ADVERTISEMENT
  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us
Tamil2daynews
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
Tamil2daynews
No Result
View All Result
Home சினிமா சினிமா செய்திகள்

ஆஹா தயாரிப்பில், கவின் ரெபா மோனிகா ஜான் நடிப்பில் உருவாகியுள்ள “ஆகாஷ் வாணி” இணைய தொடரின் ஃபர்ஸ்ட் லுக் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது !

by Tamil2daynews
January 31, 2022
in சினிமா செய்திகள்
0
கொன்றுவிடவா – விமர்சனம்.
0
SHARES
11
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp
பிரபல நடிகர் ஆர்யா வெளியிட்ட ரோம்-காம் வலைத் தொடரான,  கவின்-ரெபா மோனிகா ஜான் நடித்த,  “ஆகாஷ் வாணி” தொடரின் ஃபர்ஸ்ட் லுக் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. இந்த ஃபர்ஸ்ட் லுக் பொழுதுபோக்கு நிறைந்த, ஒரு  ஜாலியான  காதல் கதை இது என்பதை சொல்வதாக அமைந்திருக்கிறது, ஆனால் இயக்குனர் எனோக் ஏபிள், ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் ஒரு மகிழ்ச்சியான ஜாலி ரொமாண்டிக் பயணம் என்பதை சொல்ல  மட்டுமே ஆனால் உண்மை அதுவல்ல என்று கூறுகிறார். இணைய தொடர் முழுமையான உணர்வுகளை வெளிக்கொணரும், மேலும் தொடரை பார்க்கும் எவருக்கும் இதயத்தை அதிர வைக்கும்  உணர்வைத் தரும். ஒரு இணைய தொடரை ரோம்-காம் வடிவில்  பரிசோதிப்பதில்  மிகுந்த ஆர்வமுடன்  இருப்பதாகவும் இயக்குனர் மேலும் கூறியுள்ளார், இந்த வகை வெப் சீரீஸ் தமிழில் வருவது  இதுவே முதல் முறை.
Kavin's Akashvani OTT Release Date, Digital Rights
சமீபத்தில் வெளியாகி பெரும் வெற்றிபெற்ற ‘லிஃப்ட்’ திரைப்படத்தில் தனது சிறப்பான நடிப்பின் மூலம், பெரிய அளவில் பாராட்டுக்கள் குவித்த நடிகர் கவின், இந்த வலைத் தொடரில் நாம் தினமும் சந்திக்கும் எதிர் வீட்டு அழகான இளைஞனாக நடிக்கிறார், ரெபா மோனிகா ஜான் அவரது காதலியாக நடிக்கிறார். ஆஹா  நிறுவனம் தமிழில் இந்தத் தொடரினை திரையிடவுள்ளது, விரைவில் இது குறித்த  அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும். ஷரத் ரவி, தீபக் பரமேஷ், வின்சா, அபிதா வெங்கடராமன், மேகி எனும் மார்கரெட்,  மெல்வின், ஜான்சன் மற்றும் கவிதாலயா கிருஷ்ணன் ஆகியோர் இத்தொடரில் இணைந்து நடிக்கின்றனர்.Kasutubha Mediaworks  சார்பில் தயாரிப்பாளர் சோனியா ராம்தாஸ்  கூறும்போது, “ஆகாஷ் வாணி ரொமாண்டிக் வகை வெப்சீரிஸ்களில் மிகச்சிறந்ததாக இருக்கும், இது இளைஞர்களின் உலகை வசீகரிக்கும் வகையில் பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்டுள்ளது. கவின் ரெபா மோனிகா ஜான் ஜோடி நிறைய ரொமான்ஸ், பொழுதுபோக்கு மற்றும் சந்தோசத்தை தரும். அனைவருக்கும் பிடிக்கும் வகையில் மிகச்சிறப்பாக இந்த தொடர் வெளிவந்துள்ளதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம், மேலும் இது பார்வையாளர்கள் மத்தியில் குறிப்பாக இளையவர்கள் மத்தியில் மிகப்பெரிய வெற்றியைப் பெறும் என உறுதியாக நம்புகிறோம்.
Akashvani Web Series OTT Release Date, OTT Platform, Time and more
எனோக் ஏபிள் இத்தொடரை இயக்கியுள்ளார், பிகில், மெர்சல், தெறி போன்ற பிளாக்பஸ்டர் ஹிட் படங்களுக்கு திரைக்கதை எழுதிய ரமணன் கிரிவாசன் கிரியேட்டிவ் ஹெட்டாக பணிபுரிகிறார். சாந்தகுமார் சக்ரவர்த்தி (அமலா பாலின் அதோ அந்த பறவை, அர்ஜுன்-ஹர்பஜன் சிங் நடித்த ஃபிரண்ட்ஷிப் படப்புகழ்) ஒளிப்பதிவு செய்கிறார். பிரவீன் ராஜா (மாநகரம், பேட்ட, கைதி, மெர்குரி, கூட்டத்தில் ஒருத்தன், மேயாத மான் புகழ்) ஆடை வடிவமைப்பாளர். ராட்சசன், முண்டாசுப்பட்டி போன்ற படங்களுக்கு தனது பாராட்டுக்குரிய தயாரிப்பு வடிவமைப்பிற்காக புகழ் பெற்ற கோபி, கலைத் துறையை கவனிக்கிறார், குணா பாலசுப்ரமணியம் இசையமைக்கிறார். இவர் டோவினோ தாமஸ் நடித்த “வரவு” மற்றும் “தேங்க்யூ பிரதர்” படங்களுக்கு இசையமைத்துள்ளார்.Kasutubha Mediaworks  சார்பில் தயாரிப்பாளர் சோனியா ராம்தாஸ் இத்தொடரை தயாரித்துள்ளார்.
Tags: aakashavaanikavinReba Monica John
Previous Post

“வருங்கால சூப்பர் ஸ்டார் ” ஆகவேண்டுமா?

Next Post

1 மில்லியன் பார்வைகளை கடந்தது ‘தேஜாவு’ டீசர் 

Next Post
கொன்றுவிடவா – விமர்சனம்.

1 மில்லியன் பார்வைகளை கடந்தது 'தேஜாவு' டீசர் 

Popular News

  • பழநி தல வரலாறு

    பழநி தல வரலாறு

    1 shares
    Share 0 Tweet 0
  • லெஸ்பியன் டிராமா “ஹோலி வுண்ட்” ஆகஸ்ட் 12, 2022 முதல் SS Frames OTT தளத்தில் ஸ்ட்ரீம் செய்யப்படவுள்ளது

    0 shares
    Share 0 Tweet 0
  • டூ ஓவர் – Do Over தமிழ் திரைப்படம்!

    0 shares
    Share 0 Tweet 0
  • *‘R 23 ; கிரிமினல்’ஸ் டைரி’யில் ஒரு நிமிஷம் மிஸ் பண்ணாலும் கதை புரியாது*  

    0 shares
    Share 0 Tweet 0
  • நல்ல தலைப்பு வேண்டுமென்றால் என்னிடம் வாருங்கள் – கவிப்பேரரசு வைரமுத்து பேச்சு

    0 shares
    Share 0 Tweet 0

Recent News

SS ராஜமௌலியின் “ஆர்ஆர்ஆர்” இப்போது டிஸ்னி+ ஹாட்ஸ்டாரில் ஸ்ட்ரீமிங் ஆகீறது!

August 12, 2022

லெஸ்பியன் டிராமா “ஹோலி வுண்ட்” ஆகஸ்ட் 12, 2022 முதல் SS Frames OTT தளத்தில் ஸ்ட்ரீம் செய்யப்படவுள்ளது

August 12, 2022

அடுத்த மாதம் அதிரடியாக ரிலீஸ் ஆகும் “கணம்”..!

August 10, 2022

சோனி லிவ் தனது உன்னத தமிழ் படைப்பான தமிழ் ராக்கர்ஸ் மூலம் நேயர்களை பைரசி உலகிற்கு அழைத்து செல்கிறது.

August 10, 2022

தனுஷ் என்கிற The Lone Wolf கிரே மேன் இரண்டம் பாகத்தில் வெளிவரப்போகிறது

August 10, 2022

புதையலில் கிடைத்த புத்தர் சிலை, ரஜினிகாந்திடம் ஒப்படைப்பு ..!

August 9, 2022
  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2022 Tamil2daynews.com.

No Result
View All Result
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்

© 2022 Tamil2daynews.com.