• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us
Tamil2daynews
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
Tamil2daynews
No Result
View All Result
Home சினிமா சினிமா செய்திகள்

VAU MEDIA ENTERTAINMENT மற்றும் WHITE HORSE STUDIOS தயாரிப்பில் இயக்குநர் யுவன் இயக்கும், வரலாற்று பின்னணியில் உருவாகும் ஹாரர் காமெடி திரைப்படம் !

by Tamil2daynews
April 20, 2021
in சினிமா செய்திகள்
0
VAU MEDIA ENTERTAINMENT மற்றும் WHITE HORSE STUDIOS  தயாரிப்பில் இயக்குநர் யுவன் இயக்கும், வரலாற்று பின்னணியில் உருவாகும்  ஹாரர் காமெடி  திரைப்படம் !
0
SHARES
24
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp
ஹாரர் காமெடி ,உலகின் வேறெந்த பிரதேசத்தை விடவும் தமிழகத்தில் ரசிகர்களால் மிக விரும்பப்படும் ஒரு ஜானராக இருந்து வருகிறது. மிகச்சரியான கலவையில்  உருவாக்கப்படும் ஹாரர் காமெடி படங்கள் தமிழகத்தில் பம்பர் ஹிட்டடித்திருக்கின்றன. அந்த வகையில் புதுமையான முறையில், வரலாற்று பின்னணியில் ஒரு ஹாரர் காமெடி படத்தை இயக்குகிறார்  “சிந்தனை செய்” படம் மூலம் கவனம் ஈர்த்த இயக்குநர் யுவன். சன்னி லியோன் முதன்மை பாத்திரத்தில் நடிக்கும்  இப்படத்தினை  VAU MEDIA ENTERTAINMENT சார்பில் தயாரிப்பாளர் D.V.சக்தி மற்றும் WHITE HORSE STUDIOS சார்பில் K. சசிகுமார் இணைந்து தயாரிக்கின்றனர்.

இயக்குநர் யுவன் படம் குறித்து கூறியதாவது…

எனது இயக்கத்தில் “சிந்தனை செய்” படம் விமர்சகர்களிடமும் ரசிகர்களிடமும் பெரும் பாராட்டுக்களைப் பெற்றது. பின்னர் தெலுங்கில் கதர்னாக், ரணம் மற்றும் பல படங்களுக்கு திரைக்கதை ஆசிரியராக பணியாற்றினேன். தற்போது மீண்டும் இப்படம் மூலம் தமிழுக்கு திரும்பியிருக்கிறேன். ஹாரர் காமெடி படங்களுக்கு தமிழக ரசிகர்களிடம் எப்போதும் பெரும் வரவேற்பு இருந்து வருகிறது. இங்குள்ள மக்கள் ஹாரர் காமெடியை குடும்பத்துடன் கொண்டாடுகிறார்கள். அந்த வகையில் ஒரு புதுமையான ஹாரர் காமெடி திரைக்கதையை உருவாக்கியுள்ளேன். முதல்முறையாக இப்படம் வரலாற்று பின்னணியில் ஹாரர் காமெடி கதையினை  சொல்லும் படமாக இருக்கும். இப்படத்தில் மிகவும் முக்கியமான, முதன்மை கதாபாத்திரத்தில் நடிகை சன்னி லியோன் நடிக்கிறார். வேறு நாயகிகள் நடிப்பதை விடவும் சன்னி லியோன் மாதிரியான ஒரு ஹீரோயின், அந்த கதாபாத்திரத்தை செய்யும் போது அக்கதாபாத்திரத்திற்கு ஒரு புது அடையாளம் கிடைக்கும் என நினைத்தோம். ரசிகர்கள் கண்டிப்பாக அவரை திரையில் கொண்டாடுவார்கள். மேலும் இப்படத்தில் ஒரு வித்தியாசமான நாயகனாக சதீஷ் மற்றும் மொட்டை ராஜேந்திரன்,ரமேஷ் திலக்,தங்கதுரை,வினோத் முன்னா  முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்கள். படத்தின் படப்பிடிப்பை சென்னை, பெரம்பலூர் ,துறைமுகம் மற்றும் 25 நாட்கள் மும்பையில் படமாக்க திட்டமிட்டுள்ளோம். படத்தின் முன் தயாரிப்பு பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. விரைவில் படத்தின் படப்பிடிப்பை துவக்கவுள்ளோம்.

இன்னும் தலைப்பிடப்படாத இப்படத்தை இயக்குநர் யுவன் இயக்குகிறார். தீபக் D. மேனன் இப்படத்திற்கு ஒளிப்பதிவு செய்ய,  ஜாவித் ரியாஸ் இசையமைக்கிறார். VAU MEDIA ENTERTAINMENT சார்பில் தயாரிப்பாளர் D.V.சக்தி மற்றும் WHITE HORSE STUDIOS சார்பில் K. சசிகுமார் இணைந்து தயாரிக்கின்றனர்.

Previous Post

*பத்மஸ்ரீ  விவேக்  ஆரம்பித்த நற்பணிகள் தொடரும்*

Next Post

அறிமுக இயக்குநர் ஷ்யாம் மனோகரன் இயக்கத்தில் எட்டு தோட்டாக்கள் புகழ் வெற்றி நடிக்கும் புதிய திரைப்படம் !

Next Post
அறிமுக இயக்குநர் ஷ்யாம் மனோகரன் இயக்கத்தில்   எட்டு தோட்டாக்கள் புகழ் வெற்றி நடிக்கும் புதிய திரைப்படம்  !

அறிமுக இயக்குநர் ஷ்யாம் மனோகரன் இயக்கத்தில் எட்டு தோட்டாக்கள் புகழ் வெற்றி நடிக்கும் புதிய திரைப்படம் !

Popular News

  • ஆகஸ்ட் 7 முதல் தமிழிலும் கிடைக்கும் ZEE5-இல் பிரம்மாண்ட டிஜிட்டல் பிரீமியருக்கு தயாராகும் ‘லெனின்’

    0 shares
    Share 0 Tweet 0
  • விஜய் சேதுபதி நடிக்கும் ‘ஸ்லம் டாக் : 33 டெம்பிள் ரோடு’ திரைப்படத்தில் நடிகை தபுவின் ‘கேரக்டர் கிளிம்ப்ஸ்’ வெளியீடு

    0 shares
    Share 0 Tweet 0
  • இந்த சுதந்திர தினத்தில், 26/11 பயங்கரவாத தாக்குதலின்போது தைரியமாக நின்று போராடிய பெயரிடப்படாத நாயகர்களின் சொல்லப்படாத கதையை கொண்டுவருகிறது இந்தி ZEE5-இன் பாரத் பாக்ய விதாதா

    0 shares
    Share 0 Tweet 0
  • துல்கர் சல்மானின் ‘ஐ ம் கேம்- I Am Game’ திரைப்படத்தின் முதல் பாடல் வெளியீடு: ஆகஸ்ட் 20ஆம் தேதி முதல் உலகம் முழுவதும் திரையரங்குகளில் !

    0 shares
    Share 0 Tweet 0
  • விசாகப்பட்டினத்தில் பிரம்மாண்டமாக ‘AAA சினிமாஸ்’ தொடங்கி, தனது பொழுதுபோக்கு சாம்ராஜ்யத்தை விரிவுபடுத்தும் ஐகான் ஸ்டார் அல்லு அர்ஜுன்!

    0 shares
    Share 0 Tweet 0

Recent News

‘பியார் பிரேமா கல்யாணம்’ டிரெய்லரை வெளியிட்ட Netflix – வித்தியாசமான ட்விஸ்டுடன் வரும் முழுமையான குடும்ப பொழுதுபோக்கு திரைப்படம்!

August 12, 2026

நடிகர் வைபவ்வின் ‘மாறுவேஷம்’ திரைப்படம் யூ/ஏ சான்றிதழுடன் அக்டோபர் 1 முதல் உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது!

August 12, 2026

‘பியார் பிரேமா கல்யாணம்’ டிரெய்லர் வெளியீட்டு விழா !

August 12, 2026

‘அடடா’ பாடல் மூலம் தமிழ் சினிமா நினைவுகளை ராப் இசையில் கொண்டு வரும் கில்லா கே மற்றும் பால் டப்பா

August 12, 2026

அட்லி வழங்கும், விஜய் சேதுபதி நடிக்கும் ‘பத்தா’ – அக்டோபர் 1ம் தேதி திரையரங்குகளில் வெளியீடு!

August 12, 2026

‘சேயோன்’ திரைப்படம் மிகுந்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் உருவாகி வருகிறது, அதன் இரண்டாவது கட்டப் படப்பிடிப்பு மதுரையில் இன்று அதிகாரப்பூர்வமாகத் தொடங்கியது.

August 12, 2026
  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2025 Tamil2daynews.com.

error: Content is protected !!
No Result
View All Result
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்

© 2025 Tamil2daynews.com.