• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us
Tamil2daynews
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
Tamil2daynews
No Result
View All Result
Home சினிமா சினிமா செய்திகள்

” ஆதவ் கண்ணதாசன் மற்றும் வாணி போஜன் இணையும் “தாழ் திறவா “

by Tamil2daynews
August 22, 2020
in சினிமா செய்திகள்
0
” ஆதவ் கண்ணதாசன் மற்றும் வாணி போஜன் இணையும் “தாழ் திறவா “
0
SHARES
61
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp
” ஆதவ் கண்ணதாசன் மற்றும் வாணி போஜன் இணையும் “தாழ் திறவா ” படத்தின் ஃபர்ஸ்ட் லுக்  போஸ்டர் வெளியீடு “
சில படங்கள் ஃபர்ஸ்ட் லுக் முதல் ட்ரெய்லர் வரை ஒவ்வொன்றையும் மக்கள் ஆச்சரியப்படுத்தும் விதத்தில் அமைத்திருப்பார்கள். அதுவே படத்துக்கு  நல்ல ஒப்பனிங்கை எடுத்து வரும். இதற்கு உதாரணமாகப் பல படங்களைக் கூறலாம். அந்த வரிசையில் கண்டிப்பாக இடம்பெறவுள்ள படம் தான் ‘தாழ் திறவா’


தலைப்பு வித்தியாசத்துடன் மட்டும் படக்குழு களமிறங்கவில்லை. வித்தியாசமான கதைக்களம், நடிகர்கள், தொழில்நுட்பக் கலைஞர்கள் என ஒருசேரப் படத்தில் அமைந்துள்ளது.  பரணி சேகரன் இயக்கியுள்ள இந்தப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகி பலரையும் ஆச்சரியப்படுத்தி உள்ளது. பர்மேன் பிக்சர்ஸ் நிறுவனம்  இந்தப் படத்தை தயாரித்துள்ளது. இது எந்த மாதிரியான கதைகளம் என்பதையே யூகிக்க முடியாத அளவில் வடிவமைத்துள்ளது படக்குழு.

‘தாழ் திறவா’ படம் குறித்து இயக்குநர் பரணி சேகரனிடம் கேட்ட போது, “இது மர்மங்கள் நிறைந்த திகில் படம். அடுத்த காட்சி என்ன, என்பதை யாராலும் யூகிக்க முடியாத அளவில் இருக்கும். தொல்பொருள் ஆய்வை மையப்படுத்திய படம் என்பதால், இதற்காக நிறைய முன் தயாரிப்பு தேவைப்பட்டது. பெரியவர்கள் முதல் குழந்தைகள் ரசிக்கும் விஷயங்கள் வரை ஒரு சேர இருப்பது போல் இந்தப் படத்துக்கு திரைக்கதை அமைத்துள்ளேன்.

இதில் ஆதவ் கண்ணதாசன், வாணி போஜன், சுரேஷ் மேனன், சுப்பு பஞ்சு உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ஜீ தமிழில் ‘யாரடி நீ மோகினி’ சீரியலில் நடித்துள்ள லிசா என்ற பெண்ணும், லலித் என்ற பையனும் நடித்துள்ளார்கள். இரண்டு குட்டீஸும் கண்டிப்பாக பார்வையாளர்களைக் கவர்வார்கள். படத்தில் இன்னொரு முக்கியமான கதாபாத்திரம் இருக்கிறது. அது என்ன என்பது சஸ்பென்ஸ். ஒரு சின்ன ஊருக்கும் தொல்பொருள் சோதனை ஒன்று நடக்கிறது. அங்கு மறைந்திருக்கும் நாகரீகம் ஒன்றை கண்டுபிடிக்கிறார்கள். அதனால் ஏற்படும் பிரச்சினைகளை ஒவ்வொன்றாக எப்படி ஒரு குழு சரி செய்கிறது என்பது தான் இந்தப் படத்தின் கதை.

ஊட்டி, கோயம்புத்தூர், சென்னை உள்ளிட்ட இடங்களில் 25 நாட்கள் படப்பிடிப்பு நடத்தியுள்ளோம். இதில் சுமார் 80% படப்பிடிப்பு முடிந்துவிட்டது. இந்தப் படத்தின் கதையில் கிராபிக்ஸ் முக்கியமான பங்கு வகிக்கும். இதனை ‘ஆயிரத்தில் ஒருவன்’, ‘கடாரம் கொண்டான்’ உள்ளிட்ட பல படங்களுக்கு கிராபிக்ஸ் மேற்பார்வையாளராக பணிபுரிந்த செந்தில் தலைமையில் ‘தாழ் திறவா’ கிராபிக்ஸ் பணிகள் நடைபெற்று வருகிறது. ஒரு கதைக்கு நல்ல தொழில்நுட்ப கலைஞர்கள் கிடைத்துவிட்டால், எதுனாலும் சாத்தியம் தான் என்பார்கள். அந்த வகையில் இசையமைப்பாளராக சந்தோஷ் தயாநிதி, ஒளிப்பதிவாளர்களாக சாலமன் போஸ் மற்றும் சபேஷ் கே.கணேஷ், எடிட்டராக மணிகண்டன், கலை இயக்குநராக ராகவா குமார், ஆடை வடிவமைப்பாளராக சுகி, மேக்கப் பணிகளை வினோத் சுகுமாரன் ஆகியோர் கவனித்துக் கொண்டார்கள்.


ஒவ்வொருவருமே தங்களுடைய பணியை ரொம்பவே புரிந்து, ஆத்மார்த்தமாகச் செய்துள்ளனர். கண்டிப்பாக இவர்களுடைய ஒவ்வொருவருடைய பணியுமே உங்களை அசர வைக்கும். இப்போதைக்கு ஃபர்ஸ்ட் லுக் வெளியிட்டுள்ளோம். விரைவில் அடுத்டுத்த அப்டேட்களுடன் உங்களை ஆச்சரியப்படுத்துவோம் என்பதை உறுதியாகச் சொல்வேன்” என்று தெரிவித்தார்.

Previous Post

மீண்டு வருவார்! மீண்டும் தருவார்!! SPB பற்றி தங்கர் பச்சான்..!!!

Next Post

வாழ்த்திய முதலமைச்சர் மகிழ்சியில் நடிகை ரோஜா..!!

Next Post
வாழ்த்திய முதலமைச்சர் மகிழ்சியில் நடிகை ரோஜா..!!

வாழ்த்திய முதலமைச்சர் மகிழ்சியில் நடிகை ரோஜா..!!

Popular News

  • ‘அன்பில் அவன்’ படத்தின் இரண்டாவது சிங்கிள் “கல்லா நிக்கிறியே” பாடல் வெளியானது !!

    0 shares
    Share 0 Tweet 0
  • துருவ் விக்ரம் நடிக்கும் புதிய படம் ‘ஜாக்கி – நோ ரீடேக்ஸ் அலவுட் (Jackie – No Retakes Allowed) ’!!

    0 shares
    Share 0 Tweet 0
  • இந்திய ரசிகர்களுக்கு மிகப்பிடித்த ஃபேமிலி திரில்லர் திரைப்படமான ‘த்ரிஷ்யம் தி கன்குலூஷன்’ (Drishyam The Conclusion) அக்டோபர் 2 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது!

    0 shares
    Share 0 Tweet 0
  • ‘என்ன விலை’ திரைப்படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா!

    0 shares
    Share 0 Tweet 0
  • KRG கண்ணன் ரவியின் பிரம்மாண்ட தயாரிப்பில் கவுதம் ராம் கார்த்திக் கூட்டணியில் உருவாகும் புதிய படத்தின் படப்பிடிப்பு துவக்கம்!

    0 shares
    Share 0 Tweet 0

Recent News

செப்டம்பர் 24-இல் வெளியாகிறது! நேச்சுரல் ஸ்டார் நானியின் ‘தி பாரடைஸ்’ – டிரெய்லர் இன்றி புதிய முயற்சி

September 14, 2026

‘அன்பில் அவன்’ படத்தின் இரண்டாவது சிங்கிள் “கல்லா நிக்கிறியே” பாடல் வெளியானது !!

September 14, 2026

“ரசிகர்களின் எதிர்பார்ப்பை எகிறவைக்கும் கிரைம் த்ரில்லர்…” ; ‘பீப்’ படம் குறித்து மனம் திறந்த நடிகர் ராகவ்!

September 14, 2026

அரசியலும், சமூக அக்கறையும் சேர்ந்து உருவாகியுள்ள படம் “ஆகாயம் ” தினந்தோறும் நாகராஜ் இயக்கியுள்ளார்.

September 14, 2026

துருவ் விக்ரம் – ரமேஷ் வர்மா கூட்டணியில் உருவாகும் தமிழ்–தெலுங்கு இருமொழி ஆக்‌ஷன் படம்

September 14, 2026

‘தி டார்க் ஹெவன்’ திரைப்பட வெளியீட்டுக்கு முந்தைய அறிமுக விழா!

September 14, 2026
  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2025 Tamil2daynews.com.

error: Content is protected !!
No Result
View All Result
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்

© 2025 Tamil2daynews.com.