• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us
Tamil2daynews
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
Tamil2daynews
No Result
View All Result
Home சினிமா சினிமா செய்திகள்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் பாராட்டிய ‘தனுசு ராசி நேயர்களே’ டீஸர்

by Tamil2daynews
November 27, 2019
in சினிமா செய்திகள்
0
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் பாராட்டிய ‘தனுசு ராசி நேயர்களே’ டீஸர்
0
SHARES
24
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

ஹரீஷ் கல்யாண் நடிக்கும் ‘தனுசு ராசி நேயர்களே’ படத்தின் டீஸரை, சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் பார்த்துவிட்டு பாராட்டியது குறித்து  ஒட்டு மொத்த படக்குழு முழுவதும் மகிழ்ச்சியில் மூழ்கித் திளைக்கிறது.

இது குறித்து விவரித்த இயக்குநர் சஞ்சய் பாரதி, “கிட்டத்தட்ட ஒரு கனவு நனவானதைப்போலத்தான் இருக்கிறது. எல்லோரையும்போல நானும் தலைவர் ரஜினிகாந்த் சாரின் தீவிர ரசிகன்தான். அவர் நடித்த படங்களை முதல் நாள் முதல் காட்சியில் பார்க்க இதுவரை நான் தவறியதே இல்லை. என் தந்தை சந்தான பாரதி, ரஜினி சாரின் நெருங்கிய நண்பர் என்றாலும், இயக்குநராக எனது பணியை அவர் பார்த்துப் பாராட்டியது என்னால் மறக்க முடியாத தருணம். வண்ணமயமான தனுசு ராசி நேயர்களே டீஸருக்காக ஒட்டுமொத்த படக்குழுவையும் வெகுவாகப் பாராட்டினார் ரஜினி சார்.

படத்தலைப்பு எவ்வாறு தனித்துவம் மிக்கதாக இருக்கிறதோ அதே அளவுக்கு சர்வதேச ரசிகர்களின் கவனத்தை ஈர்க்கத் தக்கதாகவும் இருக்கிறது என்று பாராட்டினார். ரஜினி சார் பாராட்டியது வெறும் முகஸ்துதிக்காக அல்ல. நிஜமான ஈடுபாட்டுடன் படத்தைப் பற்றியும், படக்குழுவைப் பற்றியும் கேட்டறிந்தார். மிகுந்த ஆர்வத்துடன் என்னைப் பற்றியும் நான் யாரிடம் உதவி இயக்குநராகப் பணியாற்றினேன் என்றும் கேட்டார். இயக்குநர் விஜயிடம் நான் உதவி இயக்குநராகப் பணியாற்றியதை விவரித்தேன். படம் எப்போது வெளியாகிறது என்று அவர் கேட்க, நான் ரிலீஸ் தேதியே சொன்னதும், சரியான நேரத்தில்தான் வெளியிடுகின்றீர்கள் என்று சொன்னார்” என்றார் இயக்குநர் சஞ்சய் பாரதி..

ஸ்ரீ கோகுலம் மூவிஸ் சார்பில் கோகுலம் கோபாலன் தயாரிக்கும் தனுசு ராசி நேயர்களே திரைப்படம் உலகெங்கும் டிசம்பர் 9ஆம் தேதி வெளியாகிறது. அறிமுக இயக்குநர் சஞ்சய் பாரதி இப்படத்தை இயக்கியிருக்கிறார்.


ரிபா மோனிகா ஜான் மற்றும்  டிகான்கனா சூர்யவன்ஸி  இருவரும் கதாநயாகி வேடங்களில் நடிக்க, ரேணுகா, முனீஷ்காந்த், யோகி பாபு, மற்றும் சில நட்சத்திரங்கள் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். ஜிப்ரான் இசையமைக்கும் இப்படத்துக்கு பி.கே.வர்மா ஒளிப்பதிவு செய்கிறார். குபேந்திரன் படத்தொகுப்பை கவனிக்க, உமேஷ் ஜே குமார் கலை இயக்குநராகப் பணியாற்றுகிறார். விவேகா, மதன் கார்க்கி, விக்னேஷ் சிவன், கு.கார்த்திக், சந்துரு ஆகியோர் பாடல்களை எழுத, எம்.ஆர்.பொன் பார்த்திபன் வசனங்களைத் தீட்டுகிறார். ஆடியோகிராபி பொறுப்பை டி.உதயகுமாரும், ஆடை அலங்காரப் பொறுப்பை ஜி.அனுஷா மீனாக்ஷியும் ஏற்றிருக்கின்றனர். கல்யாண்-ஷெரீப் நடனக் காட்சிகளை அமைக்கின்றனர்.

Tags: Dhanusha Rasi NeyargaleHarish KalyanReba MonicaSanjay BharathiSuperstar Rajinikanth
Previous Post

நடிகர் பாலாசிங் மரணம் ! நடிகர் சங்கம் இரங்கல் ….

Next Post

சமூக வலைத்தளங்களால் பெண்களுக்கு ஏற்படும் பிரச்சனைகளை சொல்லும் ” கருத்துக்களை பதிவு செய் “

Next Post
சமூக வலைத்தளங்களால்  பெண்களுக்கு ஏற்படும் பிரச்சனைகளை சொல்லும் ” கருத்துக்களை பதிவு செய் “

சமூக வலைத்தளங்களால் பெண்களுக்கு ஏற்படும் பிரச்சனைகளை சொல்லும் " கருத்துக்களை பதிவு செய் "

Popular News

  • விமல் – ஸ்ரேயா கூட்டணியில் அதிரடி ரோம்-காம் ‘சண்டக்காரி’!

    0 shares
    Share 0 Tweet 0
  • மோகன்லால் – விஷ்ணு மோகன் இணையும் படத்திற்கு ‘ஆபரேஷன் கங்கா’ என பெயர் சூட்டப்பட்டது

    0 shares
    Share 0 Tweet 0
  • மாரி செல்வராஜ் வழங்கும், அமீர் நடிப்பில் ‘மாகாளி’ – பூஜையுடன் படப்பிடிப்பு துவங்கியது!

    0 shares
    Share 0 Tweet 0
  • கமல்ஹாசன் – எஸ்.யு.அருண் குமார் கூட்டணிக்கு அமோக வரவேற்பு; ‘லுக் டெஸ்ட்’ காட்சிகள் வைரல்

    0 shares
    Share 0 Tweet 0
  • ‘மூன்வாக்’ – 2026 தீபாவளி விருந்தாக மகிழ்ச்சி, சிரிப்பை அள்ளித் தரும் குடும்ப பொழுதுபோக்கு படமாக திரைக்கு வருகிறது

    0 shares
    Share 0 Tweet 0

Recent News

விமல் – ஸ்ரேயா கூட்டணியில் அதிரடி ரோம்-காம் ‘சண்டக்காரி’!

September 5, 2026

மோகன்லால் – விஷ்ணு மோகன் இணையும் படத்திற்கு ‘ஆபரேஷன் கங்கா’ என பெயர் சூட்டப்பட்டது

September 5, 2026

நடிகர்கள் த்ரிஷா கிருஷ்ணன், ராதிகா சரத்குமார், அபர்ணா பாலமுரளி நடிப்பில், ராஜா கிருஷ்ண மேனன் இயக்கத்தில், பனோரமா ஸ்டுடியோஸ் நிறுவனம், லோகோமோட்டிவ் குளோபல் நிறுவனத்துடன் இணைந்து தயாரிக்கும் முதல் தமிழ் படத்தின் படப்பிடிப்பு லண்டனில் தொடங்கியது!

September 5, 2026

‘மூன்வாக்’ – 2026 தீபாவளி விருந்தாக மகிழ்ச்சி, சிரிப்பை அள்ளித் தரும் குடும்ப பொழுதுபோக்கு படமாக திரைக்கு வருகிறது

September 5, 2026

பெத்லகேம் குடும்ப யூனிட் – விமர்சனம்

September 5, 2026

நிவின் பாலி நடிக்கும் ‘பெத்லகேம் குடும்ப யூனிட்: பட பத்திரிகையாளர் சந்திப்பு

September 5, 2026
  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2025 Tamil2daynews.com.

error: Content is protected !!
No Result
View All Result
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்

© 2025 Tamil2daynews.com.