• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us
Tamil2daynews
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
Tamil2daynews
No Result
View All Result
Home சினிமா சினிமா செய்திகள்

டொராண்டோ தமிழ் திரைப்பட விழாவில் இரண்டு விருதுகளை அள்ளிய ‘ஷார்ட் கட்’..!

by Tamil2daynews
September 21, 2021
in சினிமா செய்திகள்
0
டொராண்டோ தமிழ் திரைப்பட விழாவில் இரண்டு விருதுகளை அள்ளிய ‘ஷார்ட் கட்’..!
0
SHARES
31
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp
சர்வதேச புகழ்பெற்ற டொராண்டோ தமிழ் திரைப்பட விழாவில் சிறப்பு நடுவர் பிரிவில் சமூக பிரச்சினைகளை பிரதிபலிக்கும் சிறந்த திரைப்படத்திற்கான விருதை மணி தாமோதரன் இயக்கியுள்ள ‘ஷார்ட் கட்’ பெற்றுள்ளது.
மேலும், இந்த படத்தின் நாயகனான ஸ்ரீதர், டொராண்டோ தமிழ் திரைப்பட விழாவில் சிறப்பு நடுவர் பிரிவில் சிறந்த நடிகருக்கான (அறிமுகம்) விருதை பெற்றுள்ளார். மேலும் இப்படத்தில் உபாசனா, எம்.எஸ். பாஸ்கர், நமோ நாராயணன் மற்றும் ‘அறம்’ ராம் ஆகியோர் நடித்துள்ளனர்.
விருது குறித்து மகிழ்ச்சி தெரிவித்துள்ள ஸ்ரீதர், “எனது முதல் படத்திலேயே இந்த கவுரவமிக்க விருது கிடைத்திருப்பது எனக்கு ஊக்கத்தையும் உத்வேகத்தையும் அளிக்கிறது. இந்த விருதுக்கு என்னை தேர்ந்தெடுத்த டொராண்டோ தமிழ் திரைப்பட விழாவின் நடுவர் குழுவினருக்கு எனது மனமார்ந்த நன்றி,” என்று கூறினார்.
படத்தின் இயக்குநர் மணி தாமோதரன் கூறுகையில், “பணத்திற்காக வாக்குகளை விற்பது என்பது பணம் வாங்கிக் கொண்டு கழிப்பிடத்தை வாடகைக்கு விடுவதை போன்றதே. இதன் காரணமாகவே அரசியலும், நாடும் நாற்றமடைகிறது. இது தான் ஷார்ட் கட்டின் மையக்கரு. இதை ஜனரஞ்சகமான முறையில், மக்களுக்கு புரியும் வண்னம், அதே சமயம் அவர்கள் ரசிக்கும் விதத்தில் கூறியிருக்கிறோம்,” என்றார்.
“கையில் சுத்தமாக பணமே இல்லாத நான்கு பேர் திடீர் ‘ஞானோதயம்’ பெற்று அடுத்தவர்களை ஏமாற்றி ஒரே நாளில் எவ்வாறு கோடீஸ்வரர்கள் ஆகிறார்கள் என்பதை லாஜிக்குடன் சொல்லி இருக்கிறோம். தமிழ் சினிமாவில் முதல் முறையாக ‘ரெட் ஜெமினி’ காமிராவை பயன்படுத்தி படம்பிடித்துள்ளோம்,” என்று அவர் மேலும் தெரிவித்தார்.
மணி & மணி கிரியேஷன் தயாரித்துள்ள ஷார்ட் கட், அரசியல் சார்ந்த சமூக திரைப்படமாகும். படத்தை எழுதி இயக்கியுள்ள மணி தாமோதரன் பாடல்களையும் எழுதியுள்ளார்.
கே எம் ரயான் இசையமைத்துள்ளார். படத்தின் ஒளிப்பதிவை விஜய் கிருஷ்ணா மற்றும் மகேஷ் ஸ்ரீதர் கையாண்டுள்ளனர். படத்தொகுப்புக்கு விது ஜீவா பொறுப்பேற்றுள்ளார். எம் சிவராமன் தயாரிப்பில் உருவாகியுள்ள ‘ஷார்ட் கட்’ மக்களுக்கு அரசியல் விழிப்புணர்வை ஏற்படுத்தும் வெற்றிப்படமாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Previous Post

Hon. Minister Thangam Thenarasu and gifted books written by his great grandfather

Next Post

கீர்த்தி ஷெட்டி பிறந்த நாளுக்கு வாழ்த்தியது RAPO19 படக்குழு !

Next Post
கீர்த்தி ஷெட்டி பிறந்த நாளுக்கு வாழ்த்தியது RAPO19 படக்குழு !

கீர்த்தி ஷெட்டி பிறந்த நாளுக்கு வாழ்த்தியது RAPO19 படக்குழு !

Popular News

  • வரலாற்றில் முதல் முறையாக இசைஞானி இளையராஜாவின் இசையில் உருவான இலங்கைத் தமிழ்த் திரைப்படம்

    0 shares
    Share 0 Tweet 0
  • ‘வேட்டுவம்’ பா.இரஞ்சித்தின் பிரம்மாண்ட அபோகலிப்டிக் ஆக்ஷன் திரைப்படம்.

    0 shares
    Share 0 Tweet 0
  • நவம்பர் 20-ம் தேதி பிரமாண்டமாக வெளியாகும் துல்கர் சல்மானின் ‘AOT’

    0 shares
    Share 0 Tweet 0
  • ரவி மோகன் ஸ்டூடியோஸ் தயாரிப்பில் “An Ordinary Man” திரைப்படம் பூஜையுடன் தொடக்கம் – இயக்குநராக தன் புதிய பயணத்தை தொடங்கும் ரவி மோகன் ; நகைச்சுவை நாயகனாக யோகி பாபு!

    0 shares
    Share 0 Tweet 0
  • விநாயகர் சதூர்த்தி தினத்தில், விகாஷ் நடித்த “துச்சாதனன்” படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு!

    0 shares
    Share 0 Tweet 0

Recent News

நல்லபடம் -விமர்சனம்

September 21, 2026

‘சிக்மா’ திரைப்படத்தின் டிரெய்லர் மற்றும் இசை வெளியீட்டு விழா நிகழ்வு!

September 21, 2026

இரா.சரவணன் இயக்கத்தில், நிவாஸ் கே. பிரசன்னா இசையில், அழுத்தமான படைப்பாக அதிர வைக்க வருகிறது ‘நந்தன் 2’.

September 21, 2026

அதிரடி ஆக்ஷனில் மிரளவைக்கும் ராஷ்மிகா: மைசா’ திரைப்படத்தின் டீசர் வெளியீடு!

September 21, 2026

#Love’ – அக்டோபர் 2 முதல் நெட்ஃப்ளிக்ஸில் மட்டும்

September 20, 2026

பிரம்மாண்டமாக நடைபெற்ற ‘பத்தா’ இசை வெளியீட்டு விழா!

September 20, 2026
  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2025 Tamil2daynews.com.

error: Content is protected !!
No Result
View All Result
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்

© 2025 Tamil2daynews.com.