• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us
Tamil2daynews
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
Tamil2daynews
No Result
View All Result
Home சினிமா சினிமா செய்திகள்

பீப்பிள் மீடியா ஃபேக்டரி, தயாரிப்பாளர் T.G விஸ்வபிரசாத் வழங்கும் ’டிக்கிலோனா’ புகழ் இயக்குநர் கார்த்திக் யோகி இயக்கத்தில் சந்தானம் நடிக்கும் ’வடக்குபட்டி ராமசாமி’ படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்தது

by Tamil2daynews
April 4, 2023
in சினிமா செய்திகள்
0
0
SHARES
5
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

பீப்பிள் மீடியா ஃபேக்டரி, தயாரிப்பாளர் T.G விஸ்வபிரசாத் வழங்கும் ’டிக்கிலோனா’ புகழ் இயக்குநர் கார்த்திக் யோகி இயக்கத்தில் சந்தானம் நடிக்கும் ’வடக்குபட்டி ராமசாமி’ படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்தது

‘வடக்குபட்டி ராமசாமி’ திரைப்படம் குறித்தான அறிவிப்பு வெளியான நாளிலிருந்தே இந்தப் படம் குறித்து ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. நடிகர் சந்தானம்-இயக்குநர் கார்த்திக் யோகியின் முந்தைய ‘டிக்கிலோனா’ படத்தின் பிளாக்பஸ்டர் வெற்றியும் இதற்கு முக்கியக் காரணம். இப்படம் அதன் எண்டர்டெயின்மெண்ட் விஷயங்களுக்காக பார்வையாளர்களின் பாராட்டுகளைப் பெற்றது. இப்போது, இந்தக் கூட்டணி மற்றொரு வசீகரிக்கும் பொழுதுபோக்கு அம்சங்கள் நிறைந்த, அனைத்து விதமான பார்வையாளர்களுக்கும் பிடித்த வகையிலான அடுத்தக் கதையுடன் வந்திருக்கிறார்கள். தற்போது படத்தின் படப்பிடிப்பை முடித்துவிட்டதாக படக்குழுவினர் மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளனர். ஒரு நாள் கூட இடைவெளி இல்லாமல் தொடர்ச்சியாக 63 நாட்கள் படப்பிடிப்பை நடத்தி புதிய சாதனையை தீவிர முயற்சியுடன் படக்குழு சாத்தியப்படுத்தியுள்ளது. தற்போது போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. மேலும் படத்தின் ஆடியோ, டிரெய்லர் மற்றும் உலகளவில் திரையரங்கு வெளியீடு குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியிடப்படும்.
Imageசந்தானம் மற்றும் மேகா ஆகாஷ் நடிக்கும் இப்படத்தில் நடிகர் தமிழ் வில்லனாக நடிக்கிறார். ஜான் விஜய், எம்.எஸ்.பாஸ்கர், ரவிமரியா, மாறன், மொட்ட ராஜேந்திரன், நிழல்கள் ரவி, சேசு, இட் ஈஸ் பிரசாந்த், ஜாக்குலின் மற்றும் பலர் நடித்துள்ளனர்.

ஷான் ரோல்டன் இசையமைக்கும் இந்தப் படத்திற்கு தீபக் ஒளிப்பதிவு செய்கிறார். மேலும், சிவ நந்தீஸ்வரன் படத்தொகுப்பாளராகவும், ராஜேஷ் கலை இயக்குநராகவும், திரு.வி.ஸ்ரீ.நட்ராஜ் கிரியேட்டிவ் புரொடியூசராகவும், ஷெரீப் நடன இயக்குநராகவும் உள்ளனர். ’வடக்குப்பட்டி ராமசாமி’ படத்தை T.G விஸ்வபிரசாத் தயாரிக்க விவேக் குச்சிபோட்லா இணைந்து தயாரித்துள்ளார்.

Previous Post

லைகா புரொடக்‌ஷன்ஸ் சுபாஸ்கரன், இயக்குநர் விஜய் இயக்கத்தில் அருண் விஜய் நடித்துள்ள ‘அச்சம் என்பது இல்லையே’ – மிஷன் சாப்டர் 1 படத்தின் உரிமத்தை பெற்றுள்ளார்

Next Post

ஷூட்டிங் முதல் ரிலீஸ் வரை – ஒரே நாளில் வெளியாகி சாதனை படைக்கும் “பிதா” திரைப்படம்;

Next Post

ஷூட்டிங் முதல் ரிலீஸ் வரை - ஒரே நாளில் வெளியாகி சாதனை படைக்கும் “பிதா” திரைப்படம்;

Popular News

  • சென்னையில் நடைபெற்ற “எங்கள் தங்கம்” படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு!

    0 shares
    Share 0 Tweet 0
  • ‘அன்பே டயானா’ ஜூலை 17, 2026 உலகம் முழுவதும் ரிலீஸ் – அட்டகாசமான போஸ்டருடன் வெளியீட்டு அறிவிப்பு !

    0 shares
    Share 0 Tweet 0
  • ‘கடினமான நாட்களும் மதிப்புமிக்க பாடங்களாக அமைகின்றன’- ஸ்ருதிஹாசன்

    0 shares
    Share 0 Tweet 0
  • ஜீவி பிரகாஷ் நடிப்பில் உருவாகியுள்ள “வெக்கை” திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது.

    0 shares
    Share 0 Tweet 0
  • டார்க் ஜெயண்ட் – விமர்சனம்

    0 shares
    Share 0 Tweet 0

Recent News

மக்கள் தலைவா – விமர்சனம்

மக்கள் தலைவா – விமர்சனம்

June 20, 2026

சுற்றுச்சூழல் பாதுகாப்பு என்பது அரசாங்கத்தின் கடமை மட்டுமல்ல, மக்களாகிய நம் ஒவ்வொருவரின் பொறுப்பும் கடமையும்… நடிகர் சௌந்தரராஜா

June 20, 2026

சென்னையில் நடைபெற்ற “எங்கள் தங்கம்” படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு!

June 20, 2026

‘அன்பே டயானா’ ஜூலை 17, 2026 உலகம் முழுவதும் ரிலீஸ் – அட்டகாசமான போஸ்டருடன் வெளியீட்டு அறிவிப்பு !

June 20, 2026

நடிகர் சனந்த் நடிக்கும் ‘ஹார்ட்டின் ‘ படத்தின் இசை மற்றும் முன்னோட்ட வெளியீட்டு விழா

June 20, 2026

‘கடினமான நாட்களும் மதிப்புமிக்க பாடங்களாக அமைகின்றன’- ஸ்ருதிஹாசன்

June 20, 2026
  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2025 Tamil2daynews.com.

error: Content is protected !!
No Result
View All Result
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்

© 2025 Tamil2daynews.com.