Post

கன்னட திரையுலகின் முன்னணி தயாரிப்பு நிறுவனமான ஸ்ரீ புரந்தனா ஃபிலிம் புரொடக்ஷன்ஸ் தமிழ் திரையுலகில் தனது முதல் படத்தை தயாரிக்கிறது!

Popular News

  • ‘கங்கணம்’ பட பர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்ட தயாரிப்பாளர் கலைப்புலி தாணு

    0 shares
    Share 0 Tweet 0
  • நடிகை சிம்ரனின் நெகிழ்ச்சியான மனிதநேய செயல் – மாற்றுத்திறனாளி சிறுமியின் கனவை நனவாக்கிய மறக்க முடியாத தருணம்!

    0 shares
    Share 0 Tweet 0
  • துல்கர் சல்மான் – பூஜா ஹெக்டே காம்போவின் ‘ஸ்ரீ ஸ்ரீ’ அசத்தலான ஃபர்ஸ்ட் லுக் !!

    0 shares
    Share 0 Tweet 0
  • ‘மக்கள் செல்வன்’ விஜய் சேதுபதி – ஆர்யா இணைந்து வெளியிட்ட நடிகை ப்ரியா பவானி சங்கரின் ‘ஹாட் ஸ்பாட் 2 மச்’ படத்தின் முன்னோட்டம்

    0 shares
    Share 0 Tweet 0
  • ‘மூன்வாக்’ மூலம் நடிகராக அறிமுகமாகும் ஏ.ஆர். ரஹ்மான்!

    0 shares
    Share 0 Tweet 0

Recent News

‘ஸ்ட்ரீட் ஃபைட்டர்’ திரைப்பட டிரெய்லர்: நோவா சென்டினியோ, ஜேசன் மோமோவா மற்றும் வித்யுத் ஜமால் இணையும் அதிரடி ஆக்‌ஷன்!

July 31, 2026

நடிகை சிம்ரனின் நெகிழ்ச்சியான மனிதநேய செயல் – மாற்றுத்திறனாளி சிறுமியின் கனவை நனவாக்கிய மறக்க முடியாத தருணம்!

July 31, 2026

ஏழு மாநிலங்களை சேர்ந்த 1000 ரசிகர்களுடன் ஆறு மணி நேரத்திற்கும் மேலாக நேரம் செலவிட்டு மகிழ்ந்த நடிகர் அல்லு அர்ஜுன்!

July 31, 2026

மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள ‘மொத ராத்திரி’ திரைப்படம் ஆகஸ்ட் 21ஆம் தேதி உலகம் முழுவதும் பிரம்மாண்டமாக வெளியாகிறது!

July 31, 2026
நமித் மல்ஹோத்ராவின் ‘ராமாயணம்’ திரைப்படத்தின் அதிகாரப்பூர்வ டிரெய்லர் ஐந்து இந்திய மொழிகளில் உலகளவில் வெளியீடு!

நமித் மல்ஹோத்ராவின் ‘ராமாயணம்’ திரைப்படத்தின் அதிகாரப்பூர்வ டிரெய்லர் ஐந்து இந்திய மொழிகளில் உலகளவில் வெளியீடு!

July 31, 2026

பிரைம் வீடியோ, ‘வதந்தி சீசன் 2 – தி மிஸ்டரி ஆஃப் மணி’ சீரிஸிலிருந்து துள்ளலான புதிய ‘தெய்வா’ பாடலை வெளியிட்டது !

July 31, 2026
  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2025 Tamil2daynews.com.

error: Content is protected !!
No Result
View All Result
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்

© 2025 Tamil2daynews.com.