• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us
Tamil2daynews
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
Tamil2daynews
No Result
View All Result
Home சினிமா சினிமா செய்திகள்

பொங்கி வழியும் நகைச்சுவை கலந்த காதல் கதை ‘ரிலாக்ஸ்’..!

by Tamil2daynews
October 13, 2022
in சினிமா செய்திகள்
0
0
SHARES
13
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp
பொங்கி வழியும் நகைச்சுவை கலந்த காதல் கதை ‘ரிலாக்ஸ்’..!
ட்ரீம் ஸ்டோரி சினிமா கம்பெனி என்ற பட நிறுவனம் தயாரிக்கும் முதல் பத்திற்கு ரிலாக்ஸ் என்று பெயரிட்டுள்ளனர்.
கவிஞர் வாலி மற்றும் தயாரிப்பாளர் இப்ராஹிம் ராவுத்தர் ஆகியோரிடம் உதவியாளராக பணியாற்றியதோடு, ராவுத்தர் பிலிம்ஸ் தயாரித்த புரியாத ஆனந்தம் புதிதாக ஆரம்பம் என்ற படத்தை இயக்கிய தம்பி சையது இப்ராஹிம் என்ற ஸ்ரீ இந்த படத்தில் கதையின் நாயகனாக நடிக்கிறார்.
கதாநாயகி மற்றும் நடிகர் நடிகைகள் தேர்வு நடைபெற்று வருகிறது
கேடி பில்லா கில்லாடி ரங்கா, மெரினா போன்ற படங்களுக்கு ஒளிப்பதிவு செய்த விஜய் இந்த படத்திற்கு ஒளிப்பதிவு செய்கிறார்.
இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜிடம் உதவியாளராக பணியாற்றிய டேவி  சுரேஷ் இந்த படத்திற்கு இசையமைக்கிறார்.
பாடலாசிரியர் பழனி பாரதி அனைத்து பாடல்களையும் எழுதுகிறார்.
ஹிந்தியில் வெளியான திருட்டுப்பயலே 2 படத்திற்கு எடிட்டிங் செய்த ராம் சதீஷ் இந்த படத்திற்கு எடிட்டிங் செய்கிறார்.
பல வெற்றிப்பாடல்களுக்கு நடனம் அமைத்த தினேஷ் இந்த படத்திற்கு நான்கு பாடல்களுக்கு பல்வேறு விதமான நடன அமைப்புகளை தரவிருக்கிறார்.
பிரபல கலை இயக்குனர் S.S. மூர்த்தி இந்த படத்தின் கலை இயக்குனராக பணியாற்றுகிறார்.
தயாரிப்பு மேற்பார்வை – வேலுமணி
மக்கள் தொடர்பு – மணவை புவன்.
தயாரிப்பு – ட்ரீம் ஸ்டோரி சினிமா கம்பெனி.
இயக்குனர்கள் ரமணா, சுசீந்திரன் ஆகியோரிடம் இணை இயக்குனராக பல படங்களில் பணியாற்றிய பா. ஆனந்த்குமார் இந்தப் படத்தின் கதை, திரைக்கதை, வசனம், எழுதி இயக்குகிறார்.
படம் பற்றி இயக்குனர் பா. ஆனந்த்குமார் பகிர்ந்தவை…
இன்றைய பரபரப்பான வாழ்க்கை முறையில் தனக்காக, தன்னை சார்தவர்களுக்காக ஒவ்வொருத்தரும் ஏதோ ஒரு வகையில் ஓடிக்கொண்டே இருக்கிறோம் இறுதியில் எல்லோரும் எதிர்பார்ப்பது நிம்மதியான ஓய்வு ( ரிலாக்ஸ் ) அதுதான் இந்த படத்தின் கரு.
ஆறு அறிவு படைத்த எல்லா மனிதர்கள் அனைவரும் காமம், காதல் என்ற உணர்வுகளுடன் பிறக்கின்றனர். இக்கதையில் வரும் நாயகன் தன் வாழ்க்கையில் காதலுக்கும், காமத்திற்கும் இடமே இல்லை என்று வாழ்கிறான். ஒரு சூழலில் மூன்று பெண்கள் அவன்மீது காதல் வயப்படுகின்றனர். ஆனால் அவனுக்கு பெற்றோர்கள் வேறொரு பெண்ணை திருமணம் செய்துவைக்க முடிவு செய்கிறார்கள். இந்த சூழ்நிலையில் பதற்றமில்லாமல் எப்படி ரிலாக்ஸாக முடிவு செய்கிறான் என்பதை முழு நகைச்சுவை கலந்து குடும்பப்பாங்கான, ஜனரஞ்சக படமாக உருவாக்க உள்ளோம்.ஸ்டெஸ், டென்ஷன்களோடு சுற்றித்திரியும் இன்றயை இளைஞர்களுக்கு இந்த படம் நிச்சயமாக ரிலாக்ஸாக இருக்கும்.படப்பிடிப்பு  வயநாடு, காசர்கோடு, மூணாறு போன்ற  இடங்களில் நடைபெற உள்ளது.
Previous Post

உண்மைச் சம்பவத்தை அடிப்படையாக கொண்டு உருவாகும் படம் ” வந்திய தேவன் மீது P C R வழக்கு “

Next Post

தென்கொரிய திரைப்பட விழாவில் சிறந்த திரைப்பட விருது பெற்ற “சாட் பூட் த்ரி” தமிழ் திரைப்படம் பற்றிய கொரிய தமிழ்ச் சங்கத்தின் செய்தி குறிப்பு

Next Post

தென்கொரிய திரைப்பட விழாவில் சிறந்த திரைப்பட விருது பெற்ற "சாட் பூட் த்ரி" தமிழ் திரைப்படம் பற்றிய கொரிய தமிழ்ச் சங்கத்தின் செய்தி குறிப்பு

Popular News

  • வாரி வாரி பாடல் மூலம் ரசிகர்களை கவர்ந்த பாப் நட்சத்திர பாடகி தீ (DHEE)

    0 shares
    Share 0 Tweet 0
  • ஏஜிஎஸ் என்டர்டெயின்மென்ட் கல்பாத்தி எஸ். அகோரம், கல்பாத்தி எஸ். கணேஷ், கல்பாத்தி எஸ். சுரேஷ் தயாரிப்பில் சுபாஷ் கே ராஜ் இயக்கத்தில் ‘ஆக்ஷன் கிங்’ அர்ஜுன், அபிராமி, பிரீத்தி முகுந்தன் நடிக்கும் குடும்ப ஆக்ஷன் திரில்லர் ‘பிளாஸ்ட்’

    0 shares
    Share 0 Tweet 0
  • ‘ஆதி புருஷ்’ படத்தில் பிரபாஸுக்கு வில்லனாக சைஃப் அலி கான் ஒப்பந்தம்!

    0 shares
    Share 0 Tweet 0
  • ‘இரண்டு வானம்’ திரைப்படத்தின் உணர்ச்சிமிகு பயணத்தை வெளிப்படுத்தும் கவித்துவமான ‘வெள்ளிச்சுடரே’ பாடல்!

    0 shares
    Share 0 Tweet 0
  • குற்றம் கடிதலைத் தொடர்ந்து மிகுந்த எதிர்பார்ப்புகளுடன் வரவிருக்கும் ‘குற்றம் கடிதல் 2!

    0 shares
    Share 0 Tweet 0

Recent News

வாரி வாரி பாடல் மூலம் ரசிகர்களை கவர்ந்த பாப் நட்சத்திர பாடகி தீ (DHEE)

May 2, 2026

ஏஜிஎஸ் என்டர்டெயின்மென்ட் கல்பாத்தி எஸ். அகோரம், கல்பாத்தி எஸ். கணேஷ், கல்பாத்தி எஸ். சுரேஷ் தயாரிப்பில் சுபாஷ் கே ராஜ் இயக்கத்தில் ‘ஆக்ஷன் கிங்’ அர்ஜுன், அபிராமி, பிரீத்தி முகுந்தன் நடிக்கும் குடும்ப ஆக்ஷன் திரில்லர் ‘பிளாஸ்ட்’

May 2, 2026

‘இரண்டு வானம்’ திரைப்படத்தின் உணர்ச்சிமிகு பயணத்தை வெளிப்படுத்தும் கவித்துவமான ‘வெள்ளிச்சுடரே’ பாடல்!

May 2, 2026

பிரைம் வீடியோ தனது தமிழ் ஒரிஜினல் சஸ்பென்ஸ் டிராமா சீரிஸான ‘எக்ஸாம்’ (Exam) சீரிஸின் உலகளாவிய வெளியீட்டு தேதியை அறிவித்துள்ளது — மே 15 முதல் ஸ்ட்ரீமாகிறது

May 2, 2026

காஜல் அகர்வால் மற்றும் ஷ்ரேயாஸ் தல்படே நடிக்கும் ‘தி இந்தியா ஸ்டோரி’ ஜூலை 24ஆம் தேதி வெளியாகிறது!

May 2, 2026

நடிகர் சூர்யாவின் ‘கருப்பு ‘ திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா

May 2, 2026
  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2025 Tamil2daynews.com.

error: Content is protected !!
No Result
View All Result
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்

© 2025 Tamil2daynews.com.