• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us
Tamil2daynews
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
Tamil2daynews
No Result
View All Result
Home சினிமா சினிமா செய்திகள்

நீதி, நேர்மை, நியாயத்தின் குரலாய் தீபாவளி முதல் “ஜெய் பீம்”

by Tamil2daynews
October 1, 2021
in சினிமா செய்திகள்
0
நீதி, நேர்மை, நியாயத்தின் குரலாய் தீபாவளி முதல்  “ஜெய் பீம்”
0
SHARES
9
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp
ரசிகர்களுக்கு தீபாவளி பரிசாக வெளியாகும் சூர்யாவின் ‘ஜெய் பீம்’


சூர்யா நடிப்பில் தயாராகியிருக்கும் ‘ஜெய் பீம்’ நவம்பர் மாதம் 2ஆம் தேதியன்று அமேசான் ப்ரைம் வீடியோவில் உலகம் முழுவதும் பிரத்யேகமாக வெளியாகிறது என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டிருக்கிறது.

அமேசான் பிரைம் வீடியோ, இந்தியா மற்றும் 240 நாடுகளில், நவம்பர் 2ஆம் தேதி, சூர்யா நடிப்பில் தயாராகியிருக்கும் ‘ஜெய் பீம்’ படம் பிரத்யேகமாக வெளியாகிறது என அறிவித்திருக்கிறது.

இயக்குனர் த. செ. ஞானவேல் எழுதி இயக்கியிருக்கும் ‘ஜெய் பீம்’ திரைப்படத்தை 2டி என்டர்டெய்ன்மெண்ட் என்ற நிறுவனம் சார்பில் நடிகர் சூர்யா மற்றும் ஜோதிகா தயாரித்திருக்கிறார்கள்.

மிகவும் எதிர்பார்ப்பில் உள்ள இந்த திரைப்படத்தில் பழங்குடி சமூகங்களுக்கு இடையேயான முரண்பாடுகளை எதிர்த்துப் போராடும் வழக்கறிஞராக சூர்யா நடித்துள்ளார். இவருடன் நடிகர்கள் பிரகாஷ்ராஜ், ராவ் ரமேஷ்,  நடிகைகள் ரஜிஷா விஜயன், லிஜோமோள், ஜோஸ் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். இந்த படத்திற்கு ஷான் ரோல்டன் இசையமைத்துள்ளார். இந்தப் படத்தின் இணை தயாரிப்பாளர் – ராஜசேகர்  கற்பூரசுந்தரபாண்டியன்.

தமிழில் மட்டுமல்லாமல் தெலுங்கிலும் ‘ஜெய் பீம்’ நவம்பர் 2ஆம் தேதி வெளியாகிறது.

மிஸ்டரி டிராமா ஜானரில் தயாராகியிருக்கும் ‘ஜெய் பீம்’ படத்தில் பழங்குடி இனத்தை சேர்ந்த தம்பதிகளான செங்கேணி மற்றும் ராஜ்கண்ணுவின் வாழ்வியலை நுட்பமாகவும், ஆழமாகவும் பேசுகிறது. ராஜ்கண்ணு கைதுசெய்யப்பட்டு காவல்நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்படுகிறார். அங்கிருந்து அவர் காணாமல் போகிறார். விசாரணைக்காக சென்ற தன்னுடைய கணவர் வீடு திரும்பாததால் அதிர்ச்சி அடைந்த ராஜ்கண்ணுவின் மனைவி செங்கேணி, வழக்கறிஞர் சந்துருவின் உதவியை நாடுகிறார். வழக்கறிஞர் சந்துரு உண்மையை வெளிக் கொணரவும், மாநிலத்தில் ஆதரவற்ற பழங்குடி இன பெண்களுக்கு நீதி கிடைக்கவும் பொறுப்பேற்கிறார்.

அதில் அவர் வெற்றி பெற்றாரா? நீதி கிடைத்ததா? என்பதை அறிய நவம்பர் இரண்டாம் தேதி வரை ரசிகர்கள் காத்திருக்க வேண்டும்.

‘ ஜெய் பீம்’ திரைப்படம், அமேசான் பிரைம் வீடியோவில் தமிழ் மற்றும் தெலுங்கு மொழியில் நவம்பர் 2ஆம் தேதி தீபாவளி விருந்தாக பிரத்யேகமாக வெளியாகிறது.

Previous Post

Lift Streaming now only on DisneyPlus Hot Star

Next Post

INDO CINE APPRECIATION FOUNDATION in association with the Embassy of Brazil, New Delhi are organizing a BRAZILIAN FILM FESTIVAL on 4, 5, 6 and 8 October 2021

Next Post
INDO CINE APPRECIATION FOUNDATION in association with the Embassy of Brazil, New Delhi are organizing a BRAZILIAN FILM FESTIVAL on 4, 5, 6 and 8 October 2021

INDO CINE APPRECIATION FOUNDATION in association with the Embassy of Brazil, New Delhi are organizing a BRAZILIAN FILM FESTIVAL on 4, 5, 6 and 8 October 2021

Popular News

  • “துடிக்கும் கரங்களுக்கு முன்.. துடிக்கும் கரங்களுக்கு பின்..” ; உண்மையை உடைத்து பேசிய விமல்

    0 shares
    Share 0 Tweet 0
  • தளபதி விஜய் உடன் பிறந்த தங்கையை  இதுவரை யாரும் பார்த்திராத அவரின் அறிய புகைப்படம்..!

    0 shares
    Share 0 Tweet 0
  • ஜிவி பிரகாஷ் குரலில், நயன்தாரா – கவின் இணையும் “ஹாய்” பட ஃபர்ஸ்ட் சிங்கிள்

    0 shares
    Share 0 Tweet 0
  • மில்லியன் டாலர் ஸ்டுடியோஸ் – எம் ஆர் பி என்டர்டெய்ன்மென்ட் இணைந்து வழங்கும் ‘புரொடக்ஷன் நம்பர் 3’!

    0 shares
    Share 0 Tweet 0
  • இந்த ஆண்டின் முதல் ப்ளாக்பஸ்டர் திரைப்படமாக, டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டார் தளத்தில் “ அன்பறிவு” திரைப்படம் பிரமாண்ட வெற்றி பெற்றுள்ளது !

    0 shares
    Share 0 Tweet 0

Recent News

வாரி வாரி பாடல் மூலம் ரசிகர்களை கவர்ந்த பாப் நட்சத்திர பாடகி தீ (DHEE)

May 2, 2026

ஏஜிஎஸ் என்டர்டெயின்மென்ட் கல்பாத்தி எஸ். அகோரம், கல்பாத்தி எஸ். கணேஷ், கல்பாத்தி எஸ். சுரேஷ் தயாரிப்பில் சுபாஷ் கே ராஜ் இயக்கத்தில் ‘ஆக்ஷன் கிங்’ அர்ஜுன், அபிராமி, பிரீத்தி முகுந்தன் நடிக்கும் குடும்ப ஆக்ஷன் திரில்லர் ‘பிளாஸ்ட்’

May 2, 2026

‘இரண்டு வானம்’ திரைப்படத்தின் உணர்ச்சிமிகு பயணத்தை வெளிப்படுத்தும் கவித்துவமான ‘வெள்ளிச்சுடரே’ பாடல்!

May 2, 2026

பிரைம் வீடியோ தனது தமிழ் ஒரிஜினல் சஸ்பென்ஸ் டிராமா சீரிஸான ‘எக்ஸாம்’ (Exam) சீரிஸின் உலகளாவிய வெளியீட்டு தேதியை அறிவித்துள்ளது — மே 15 முதல் ஸ்ட்ரீமாகிறது

May 2, 2026

காஜல் அகர்வால் மற்றும் ஷ்ரேயாஸ் தல்படே நடிக்கும் ‘தி இந்தியா ஸ்டோரி’ ஜூலை 24ஆம் தேதி வெளியாகிறது!

May 2, 2026

நடிகர் சூர்யாவின் ‘கருப்பு ‘ திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா

May 2, 2026
  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2025 Tamil2daynews.com.

error: Content is protected !!
No Result
View All Result
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்

© 2025 Tamil2daynews.com.