• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us
Advertisement
Tamil2daynews
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
Tamil2daynews
No Result
View All Result
Home சினிமா சினிமா செய்திகள்

“வருங்கால சூப்பர் ஸ்டார் ” ஆகவேண்டுமா?

by Tamil2daynews
January 31, 2022
in சினிமா செய்திகள்
0
கொன்றுவிடவா – விமர்சனம்.
0
SHARES
7
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp
 4 வி என்டர்டெயின்மென்ட் நிறுவனம் சார்பாக இசை மேதை இளையராஜா இசையில் மஞ்சரி சுசிகணேசன் தயாரிப்பில் இயக்குனர் சுசி கணேசன் இயக்கும் வஞ்சம் தீர்த்தாயடா படத்தின் நடிகர்கள் பற்றிய அறிவிப்பு இன்று வெளியிடப்பட்டது .சுவரில் கரிக் கட்டையால்  கிறுக்கியது போல் இரண்டு உருவங்களோடு சமீபத்தில் வெளியான இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் பரபரப்பை ஏற்படுத்தியது இருவரும் யார் என்ற கேள்வி ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது .அதற்கான விடை இன்று நடந்த பிரஸ்மீட்டில் கிடைத்தது
தயாரிப்பாளர் மஞ்சரி சுசிகணேசன் பேசும்போது
“ஏற்கனவே இந்தியில் இரண்டு படங்களை தயாரித்து இருக்கிறோம் .இது தமிழில் எங்களது முதல் தயாரிப்பு . எப்போதும் வித்தியாசமாக யோசிக்கும் இயக்குனர் சுசி கணேசன் இந்த படத்தில் கதாநாயகன் தேர்வையும் புதுமையாக யோசித்திருக்கிறார் . இந்த படத்துக்குகாகவே பிரபலமான டிவியில் நடக்கப்போகும் பிரம்மாண்டமான talent hunt show-வான ” வருங்கால சூப்பர் ஹீரோ 2022″ நிகழ்ச்சியில் வெற்றி பெறும் போட்டியாளர் இந்த படத்தின்  இரண்டு ஹீரோக்களில் ஒரு ஹீரோவாக அறிவிக்கப்பட இருக்கிறார் . இரண்டு ஹீரோக்களில் ஒருவர் பிரபலமான நடிகராகவும் , மற்றவர் புதுமுக நடிகராகவும் அமையப் போகிற இந்த படத்தில் புதுமுக நடிகரின் தோற்றமும் முக பாவனையும் முக்கியம் என்பதால்,  ஹீரோ தேடலில் வயது வரம்பு கூட ” 20 லிருந்து 45 வரை ” என அறிவிக்கப்பட்டு  இருக்கிறது .
இயக்குனர் சுசி கணேசன் இதுபற்றி கூறும்போது
“பலருக்கும் நடிக்கும் ஆசை திறமை இருந்தும் பலர் பல்வேறு காரணங்களால் நடிப்பு கனவை ஒத்திவைத்து வேறு பாதையில் பயணப்பட்டு இருப்பார்கள் . தோற்றமும், முக பாவனையும் முக்கியான இந்த கதா நாயகன் தேடலுக்கு – வயது வரம்பை உயர்த்தியிருக்கிறேன். சூப்பர் ஸ்டார் ஆகும் தகுதியுள்ள ஒரு அற்புதமான நடிகரை கண்டெடுப்பதே இந்நிகழ்ச்சியின் நோக்கம்” என்றார் .ஆர்வம் உள்ள போட்டியாளர்கள் www.4vmaxtv.com வெப்சைட் அல்லது 4V MAXTV -யூ டியூப் மூலம் இரண்டு நிமிடத்திற்கு மிகாமல் வீடியோவை அப்லோட் செய்ய வேண்டும் . இரண்டாவது சுற்றுக்கு தேர்வாகும் போட்டியாளர்கள் சென்னையில் தங்க வைக்கப்பட்டு நடிப்புப் பயிற்சி உடற்பயிற்சி அளிக்கப்படும் .  மூன்றாவது சுற்றுக்கு தேர்ந்தெடுக்கும் போட்டியாளர் 12 பேர் ,
12 வாரங்கள் நடக்கும் “வருங்கால சூப்பர் ஸ்டார் 2022 ”  கலந்து கொளவார்கள் . இன்னும் இரண்டு வாரங்களில் இதனை ஒளிபரப்பும் டிவி சேனல் அறிவிக்கப்பட இருக்கிறது . நடிகை ஸ்னேகாவை பிரபலமான வாரப் பத்திரிக்கை மூலமும் நடிகர் ப்ரசன்னாவை பிரபலமான டி வி மூலமும் தேர்ந்தெடுத்த சுசி கணேசன் , சோசியல் மீடியாவின் வளர்ச்சிக்கேற்ப ” வருங்கால சூப்பர் ஹீரோ” வின் மூலம் கதா நாயகன் தேடும் முயற்சி எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது.ஒரு படத்திற்காக டேலண்ட் ஹன்ட் ஷோ நடத்தி ஒரு ஹீரோவை தேர்ந்தெடுப்பது தமிழ் சினிமாவில் இதுவே முதல் முறை .”அன்றைக்கு அது புதுசாக இருந்தது . கால மாற்றத்திற்கேற்ப இது புதுமையாக இருக்கும் ” என்றார் சுசி கணேசன் .
 தயாரிப்பாளர் மஞ்சரி “பார்க்கும் 10 பேரில் 9 பேருக்கு நடிக்கும் ஆர்வம் பெருகிக் கொண்டிருக்கும் இந்த காலத்திற்கு ஏற்ப சராசரி மனிதனுக்கு கூட ஒரு ஸ்டார் அந்தஸ்தை ஏற்படுத்த நினைக்கும் இயக்குனர் சுசி கணேசன் முயற்சி பெரும் வெற்றி பெறும் . இதே நிகழ்ச்சி கல்கா சூப்பர் ஸ்டார் என்ற பெயரில் ஹிந்தியிலும் தெலுங்கு கன்னடம் மொழிகளிலும் நடத்தப்படும் வேலைகள் துவங்கியிருக்கின்றன. இந்த வருடத்தின் வெற்றியை தொடர்ந்து ஒவ்வொரு ஆண்டும் ஒரு புது ஹீரோவை இந் நிகழ்ச்சியின் மூலம் கண்டுபிடித்து அறிமுகப்படுத்தும்  முயற்சியில் இயக்குனர் சுசி கனேசன் வெற்றி பெறுவார் .நிறுவனத்தின் அடுத்த படம் ராணி வேலுநாச்சியார் . வாழ்க்கை வரலாற்று படத்தின் ஆரம்பகட்ட வேலைகள் துவங்கியிருக்கின்றன. எழுத்தாளர் மருது மோகனும் , குழுவும் கதை எழுதிக்கொண்டிருக்கிறார்கள். மிகப்பிரம்மாண்டமான ஒரு வரலாற்றுப் பதிவாக எங்கள் நிறுவனத்தின் சார்பாக அந்தப்படம் தயாரிக்கப்படும். Bullet19  என்ற பெயரில் பெரிய பட்ஜெட் படமாக சுசிகணேசன் இயக்கப் போகும் அடுத்த படத்துக்கு ,முக்கியமான நடிகரோடு பேச்சுவார்த்தை நடந்து கொண்டிருக்கிறது . அது பற்றிய அறிவிப்பும் விரைவில் வெளியிடப்படும் “என்றார்
Tags: SUSI GANESANTHIRUTTU PAIYALE
Previous Post

நடிகர் மணிகண்டன் இயக்கத்தில் ஷஷாங்க் வெண்ணெலகண்டி தயாரிப்பில் உருவாகியிருக்கும் ‘நரை எழுதும் சுயசரிதம்’ சோனி லிவ்வில் வெளியீடு

Next Post

ஆஹா தயாரிப்பில், கவின் ரெபா மோனிகா ஜான் நடிப்பில் உருவாகியுள்ள “ஆகாஷ் வாணி” இணைய தொடரின் ஃபர்ஸ்ட் லுக் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது !

Next Post
கொன்றுவிடவா – விமர்சனம்.

ஆஹா தயாரிப்பில், கவின் ரெபா மோனிகா ஜான் நடிப்பில் உருவாகியுள்ள “ஆகாஷ் வாணி” இணைய தொடரின் ஃபர்ஸ்ட் லுக் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது !

Popular News

  • Vantha Rajavathaan Varuven movie Photos

    Vantha Rajavathaan Varuven movie Photos

    0 shares
    Share 0 Tweet 0
  • “Vyom Entertainments” நிறுவனம், இயக்குனர் டென்னிஸ் மஞ்சுநாத் இயக்கத்தில், செல்வராகவன் நடிப்பில் “Untitled Production No.1” என்ற பெயரில் தனது முதல் படத்தை 2–ஜூலை–2025 அன்று துவக்குகிறது.

    0 shares
    Share 0 Tweet 0
  • பழநி தல வரலாறு

    1 shares
    Share 0 Tweet 0
  • ’பறந்து போ’ திரைப்படம் நிச்சயம் உங்களை ஏமாற்றாது”- நடிகர் மிர்ச்சி சிவா!

    0 shares
    Share 0 Tweet 0
  • மார்வெல் குடும்பத்தின் மிஸ்டர் ரீட், சூ ஸ்டார்ம் மற்றும் பிறரின் பவர் பற்றி இங்கே பார்க்கலாம்!

    0 shares
    Share 0 Tweet 0

Recent News

ஜியோஹாட்ஸ்டாரில் வெளியானது ‘குட் வொய்ஃப்’ இணையத் தொடர்…அதன் பத்திரிக்கையாளர்கள் சந்திப்பின் ஹைலைட்ஸ்!

July 5, 2025

ரசிகர்களுக்கும், ஊடகத்தினருக்கும் நன்றி தெரிவித்த ‘லவ் மேரேஜ்’ படக்குழு

July 5, 2025

ஃபீனிக்ஸ் – விமர்சனம் ரேட்டிங் – 4 / 5

July 5, 2025

பறந்து போ – விமர்சனம் ரேட்டிங் – 4 / 5

July 5, 2025

3 BHK விமர்சனம் ரேட்டிங் – 4 / 5

July 5, 2025

”இயக்குநர் ராமிடம் நிறைய கற்றுக் கொண்டேன்”- நடிகை கிரேஸ் ஆண்டனி!

July 5, 2025
  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2025 Tamil2daynews.com.

error: Content is protected !!
No Result
View All Result
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்

© 2025 Tamil2daynews.com.