• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us
Tamil2daynews
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
Tamil2daynews
No Result
View All Result
Home சினிமா சினிமா செய்திகள்

வாரி வழங்கிய சூர்யா-ஜோதிகா…

by Tamil2daynews
November 1, 2021
in சினிமா செய்திகள்
0
வாரி வழங்கிய சூர்யா-ஜோதிகா…
0
SHARES
4
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp
பழங்குடி இருளர் பாதுகாப்புச் சங்கத்தின் நலனுக்காக ஜோதிகா சூர்யா ஒரு கோடி ரூபாய் நன்கொடை
பழங்குடி இருளர் இன மக்களின் நலனுக்காக ஜோதிகா – சூர்யாவின் 2டி நிறுவனம் சார்பில் ஒரு கோடி ரூபாய் நிதி உதவி, தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் அவர்களின் முன்னிலையில் பழங்குடி இருளர் பாதுகாப்புச் சங்கத்தின் பொறுப்பாளர்களிடம் ஒப்படைக்கப்பட்டது
நடிகர் சூர்யா தயாரித்து நடித்திருக்கும் திரைப்படம் ‘ஜெய் பீம்’.  தமிழகத்தில் நடைபெற்ற உண்மைச் சம்பவத்தை மையப்படுத்தி இந்த திரைப்படம் தயாராகியிருக்கிறது. இதனை ஊடகவியலாளரும் திரைப்பட இயக்குநருமான த.செ. ஞானவேல் இயக்கியிருக்கிறார். பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் இந்த திரைப்படம் நவம்பர் இரண்டாம் தேதி அமேசான் பிரைம் டிஜிட்டல் தளத்தில் வெளியாகிறது.
இந்தத் திரைப்படத்தில்  பழங்குடி மக்களில் ஒரு பிரிவினரான இருளர்களின் வாழ்வியலும், அவர்கள் எதிர்கொள்ளும் சமூக நெருக்கடிகளும் அழுத்தமாக பேசப்பட்டிருக்கிறது. இதில் வழக்கறிஞர் சந்துரு என்ற கதாபாத்திரத்தில் நடிகர் சூர்யா நடித்திருக்கிறார்.
திரைப்படம் என்பது மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் வலிமை வாய்ந்த ஊடகம் என்பது ‘ஜெய் பீம்’ என்ற படத்தின் மூலம் மீண்டும் சூர்யா மற்றும் அவரது படக்குழுவினர் உறுதி படுத்தி இருக்கிறார்கள். இப்படத்தின் மூலம் தமிழ் சமூகத்தில் இருளர் பழங்குடி இன மக்களும், அவ்வின மாணவர்களும் எதிர்கொள்ளும் சமூகவியல் பிரச்சினைகளை பேசி பெரும் அதிர்வலையை ஏற்படுத்தி இருக்கிறார்கள்.
இந்நிலையில் அவர்களின் கல்வி நலனுக்காக ஜோதிகா – சூர்யாவின் 2டி நிறுவனம் சார்பில் ஒரு கோடி ரூபாய் நிதி உதவியை, தமிழக முதல்வர் மு க ஸ்டாலினின் முன்னிலையில் பழங்குடி இருளர் பாதுகாப்புச் சங்கத்தின் நலனுக்காக சூர்யா வழங்கினார். இதன் போது நடிகர் சூர்யா, ஜோதிகா, இணை தயாரிப்பாளர் ராஜசேகர் கற்பூரசுந்தரபாண்டியன், நீதியரசர் சந்துரு, இயக்குநர் த.செ.ஞானவேல் மற்றும் பழங்குடி இருளர் பாதுகாப்புச் சங்கத்தின் பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர்.
Previous Post

முத்துராமலிங்க தேவரின் பெருமை போற்றும் படம்  “தேசிய தலைவர்”..

Next Post

அண்ணாத்த படத்துடன் மோதும் எனிமி…

Next Post
அண்ணாத்த படத்துடன் மோதும் எனிமி…

அண்ணாத்த படத்துடன் மோதும் எனிமி...

Popular News

  • இராவணனை தேடிய சீதையின் காதல் சீயானே

    0 shares
    Share 0 Tweet 0
  • வித்தியாசமான கதைக்களத்தில் உருவாகியுள்ள ‘ஹி இஸ் பிரெக்னன்ட்’ வெப்சீரிஸ்

    0 shares
    Share 0 Tweet 0
  • வெளியீட்டுக்கு தயாரான பாவனாவின் ‘அனோமி: தி ஈக்வேஷன் ஆஃப் டெத்’

    0 shares
    Share 0 Tweet 0
  • தமிழ் சினிமா வரலாற்றில் முதல் முறை: 250 ட்ரோன்களுடன் ‘வித் லவ்’ பிரம்மாண்ட அறிவிப்பு!

    0 shares
    Share 0 Tweet 0
  • விஜய் தேவரகொண்டா, மிருணாள் தாக்கூர், பரசுராம் நடிக்கும் VD13 / SVC 54 படம் அதிகாரப்பூர்வமாக தொடங்கப்பட்டது!

    0 shares
    Share 0 Tweet 0

Recent News

மகேஷ் பாபு – எஸ். எஸ். ராஜமௌலி கூட்டணியில் உருவாகி வரும் ‘வாரணாசி’ ( VARANASI )திரைப்படம் 2027 ஏப்ரல் 7-ல் உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது !!

February 2, 2026

இயக்குநர் அட்லீ வெளியிட்ட அபிஷன் ஜீவிந்த் நடிக்கும் “வித் லவ் ( With Love )” படத்தின் ட்ரெய்லர்

February 2, 2026

KRG கண்ணன் ரவியின் தயாரிப்பில் நடனப்புயல் பிரபு தேவா மற்றும் வைகைப் புயல் வடிவேலு நடிக்கும் “பேங் பேங்” (Bang Bang ) படத்தின் டைட்டில் டீஸர் வெளியானது!

February 2, 2026

சசிகுமார்- ராஜு முருகன் கூட்டணியின் ‘ மை லார்ட்’ ( My Lord) திரைப்படம் பிப்ரவரி 13 ஆம் தேதி வெளியாகிறது

February 2, 2026

வெளியீட்டுக்கு தயாரான பாவனாவின் ‘அனோமி: தி ஈக்வேஷன் ஆஃப் டெத்’

February 2, 2026

“வித் லவ் ( With Love )” திரைப்பட முன் வெளியீட்டு விழா !!

February 2, 2026
  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2025 Tamil2daynews.com.

error: Content is protected !!
No Result
View All Result
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்

© 2025 Tamil2daynews.com.