• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us
Tamil2daynews
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
Tamil2daynews
No Result
View All Result
Home சினிமா சினிமா செய்திகள்

சன்னி லியோன் நடிக்கும்,  வரலாற்று பின்னணியில் உருவாகும்  ஹாரர் காமெடி  திரைப்படம்

by Tamil2daynews
October 26, 2021
in சினிமா செய்திகள்
0
சன்னி லியோன் நடிக்கும்,  வரலாற்று பின்னணியில் உருவாகும்  ஹாரர் காமெடி  திரைப்படம்
0
SHARES
9
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp
VAU MEDIA ENTERTAINMENT மற்றும் WHITE HORSE STUDIOS  சார்பில்  D.வீரா சக்தி & K. சசிகுமார் வழங்கும், சன்னி லியோன் நடிக்கும்,  வரலாற்று பின்னணியில் உருவாகும்  ஹாரர் காமெடி  திரைப்படம்  “ஓ மை கோஸ்ட்” (OMG), படத்தின் இரண்டாம் கட்டப்படப்பிடிப்பு,  மும்பையில் இனிதே நிறைவு பெற்றது !


தமிழில் நடிகை சன்னி லியோன் நடிப்பில்,  வரலாற்று பின்னணியில் உருவாகும்  ஹாரர் காமெடி  திரைப்படம்  “ஓ மை கோஸ்ட்” (OMG) அறிவிக்கப்பட்டதிலிருந்தே படத்தின் மீது, பெரும் எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. மிக சமீபத்தில் தான் இப்படத்தின் முதல் கட்டபடப்பிடிப்பு நிறைவு பெற்றது. அதனை தொடர்ந்து இரண்டாம் கட்ட படப்பிடிப்பில் நடிகை சன்னி லியோன் இணைந்ததில், படக்குழு மிகப்பெரும் உற்சாகத்தில் இருந்தது. இந்நிலையில் மிகக்குறுகிய காலத்தில் படக்குழுவினரின் அயராத உழைப்பில், இரண்டாம் கட்டப்படப்பிடிப்பு மும்பையில் இனிதே நிறைவு பெற்றுள்ளது. கோவிட் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் அனைத்தும், முறையாக கடைப்பிடிக்கப்பட்டு நடத்தப்பட்ட இப்படப்பிடிப்பில், நடிகை சன்னி லியோன் நடித்த முக்கியமான காட்சிகள் படமாக்கப்பட்டன.

இயக்குநர் யுவன் கூறியதாவது..
OMG என்பது “ஓ மை கோஸ்ட்” என்பதன் சுருக்கமே, இப்படம் முழுக்க, முழுக்க ஒரு கமர்ஷியல், பொழுதுபோக்கு சித்திரமாக இருக்கும். இப்படம் வரலாற்று பின்னணி கதைகளத்தை கொண்டது. முதல் முறையாக வரலாற்று பின்னணியில் ஹாரர் காமெடியை செய்துள்ளோம். சன்னி லியோன் பாத்திரம்  படத்தின் மிக முக்கியமான முதன்மை பாத்திரமாக,  ரசிகர்களை கவரக்கூடியதாக இருக்கும் என்றார்.

“ஓ மை கோஸ்ட்”   (OMG) திரைப்படத்தினை  VAU MEDIA ENTERTAINMENT சார்பில் தயாரிப்பாளர் D.வீரா சக்தி மற்றும் WHITE HORSE STUDIOS சார்பில் K. சசிகுமார் இணைந்து தயாரிக்கின்றனர். நடிகை சன்னி லியோன் முதன்மை பாத்திரத்தில் நடிக்கும் இப்படத்தில் சதீஷ் மற்றும் தர்ஷா குப்தா முக்கிய பாத்திரங்களில் நடிக்க, யோகி பாபு, மொட்டை ராஜேந்திரன், ரவி மரியா, ரமேஷ் திலக், அர்ஜுனன், தங்கதுரை ஆகியோருடன் மற்றும் பல முன்னணி நடிகர்கள் இணைந்து நடிக்கின்றனர். ஜாவித் ரியாஸ் இசையமைக்க, தீபக் D. மேனன் ஒளிப்பதிவு செய்துள்ளார்.

Previous Post

Eternals – புதிய வீடியோவில்,  இந்திய திருமண காட்சிகள்,  ஏஞ்சலினா ஜோலி, ரிச்சர்ட் மேடன் மற்றும் பலர் நடிப்பில்,  இணையத்தில் வைரலாகி வருகிறது !

Next Post

சக்தி சௌந்தர் ராஜன் இயக்கத்தில்  ஆர்யா நடிப்பில் உருவாகும் பெயரிடப்படாத திரைப்படம்  ஆர்யா 33

Next Post
சக்தி சௌந்தர் ராஜன் இயக்கத்தில்  ஆர்யா நடிப்பில் உருவாகும் பெயரிடப்படாத திரைப்படம்  ஆர்யா 33

சக்தி சௌந்தர் ராஜன் இயக்கத்தில்  ஆர்யா நடிப்பில் உருவாகும் பெயரிடப்படாத திரைப்படம்  ஆர்யா 33

Popular News

  • கார்த்தி – இயக்குநர் மோகன் ராஜா கூட்டணியில் புதிய திரைப்படம்

    கார்த்தி – இயக்குநர் மோகன் ராஜா கூட்டணியில் புதிய திரைப்படம்

    0 shares
    Share 0 Tweet 0
  • ஆகஸ்ட் 28-ல் திரைக்கு வரும் ‘ஒன்ஸ் மோர்’ – அதிகாரப்பூர்வ ரிலீஸ் தேதி அறிவிப்பு!

    0 shares
    Share 0 Tweet 0
  • ‘ஜி.டி.என்.’ திரைப்படத்தின் ப்ரீ ரிலீஸ் நிகழ்வு!

    0 shares
    Share 0 Tweet 0
  • ‘ஷம்பாலா’ வெற்றிக் கூட்டணியின் அடுத்த பிரம்மாண்ட படைப்பு… சந்தீப் கிஷனின் சோஷியோ ஃபேண்டஸி திரைப்படம் ‘கரிகாலா’ – மிரளவைக்கும் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு!

    0 shares
    Share 0 Tweet 0
  • பிர்லா ஸ்டுடியோஸ் மற்றும் நீலம் ஸ்டுடியோஸ் இணைந்து வழங்கும் அடுத்த திரைப்படம் “மக்கள் காவலன்”

    0 shares
    Share 0 Tweet 0

Recent News

பிர்லா ஸ்டுடியோஸ் மற்றும் நீலம் ஸ்டுடியோஸ் இணைந்து வழங்கும் அடுத்த திரைப்படம் “மக்கள் காவலன்”

August 6, 2026

‘ஷம்பாலா’ வெற்றிக் கூட்டணியின் அடுத்த பிரம்மாண்ட படைப்பு… சந்தீப் கிஷனின் சோஷியோ ஃபேண்டஸி திரைப்படம் ‘கரிகாலா’ – மிரளவைக்கும் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு!

August 6, 2026

‘ஜி.டி.என்.’ திரைப்படத்தின் ப்ரீ ரிலீஸ் நிகழ்வு!

August 6, 2026

ஆகஸ்ட் 28-ல் திரைக்கு வரும் ‘ஒன்ஸ் மோர்’ – அதிகாரப்பூர்வ ரிலீஸ் தேதி அறிவிப்பு!

August 6, 2026
கார்த்தி – இயக்குநர் மோகன் ராஜா கூட்டணியில் புதிய திரைப்படம்

கார்த்தி – இயக்குநர் மோகன் ராஜா கூட்டணியில் புதிய திரைப்படம்

August 4, 2026

சூர்யாவின் ‘விஸ்வநாத் & சன்ஸ் ‘ படத்தின் இசை வெளியீட்டு விழா!

August 4, 2026
  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2025 Tamil2daynews.com.

error: Content is protected !!
No Result
View All Result
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்

© 2025 Tamil2daynews.com.