• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us
Advertisement
Tamil2daynews
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
Tamil2daynews
No Result
View All Result
Home சினிமா சினிமா செய்திகள்

100 நிமிட கண்கவர் கிராபிக்ஸ் காட்சிகளுடன் ஜெய் நடிக்கும் ‘பிரேக்கிங் நியூஸ்’

by Tamil2daynews
November 20, 2019
in சினிமா செய்திகள்
0
100 நிமிட கண்கவர் கிராபிக்ஸ் காட்சிகளுடன் ஜெய் நடிக்கும் ‘பிரேக்கிங் நியூஸ்’
0
SHARES
12
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

ஜெய் நடிக்கும் ‘பிரேக்கிங் நியூஸ்’ படம் குறித்து அதிகாரபூர்வ அறிவிப்பு வெளிவந்ததிலிருந்தே, படத்தலைப்பைப் போலவே பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. இதற்குக் காரணம் சூப்பர் ஹீரோவைப் பற்றிய படம் என்பது மட்டுமல்ல, பெரும் பொருட் செலவில் பிரம்மாண்டமான முறையில் படம் தயாராவதும்தான். ஈடு இணையற்ற வகையில் காட்சியமைப்புகள் அமைய வேண்டும் என்பதற்காக, ஒட்டு மொத்த படக்குழுவும் மிகக் கடுமையாக உழைத்திருக்கிறார்கள். இதன் பலன்தான் சர்வதேச தரத்தில் அமைந்திருக்கும், நூறு நிமிட கண்கவர் கிராபிக்ஸ் காட்சிகள்.

எந்தவொரு கடினமான விஷயத்தையும் சாத்தியமாக்கும் தயாரிப்பாளர் திருக்கடல் உதயம், விஷுவல் விருந்தாகவே பிரேக்கிங் நியுஸ் படத்தை உருவாக்கியிருக்கிறார். வெங்கட் பிரபு-சரண் நடித்த ஞாபகம் வருதே, விஜய் வசந்த் நடித்த ஜிகினா ஆகிய படங்களைத் தயாரித்தவர் திருக்கடல் உதயம். விஷுவல் எபக்ட்ஸ் மேற்பார்வையாளராக ஏராளமான அனுபவம் பெற்ற ஆன்ட்ரூ பாண்டியன் இப்படத்தை இயக்கியிருக்கிறார். இயக்கம் மட்டுமின்றி கதை, திரைக்கதை மற்றும் வசனம் ஆகிய பொறுப்புகளையும் இவரே ஏற்றிருக்கிறார்.

முக்கியமாக குறிப்பிடப்பட வேண்டிய செய்தி என்னவென்றால், ‘பிரேக்கிங் நியூஸ்’ வழக்கமான கிராபிக்ஸ் காட்சிகள் கொண்ட படமல்ல. நேரடியாகச் சென்று நிஜமான தளங்களில் படப்பிடிப்பை நடத்தி, அவற்றுடன் பிரம்மாண்டமான அரங்குகளையும் அமைத்து படப்பிடிப்பு நடத்தி உருவாக்கப்பட்ட இதுவரை பார்த்திராத விஷுவல் விருந்தளிக்கும் படம்.

கதாநாயகியாக பானு நடிக்க, ஸ்டைலான அதிரடி வேடத்தில் தேவ் ஹில் மற்றும் ராகுல் தேவ் நடித்திருக்கின்றனர். ஜெயப்பிரிகாஷ், கரு.பழனியப்பன், இந்திரஜா, மானஸி, மோகன்ராம், பி.எல்.தேனப்பன், மற்றும் பலர் முக்கிய வேடங்களில் நடித்திருக்கின்றனர். பாலிவுட்டில் வெகுவாக பாராட்டப்படும் ஜானி லால் ஒளிப்பதிவு செய்ய, விஷால் பீட்டர் இசையமைக்கிறார். ஆன்டனி படத்தொகுப்பை கவனிக்க, ஸ்டன்னர் சாம் சண்டைக் காட்சிகளை அமைக்கிறார். ராதிகா நடனக் காட்சிகளை அமைக்க, கலை இயக்குநராகப் பணியற்றுகிறார் என்.எம்.மகேஷ். விஷுவல் எபக்ட்ஸ் தொழில் நுட்பக் குழுவுக்கு மேற்பார்வையாளராகப் பொறுப்பேற்றிருக்கிறார் தினேஷ் குமார்.

Tags: breaking newsJaiTamil Movie
Previous Post

தமிழக அமைச்சர் கடம்பூர் ராஜூ அகில இந்திய ஜெய்வந்த் நற்பணி இயக்கத்தின் நிறுவனத்தலைவர் ஜெய்வந்த்  படங்கொண்ட  தனிப்பயனாக்க தபால்தலைகளை வெளியிட்டார்

Next Post

அருண் விஜய் பிறந்த நாளை முன்னிட்டு மணி ரத்னம் வெளியிட்ட ‘சினம்’ படத்தின் பர்ஸ்ட் லுக்

Next Post
அருண் விஜய் பிறந்த நாளை முன்னிட்டு மணி ரத்னம் வெளியிட்ட ‘சினம்’ படத்தின் பர்ஸ்ட் லுக்

அருண் விஜய் பிறந்த நாளை முன்னிட்டு மணி ரத்னம் வெளியிட்ட 'சினம்' படத்தின் பர்ஸ்ட் லுக்

Popular News

  • மீண்டும் இணைந்த “பிளாக்” வெற்றிப்படக்கூட்டணி, “ஜீவா 46” கோலாகலத் துவக்கம்!!

    0 shares
    Share 0 Tweet 0
  • திங்க் ஸ்டுடியோஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் நடிக்கும் கவின்- பிரியங்கா மோகன் ஜோடி

    0 shares
    Share 0 Tweet 0
  • ‘ஜென்ம நட்சத்திரம்’ வெளியீட்டுக்கு முன்பே ஹிட்! ஊடக விமர்சனங்களும் முன்னோட்டக் காட்சிகளும் வரவேற்பை பெற்றுள்ளன!

    0 shares
    Share 0 Tweet 0
  • பிரபல இயக்குநர் லோகேஷ் கனகராஜ் வழங்க , Passion ஸ்டூடியோஸ், ஜி ஸ்க்வாட், தி ரூட் ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கும் யூட்யூப் சென்சேஷனல் ஐகான்கள் பாரத் & நிரஞ்சனின் “Mr. பாரத்” படப்பிடிப்பு வெற்றிகரமாக முடிவடைந்துள்ளது!

    0 shares
    Share 0 Tweet 0
  • *மாதவன், ஷ்ரத்தா ஸ்ரீநாத் நடிப்பில், அமேசான் தயாரிப்பில் உருவாகியிருக்கும்  மாறா ட்ரெய்லர்,

    0 shares
    Share 0 Tweet 0

Recent News

சட்டமும் நீதியும் – விமர்சனம்

July 19, 2025
திங்க் ஸ்டுடியோஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் நடிக்கும் கவின்- பிரியங்கா மோகன் ஜோடி

திங்க் ஸ்டுடியோஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் நடிக்கும் கவின்- பிரியங்கா மோகன் ஜோடி

July 19, 2025

கெவி – விமர்சனம் ரேட்டிங் – 4 / 5

July 19, 2025

ஜென்ம நட்சத்திரம் – விமர்சனம் ரேட்டிங் – 3.5 / 5

July 19, 2025

நடிகர் உன்னி முகுந்தனின் UMF மற்றும் ஐன்ஸ்டீன் மீடியாவுடன் இணைந்து லெஜெண்ட்ரி இயக்குநர் ஜோஷி இயக்கும் அடுத்த பட அறிவிப்பு அவரது பிறந்தநாளன்று வெளியாகியுள்ளது!

July 19, 2025

திரையிலும், நிஜ வாழ்க்கையிலும் முத்திரை பதித்துவரும் நடிகை பவ்யா த்ரிகா

July 19, 2025
  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2025 Tamil2daynews.com.

error: Content is protected !!
No Result
View All Result
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்

© 2025 Tamil2daynews.com.