• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us
Tamil2daynews
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
Tamil2daynews
No Result
View All Result
Home சினிமா சினிமா செய்திகள்

விமலின் அறிவிப்புக்கு திருநாவுக்கரசு பதிலடி

by Tamil2daynews
March 5, 2021
in சினிமா செய்திகள்
0
விமலின் அறிவிப்புக்கு திருநாவுக்கரசு பதிலடி
0
SHARES
36
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp
நடிகர் விமலால் நான் மோசம் செய்யப்பட்டது குறித்து திமுக தலைவருக்கு நான் கடிதம் அனுப்பி அது அனைத்து ஊடகங்களிலும் செய்தியாக வெளிவந்தது. இந்நிலையில் அதனை மறுக்கும் விதமாக நடிகர் விமல் வெளியிட்டுள்ள அறிவிப்பில் என்னுடன் எந்தவித பணபரிவர்தனையிலும் ஈடுபடவில்லை என தெரிவித்துள்ளார். இது எனக்கு மிகுந்த அதிர்ச்சியையும் வேதனையையும் தருகிறது.
            2016 ஆம் ஆண்டு ” மன்னர் வகையறா ” படத்தின் படப்பிடிப்பு பட்டுக்கோட்டையில் நடந்த சமயத்தில் தயாரிப்பு பணிகளை தயாரிப்பு மேலாளர் திரு.சேது என்பவரும், விமலின் உதவியாளர் திரு.சாரதி என்பவரும் மேற்கொண்டனர். விமல் கேட்டுகொண்டதற்காக கடனாக அவருக்கு நான் பணம் கொடுத்ததை இருவரும் நன்கு அறிவார்கள். விமலின் வேண்டுகோள்படி சாரதி என்னுடைய திரையரங்கிற்கு வந்து பணம் பெற்று செல்வார். சில சமயங்களில் நான் விமலிடமே நேரடியாக பணத்தை கொடுத்திருக்கிறேன். விமல் மீதிருந்த நம்பிக்கையால் என்னுடைய டைரியில் கையொப்பம் வாங்கி கொண்டு பணத்தை கொடுத்தேன்.
             திரு.சாரதி மற்றும் திரு.விமல் இருவருமே என் டைரியில் கையொப்பமிட்டுள்ளார்கள்.  என்னுடைய டைரியை எந்த விசாரணைக்கும் காட்டுவதற்கு நான் தயாராக இருக்கிறேன். முழு பூசணிக்காயை ஒரு பருக்கை சோற்றில் மறைக்க முயல்வது போல என்னிடம் பணம் வாங்கியதை மறைக்கவும், என்னை ஏமாற்றவும் விமல் முயற்சிக்கிறார். இது ஆரோக்கியமான அணுகுமுறை அல்ல.
             விமலுக்கு கடனாக பணம் கொடுத்து இக்கட்டான சூழ்நிலையில் இருந்து அவரை நான் காப்பாற்றினேன். விமல் தங்கியிருந்த பட்டுக்கோட்டை பண்ணை வீட்டில்    கதாநாயகியுடன் அடிதடி மோதல் நடந்து  அதன் பிறகு கதாநாயகி விமலுடன் நடிக்க முடியாது என்று கூறியதை  நான் வெளியில் சொன்னால் விமலுக்கு தான் அசிங்கம்.
             பத்தொன்பது நாள் படத்தில் நடித்த கதாநாயகி அந்த சம்பவத்திற்கு பிறகு விமலுடன் நடிக்க முன்வரவில்லை. இதனால் வேறுவழியின்றி 1.8 கோடி செலவு செய்து எடுத்த படத்தை தூக்கி போட்டுவிட்டு, கதாநாயகியாக ” கயல் ” ஆனந்தியை ஒப்பந்தம் செய்து மறுபடியும் அதே காட்சிகளை, அதே வசனத்தோடு எடுத்தனர். இது தான் “மன்னர் வகையறா” படத்தின் பட்ஜெட் எகிறியதற்கு காரணம்
           இதையெல்லாம் நான் வெளியில் சொன்னால் விமலின் மானம் கப்பல் ஏறிவிடும் என்பதால் அவரின் நலன் கருதி அமைதி காக்கிறேன். ஆனால் விமல் என் மீது மானநஷ்ட ஈடு வழக்கு தொடருவேன் என்பது காமெடியாக உள்ளது.
                 2016 ஆம் ஆண்டு அவர் கொடுத்த காசோலை வங்கியில் பணம் இல்லாமல் திரும்பிய போது, என் குடும்பத்தாரும், நண்பர்களும் வழக்கு தொடுக்க சொன்னபோது, நட்பின் காரணமாக நான் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. மாறாக விமலை அணுகி பணத்தை திருப்பித் தரும்படி கேட்டேன். அவரும் பட வெளியீடு சமயத்தில் தன்னை சந்தித்து பணம் பெற்று கொள்ளும்படி கூறினார்.
                     ” மன்னர் வகையறா ” படம் 2018 ஆம் ஆண்டு ஜனவரி 26 ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்ட சமயத்தில் அவரை சந்தித்தேன். ஜனவரி 23 ஆம் தேதி ரூ.35 லட்சம் தருவதாகவும், பின்னர் பிப்ரவரி 7 ஆம் தேதி ரூ.45 லட்சம் தருவதாகவும், அதனை நீங்களே என்னுடைய வங்கி கிளைக்கு சென்று RTGS செய்து கொள்ளுங்கள் என்று கூறி காசோலைகளையும், RTGS செய்வதற்கான வங்கி படிவங்களையும் வழங்கினார். ஆனால் 23 ஆம் தேதி நான் வங்கிக்கு சென்ற போது விமல் கணக்கில் பணம் இல்லை என்று கூறி திருப்பி அனுப்பி விட்டனர். விமலை தொடர்பு கொண்ட போது ஒரு வாரம் கழித்து வங்கிக்கு செல்லுங்கள் என்று கூறினார். ஆனால் மறுபடியும் ஏமாற்றம் தான் மிஞ்சியது.
              மனம் தளராமல் மறுபடியும் விமலை தொடர்பு கொண்ட போது ” களவாணி -2 ” படப்பிடிப்பில் இருப்பதாகவும், படப்பிடிப்பு முடிந்து சென்னை வந்தவுடன் அழைப்பதாகவும் கூறினார். ஆனால் விமலிடம் இருந்து எந்தவித அழைப்பும் வரவில்லை. இந்த அறிக்கையோடு விமல் பணம் பெறும் போது கையெழுத்திட்ட  டைரியின் பக்கத்தையும், RTGS செய்வதற்காக விமல் கொடுத்த ஆவணங்களையும் இணைத்துள்ளேன். எந்த விசாரணைக்கும் டைரியுடன் ஆஜராக நான் தயார். விசாரணையை சந்திக்க விமல் தயாரா?
Previous Post

Nenjam Marappathillai Movie Stills

Next Post

திரைப்பட நடிகர் மோகன் குமார் அரசியலில் களமிறங்குகிறார்

Next Post
திரைப்பட நடிகர் மோகன் குமார் அரசியலில் களமிறங்குகிறார்

திரைப்பட நடிகர் மோகன் குமார் அரசியலில் களமிறங்குகிறார்

Popular News

  • ஜீவாவின் ‘தகப்பன்’ ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு… ரசிகர்களிடம் அமோக வரவேற்பு!

    0 shares
    Share 0 Tweet 0
  • பிரைம் வீடியோ வழங்க, சசிகுமார் நடிக்கும் ‘வதந்தி சீசன் 2: தி மிஸ்டரி ஆஃப் மணி’ இணையத் தொடரின் பத்திரிகையாளர் சந்திப்பு.

    0 shares
    Share 0 Tweet 0
  • ‘கங்கணம்’ பட பர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்ட தயாரிப்பாளர் கலைப்புலி தாணு

    0 shares
    Share 0 Tweet 0
  • சூர்யாவின் ‘விஸ்வநாத் & சன்ஸ் ‘ படத்தின் இசை வெளியீட்டு விழா!

    0 shares
    Share 0 Tweet 0
  • கார்த்தி – இயக்குநர் மோகன் ராஜா கூட்டணியில் புதிய திரைப்படம்

    0 shares
    Share 0 Tweet 0

Recent News

கார்த்தி – இயக்குநர் மோகன் ராஜா கூட்டணியில் புதிய திரைப்படம்

கார்த்தி – இயக்குநர் மோகன் ராஜா கூட்டணியில் புதிய திரைப்படம்

August 4, 2026

சூர்யாவின் ‘விஸ்வநாத் & சன்ஸ் ‘ படத்தின் இசை வெளியீட்டு விழா!

August 4, 2026

ஜீவாவின் ‘தகப்பன்’ ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு… ரசிகர்களிடம் அமோக வரவேற்பு!

August 4, 2026

சாம் சி எஸ் இசையில் மிரட்டும் “ரத்தத்த தா” – டிமான்டி காலனி 3 முதல் பாடல் ரசிகர்களை கவர்ந்து வருகிறது!

August 4, 2026

விஸ்வநாத் & சன்ஸ் திரைப்படத்தின் ‘தி ஒன் ரூல்’ பாடலில் அனல் பறக்க விடும் சூர்யா

August 4, 2026

விஜய் ஆண்டனியின் உணர்வுபூர்வ குடும்ப நாடகமான நூறு சாமி ஆகஸ்ட் 7 முதல் தமிழ் ZEE5-ல் திரையிடப்படுகிறது

August 4, 2026
  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2025 Tamil2daynews.com.

error: Content is protected !!
No Result
View All Result
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்

© 2025 Tamil2daynews.com.