

‘‘நானே எதிர்பார்க்கலே. அவர்கிட்ட பேசி ரொம்ப நாளாச்சு. ‘சார், ரஜினி சார் பேசுறார்’னு உதவியாளர் அலறிக்கிட்டே வந்து போனைக் கொடுத்தார். அமைதியா அவர் குரல். ‘மாநாடு பார்த்தேன் சிம்பு. நல்ல ஸ்பீடு… உங்க கரிஷ்மா பின்னி எடுக்குது… பயங்கரமா மாறிட்டீங்க. உங்க அனுபவமும்கூட சேர்ந்து பேசுது. அப்படியே புடிச்சுக்கோங்க. விட்றாதீங்க. ரொம்ப சந்தோஷமா இருக்கு… செம… செம… உங்க மொத்த நடிப்பும் அமர்க்களமா இருந்துச்சு. கீப் இட் அப்’னு சொன்னார். அந்தக் குரல், அதிலிருந்த உண்மை, என்மேல் வச்சிருக்கிற கனிவு எல்லாம் அதுல தெரிஞ்சுது.”
இதெல்லாம் பாத்துட்டு தான் அவர்கிட்ட இருந்த சுறுசுறுப்பும் ஒரு சின்சியாரிட்டி யும் தொழில் பக்தியும் நான் கத்துக்கிட்டேன.